சாத்தியப்படாத இரவு

அது
சாத்தியப்படாத
இரவாயிருக்கட்டும்...

எல்லாக் கவிதைகளுக்கும்
சந்திப்பிழைகளைச் சொல்லிக்கொடுத்த
ஒரு கவிதையின் இரவலைத் தராத-
அது
சாத்தியப்படாத
இரவாயிருக்கட்டும்...

தோளில் சாய்ந்துகொண்டு
விண்மீன்களை எண்ணிக்கொள்ளும்
ஒரு நிலாவைத் தவறவிட்ட-
அது
சாத்தியப்படாத
இரவாயிருக்கட்டும்....

கை விரல்களின் கோர்வைக்குள்
இரவின் குளிரை
வெம்மையூட்டிய
தீயின் தாகம் தகர்த்த-
அது

சாத்தியப்படாத
இரவாயிருக்கட்டும்....

நீ வந்துபோகும்
சந்தோசக்குமிழிகளை
உடைத்துப்பார்க்கும்-

அது
சாத்தியப்படாத
இரவாவேயிருக்கட்டும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....