இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

களைத்துப்போயிருக்கிறாய்

மிகவும் களைத்துப்போயிருக்கிறாய். எப்பொழுதும் சரிசெய்யப்படும் நெற்றிமுடியை நெடுநேரத்திற்கு ஒழுங்கு செய்யவில்லை.. பெரும் ஓவியத்தை வரைந்து முடித்த முந்தைய நாள் கண்களின் அயற்சியில் இன்னும் கொஞ்சம் வண்ணம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. எந்தத் தூரிகையுமற்று அவை ஒவ்வொரு சிமிட்டலிலும் தீற்றல் பெறுகின்றன.. யாரேனுமொருவர் மடிசாய்த்து நெற்றிமுடி கோரி தூங்கவைக்கலாம் என்றபடிக்கு மிகவும் களைத்துப்போயிருக்கிறாய்.. ஒரு நல்ல கவிதையையொத்த ஒரு காஃபி இந்நேரம் உனக்குத் தேவைப்படலாம். இப்படியான ஒரு களைத்த தருணத்தில் அப்படித்தான் என் கைகளைப் பற்றிக்கொண்டு கூறியிருந்தாய்.. இரவெல்லாம் மழைவடிந்த சுவற்றுப் பச்சை பாசியென ஈரம்பொதிந்த ப்ரியங்களை மறைக்கும் திராணியற்று களைத்துப் போயிருக்கிறாய்.. ஞாபகங்களை மீட்டெடுக்கும் தருணங்களில் கூட ஆசுவாசத்தைக் காட்டாத களைத்துப்போன அவசரத்தின் வானத்தில் ஒரு பிடிவாதப்பறவை தன்

செவலை..

கிபி 1995ல் மதுரையோட அவுட்டர் ஏரியால குடிபோனோம். முதன் முதலில் வீட்டுக்கு வந்த நண்பனொருத்தன், இது மதுரையா சிவகங்கையானு கேட்டான். அம்புட்டு அவுட்டர். அண்ணா நகர் சுகுனாஸ்டோர் தான் பக்கத்துல இருக்குற பஸ் ஸ்டாப் . பக்கம்னா மெதுவா நடந்து வந்தா 15 நிமிஷம் ஆகும். வேகமா நடந்தா 12 நிமிஷம் ஆகும். அந்த 12 நிமிஷம் டார்கெட் வச்சு நடந்தேன்னுவைங்க, டாக்குமென்டரில காந்தி உப்பு சத்யாகிரகத்துக்கு வேகமா நடக்குற மாதிரி காமிப்பாய்ங்கல அந்தமாதிரி இருக்கும். இதுல எங்க வீட்ட பாத்துட்டே ரெண்டு மூணு நிமிஷம் நடக்கனும். முழுக்க காலி பிளாட்டுகள். அப்ப பஸ்லாம் எங்க ஏரியாக்குள்ள இல்ல. ஆட்டோவும் இருக்காது. ஏன் தெரு லைட்டு கூட இருக்காது. கொஞ்சம் ஈ, காக்கா, பாம்பு, நாய் அப்புறம் நாங்க இதான் எங்க ஏரியா. அப்ப நான் பதினொண்ணாவது படிச்சிட்டு இருந்தேன். ஸ்கூல் முடிச்சிட்டு ட்யூஷன் லாம் முடிச்சிட்டு வர நைட்டு எட்டாயிரும். ஊரே அடங்கிரும். அப்பத்தான் செவலை ய தெரியும். செவலை ஒரு நாய். வீட்டு நாய். அதுனால வீட்டுக்குள்ளேயே இருக்காது. தெருவில தான் நிக்கும்.

சானிட்டைசரும் வரி உயர்வும்....ஒரு பார்வை

சானிட்டைசருக்கு வரி விகிதம் 12 லிருந்து 18 ஆக அதிகரித்திருக்கிறது. இது மக்கள் மீது திணிக்கும் வன்மம் அப்படி என்று சில பொங்கல் பதிவுகள் பார்க்கிறேன். நண்பர்கள் அப்படி வருத்தப்படுவதும், அரசின் அராஜகப்போக்கைப் பார்த்து கேள்வி கேட்பதும் மகிழ்ச்சியே. அது வரவேற்கத்தக்கதும் ஆகும். ஆனால் சானிட்டைசருக்கு வரி தேவையா என்பதே என் நிலைப்பாடு. இருக்கட்டும். இப்பொழுது 12 லிருந்து 18 வரியாக மாற்றியதில் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சில நண்பர்கள் பதிவிட்டிருந்தார்கள். பிஜேபியின் கைங்கர்யம் , மக்கள் தாங்கள் பாதிக்கப்படுவதைத் தெரியாமல் பார்த்துக்கொள்ளூம். எப்பொழுது நாம் பாதிக்கப்படுகிறோம் என்று தெரிகிறதோ அன்று பாதிப்பிலிருந்து மீள முடியாத் துயரத்தில் இருப்போம். இந்த விசயத்தை எனக்குத் தெரிந்த வகையில் கூறுகிறேன். மார்ச் மாதத்தில் சானிட்டைசர் க்குக் கொரோனாவின் ந்யூக்ளியஸ் உடையும் என்பதால் அதன் விற்பனை அதிகமாகியது. இதனால் 50 ml pack mrp 70 ரூபாய் இருந்தது. மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டது. அவர்கள் எப்பொழுதும் அடக்கவிலை மற்றும் மக்கள் வாங்கும் விலை இரண்டை மட்டும் தான் பார்ப்பார்