சானிட்டைசரும் வரி உயர்வும்....ஒரு பார்வை
சானிட்டைசருக்கு வரி விகிதம் 12 லிருந்து 18 ஆக அதிகரித்திருக்கிறது. இது மக்கள் மீது திணிக்கும் வன்மம் அப்படி என்று சில பொங்கல் பதிவுகள் பார்க்கிறேன். நண்பர்கள் அப்படி வருத்தப்படுவதும், அரசின் அராஜகப்போக்கைப் பார்த்து கேள்வி கேட்பதும் மகிழ்ச்சியே. அது வரவேற்கத்தக்கதும் ஆகும். ஆனால் சானிட்டைசருக்கு வரி தேவையா என்பதே என் நிலைப்பாடு. இருக்கட்டும். இப்பொழுது 12 லிருந்து 18 வரியாக மாற்றியதில் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சில நண்பர்கள் பதிவிட்டிருந்தார்கள். பிஜேபியின் கைங்கர்யம் , மக்கள் தாங்கள் பாதிக்கப்படுவதைத் தெரியாமல் பார்த்துக்கொள்ளூம். எப்பொழுது நாம் பாதிக்கப்படுகிறோம் என்று தெரிகிறதோ அன்று பாதிப்பிலிருந்து மீள முடியாத் துயரத்தில் இருப்போம்.
இந்த விசயத்தை எனக்குத் தெரிந்த வகையில் கூறுகிறேன்.
மார்ச் மாதத்தில் சானிட்டைசர் க்குக் கொரோனாவின் ந்யூக்ளியஸ் உடையும் என்பதால் அதன் விற்பனை அதிகமாகியது. இதனால் 50 ml pack mrp 70 ரூபாய் இருந்தது. மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டது. அவர்கள் எப்பொழுதும் அடக்கவிலை மற்றும் மக்கள் வாங்கும் விலை இரண்டை மட்டும் தான் பார்ப்பார்கள்.இடையில் carrying & forward , wholesalers, retailers எல்லாம் எப்படி நாசமாய் போனால் என்ன என்று தான் இருப்பார்கள்.
அப்படிச் செய்ததில் 100ml pack mrp 50 ரூபாய்க்கு மேல் வைத்தால் நடவடிக்கை என்றது. பல தயாரிப்பாளர்கள் மார்ஜின் இல்லை என நிறுத்த மார்ச் கடைசி ஏப்ரல் முதல் வாரத்தில் பயங்கரத் தட்டுப்பாடு நிலவியது. பிறகு எதையாவது விற்கவேண்டுமென காஸ்மெட்டிக் தயாரிப்பாளர்கள் சானிட்டைசரைத் தயாரித்து மார்க்கெட்டில் உலவவிட்டனர்.
இதில் mrp 50 என நிர்ணயித்து லைசென்ஸ் வாங்கும்பொழுதே hsn கோட் குறிப்பிட்டுத்தான் வாங்குகிறார்கள். (Harmonized System Nomenclature)
ஒவ்வொரு மூலப்பொருளுக்கும் ஒரு hsncode கொடுத்து அதற்கு வரி ஒதுக்கப்பட்டது.
உதாரணத்திற்கு உணவுப்பொருள் என்றால் 18 சதவீதம் , சர்வீஸ் என்றால் 5 சதவீதம் என்று ஒவ்வொரு மூலப்பொருளுக்கும் வரி விதிக்கப்பட்டது.
ஜிஎஸ்டியின்போதே அது வழக்கத்திற்கு வந்துவிட்டது.
அப்படி நிறைய நிறுவனங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட மூலப்பொருட்களை நிர்ணயித்து 12 சதவீதம் என ஒதுக்கப்பெற்று அரசிடம் அனுமதி பெற்று விற்பனையும் செய்து gst யும் கட்டிவிட்டார்கள். ஏன் அப்பொழுது 12 சதவீதம் தவறு என அரசு பார்க்கவில்லையா.
ஒரு மூலப்பொருளைத் தயாரிக்கும்பொழுதும் குறிப்பாக மருந்தில் , அதை விளைபொருளாக மாற்றும்பொழுதும் இன்வாய்சில் hsn code இடம்பெறவேண்டும் என்று குறிக்கிறார்கள். gst file ஜிஎஸ்டி தாக்கல் செய்யும்பொழுது கூட hsn code வாரியாகத்தான் விற்பனை வரும். அதை எல்லாம் பார்த்திருக்கமாட்டார்களா? பார்த்திருப்பார்கள். 12லிருந்து 18 ஆக்கக் காரணம் வேண்டும். சாமான்யனிடமிருந்து புடுங்கி கார்ப்பரேட்டுகளுக்குத் தெளிப்பதும் ஃபாஸிசம் தான்.
