அவ்வளவு அழகானதல்ல

அவ்வளவு அழகானதல்ல
இந்நெடும் பயணம்...
பூங்கொத்துகளுக்கிடையே
தடித்த முள் கொண்டு
கை குலுக்கும் கணங்களைச்
சுமந்து செல்லுதல்....

உதட்டுச்சாயம் மட்டுமே
தெரியும்
வெற்றுச் சிரிப்புகளுக்குப்
புன்முறுவல் தரும்
சிரிப்புக் கணங்களைச்
சுமத்தல்...

தோள் சாயும்
பசுவின் வேடம் கலைக்கும்
புலிகளுக்கு
மன்னிப்புத் தீனிகளைச்
சுமக்கும்.....

இந்நெடும் பயணம்
அவ்வளவு அழகானதல்ல.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....