பேராசிரிய. கு. ஞானசம்பந்தன் உரையிலிருந்து எழுதப்பட்டது.
உறவுகளில் உயர்ந்த உறவு அம்மா! அம்மா என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை இல்லை. அம்மா என்ற வார்த்தையில் உடல், உயிர் என எல்லாம் அடங்கும். எடுத்துக்காட்டாக " அம்மா" என்ற வார்த்தையில் 'அ' என்பது உயிர் எழுத்து 'ம்' என்பது மெய் எழுத்து 'மா' என்பது 'ம்+ஆ' உயிரும் மெய்யும் சேர்ந்த உயிர்மெய் எழுத்து. அம்மா என்பவள் நமக்கு உயிரைத் தருவதால் உயிரெழுத்து. நம் மெய்யாய் இருப்பதால் மெய் எழுத்து. இவ்வாறு உயிரும் உடம்புமாய் பாலூட்டி வளர்ப்பதால் உயிர்மெய் எழுத்து. உலகத்தை வெறுக்கும் துறவிகள் கூட அம்மா மீது பாசம் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக பட்டினத்தார் மற்றும் ஆதிசங்கரரையும் சொல்லலாம். ஆதிசங்கரர் ஆன்மீகப் பாதையில் ஒரு துறவியாக எங்கெங்குச் சென்றாலும், அம்மா மரணமடைந்ததும் தான் பிறந்த ஊரான 'காலடி' க்கு வந்தார். அதே போல் பட்டினத்தாரும் அவருடைய தாய் இறந்ததைக் கேள்விபட்டதும், தன் சொந்த ஊருக்கு விரைகிறார். அங்கு அவருடைய அம்மாவை விறகுகளை அடுக்கி எரிக்கச் செய்கிறார்கள். ஆனால் பட்டினத்தாரோ - 'என் அம்மாவின் உடம்பு மிகவும் ...