2014

2013 எப்படி இருந்தது என்று நிறைய நண்பர்கள் போஸ்ட் செய்கிறார்கள். பொதுவாக வியாபாரத்துறையினருக்கு நிதியாண்டு தான் முக்கியமாய் இருக்கும். எனக்கும். ஏனென்றால் இரண்டு காரணங்கள். முதலாவதாக அலுவலக ரீதியாக புது ஆண்டு ஆரம்பம் என்பதால், இரண்டாவதாக இன்கிரீமெண்ட் என் ஊதியம் அதிகரிப்பது.

பொத்தம்பொதுவாகப் பார்த்தால் ஊதிய விகிதம் மற்றும் பொருளாதார விகிதாச்சார அடிப்படையில் முந்தைய வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் நல்ல முன்னேற்றம் போல் தெரிந்தது. ஆனால் பெட்ரோல், காய்கறி மற்றும் ஆடை என இன்ன பிற செல்வுகளும் ஊதிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகி ஒரு சமத்துவத்தை கட்டி விட்டன. ஆதலாலேயே Q.O.L என்றழைக்க்ப்படுகிற வாழ்க்கைத்தரம் உயரவில்லை.
ஊதிய உயர்வு மட்டுமே நமது பொருளாதார முன்னேற்றமாய் கருதப்படாது. வருடத்தின் அல்லது ஒரு மாதத்தின் வரவு செலவு பேலண்ஸ் சீட் செய்து பார்த்தோம் என்றால் வரும் விடை சிவப்பு விளக்கில் இருக்குமா இல்லை பச்சை விளக்கில் இருக்குமா என்பதே பொருளாதார நிலை.

சென்ற வருடத்தைப் பற்றி பேச ஆரம்பித்ததும் முதன் முதலாகவே பொருளாதாரத்தைப் பற்றி எழுதுகிறான். பணம் மட்டும் வாழ்க்கை இல்லை. எனச் சிறியவர்கள் சொல்வார்கள். பணம் இருக்கப்போய் தான் நெட் டுக்குக் காசு கொடுத்தும், கம்ப்யூட்டருக்கும் காசு கொடுத்தும் எழுத முடிகிறது.

இரண்டாவதாக என்னுடைய எமோசனல் இண்டெலிஜென்ஸ் . கொஞ்சம் பக்குவப்பட ஆரம்பித்திருக்கிறது. யாருக்கும் கட்டுப்படாத மதயானை போலிருக்கும் மூளையை கொஞ்சம் கொஞ்சமாய் பக்குவப்படுத்தி...உடனே முந்திரிகொட்டை போல் முடிவெடுக்காதே என்றெல்லாம் தாஜா பண்ணி ஒரு மாதிரியாய் கட்டுக்குள்ளிருக்கிறது. இன்னும் பக்குவப்படவேண்டும்.


சவால்களுக்குப் பயப்படும் மனம் இன்னும் அப்படியே இருக்கிறது என்று சொல்லிவிடமுடியவில்லை. பிரச்சினைகளுக்கு உள்ளே சென்று அதைத் தீர்க்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. புது பிரச்சினைகள் எழுந்தால் ஏற்படும் ஒரு நடுக்கம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. பழைய வருடங்களில் இது மோசமானதாய் இருந்ததைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் சிரிப்பாய் வருகிறது.


வெட்டிப் பேச்சுகளுக்கும், வம்புகளுக்கும் போவது குறைந்திருக்கிறது. இன்னும் முழுதும் தீர வேண்டும்....

நிறைய படிக்க வேண்டும் . சென்ற ஆண்டில் படித்ததைப் பார்க்கையில் அறிவுக்குப் பத்தாது என்றே தோன்றுகிறது. இந்நினைப்பு எப்பொழுதும் இருக்க வேண்டும் .


கவிதைகளை கவிதைகள் போல் எழுத கற்றுக்கொள்ள வேண்டும். (இனிமேலாவது...?



நிறைய எழுதுவதற்கு இது ஆரம்பமாய் இருக்க வேண்டும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....