அது தனிக்கதை. விடுங்கள்.
இதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பவர்களுக்கு, அதாவது 12 சதவீதம் வரி இருந்தபோதும் mrp 50 (100ml) தான். இப்பொழுது 18 சதவீதம் இருந்தபோதும் mrp 50 தான்.
ஏனென்றால் மருந்துபொருட்கள் வரி உட்பட(inclusive of taxes) என்று தான் விற்பனைக்கு வருகின்றன.
நீங்கள் 12 சதவீத வரியில் வாங்கியபொழுது நீங்கள் சானிட்டைசருக்குக் கட்டிய பணம் 44.64 ரூபாய் மட்டுமே. மீதி 5.36 ரூபாய் நாட்டுக்கு வரியாய் தருகிறீர்கள்.
நீங்கள் 18 சதவீத வரியில் வாங்கும்பொழுது நீங்கள் சானிட்டைசருக்குக் கட்டப்போகும் பணம் 42.37 ரூபாய், மீதி உங்களின் தேசபக்தியில் 7.63 ரூபாய் தெண்டமாய் கட்டுகிறீர்கள்.
இதில் mrp மாறாததால் மக்களுக்கு இந்தப் பாதிப்பு இல்லை.
பிரச்சினை தயாரிப்பாளருக்குத்தான். சிறு குறு தயாரிப்பாளர்கள் நலிவார்கள்.
அவர்களை நம்பிய எங்களைப் போன்ற விற்பனையாளர்கள் காணாமல் போவோம்.
அதிக டர்னோவர் நிறுவனங்கள் சமாளிக்கும் சுருக்கமாக
வலுத்தது ஜெயிக்கும்.
டெட்டால், லைஃபாய், கேடிலா, இப்படியான வலுவானது இன்னும் ஜெயிக்கும்.
gst நாம் கட்டும்பொழுது அது இரண்டாகப் பிரியும்.
S gst (மாநிலத்திற்கு)
C gst (மத்திய அரசிற்கு).
12 சதவீதம் அதாவது நீங்கள் நான் மேற்சொன்னபடி 100 ml சானிட்டைசர் பாட்டில் வாங்குவதன் மூலமாக 5.36 வரி கட்டுகிறீர்கள் என்று சொன்னேனா, அதில் 2.68 எடப்பாடிக்கும் 2.68ஐ மோடிக்கும் தருகிறீர்கள்.
இப்பொழுது மோடி எடப்பாடிக்குத் தர மறுப்பதாக ஒரு நிலுவைத்தொகை செய்திகளில் சொல்கிறார்களே , அது இப்படி நீங்கள் சானிட்டைசர் போன்று சிறுக சிறுக வாங்கிய 2.68 ரூபாய் தான். உங்கள் ரூபாய். உங்கள் மாநிலம் தான். ஆனால் மத்திய அரசு புடுங்கியுள்ளது. அதை இப்பொழுது உங்கள் ஊரின் முன்னேற்றத்திற்குத் தாருங்கள் என்றால் தரமாட்டோம் என் கிறது.
ஜி எஸ் டி அமல்படுத்தப்பட்ட காலத்தில் இப்படித்தான் எழுதியிருந்தேன். பிஜேபி ஒரு துறையில் செய்யும் அராஜகத்தில் அந்தத் துறை தான் நேரடியாகப் பாதிக்கப்படும் மற்ற துறை மறைமுகமாகப் பாதிக்கப்படும்.
சானிட்டைசரை அடுத்து ஒரு சாமான்யன் வாங்கப்போகும்பொழுது mrp யைச் சோதிப்பான். அதே 100ml bottle Rs 50 என்று தான் இருக்கும். 12 சதவீதம் 18 சதவீதம் அவனுக்குப் புரியாது. புரிந்தாலும் தான் ஊமக்குத்தாக் குத்தப்பட்டிருப்பதைத் தெரிந்துகொள்ள மூன்று வருடங்கள் ஆகும்.
பொதுமக்களுக்கு இது புரிவதற்குள் வேறொரு பிரச்சினை வந்துவிடும்.
ஒரே பிரச்சினையின் கீழ் எல்லாத்துறை நிபுணர்களையும் மக்களையும் ஒருங்கே குவியவிடாமல் பிஜேபி வெற்றி காண்கிறது. நாம் தான் சங்கி என்று கிண்டல் செய்துகொண்டிருக்கிறோம். அவர்கள் அப்படி இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக