இடுகைகள்

கொழுப்பு

மாரடைப்பு ஒரு மரணத்தை விழுங்கியிருக்கிறது. மாரடைப்பு என்பது என்ன... அதிலிருந்து தப்பிக்க வழி என்ன... இதெல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். தெரியாமலிருந்தாலும் இனிமேலாவது மருத்துவரைச் சந்தித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இருந்தாலு சில எளிய முறைகள் உள்ளன. உங்கள் உயரம் என்ன... உங்கள் எடை என்ன... உயரத்திற்கேற்ற எடை இருக்கிறதா.... உதாரணத்திற்கு உங்கள் உயரம் 165 செமீ. என வைத்துக்கொள்வோம். உங்கள் எடை 65கிலோவில்ருந்து 68 இருக்கலாம். இது தான் மிகச்சரியான ஆரோக்கியமான சமநிலை. இல்ல....அவ்வளவு மெலிஞ்சுட்டா..நல்லாருக்காது...பாக்குறவங்க நம்மள பாத்து " என்னப்பா இப்படி மெலிஞ்சுட்ட னு சொல்றது கஷ்டமாருக்கு" இப்படிலாம் பேசுனீங்கனா...நீங்க நெஞ்ச பிடிச்சு உட்காருறப்ப எவனும் கூட வரமாட்டான். (இது என் பஞ்ச்) இப்பொழுது 30 வயதுகாரர்களுக்குக் கூட சர்க்கரை வியாதி, மாரடைப்பு வருகிறது. முதலில் உடல்நிலையைப் பொறுத்தவரை நாம் எப்படி யிருக்கிறோம் என்பதை முதலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். உடல் எடை உயரத்திற்கேற்றவாறில்லாம் கூடுதலாக இருந்தால் லிபிட் டெஸ்ட் எடுத்துப் பார்க்கவேண்டும். அதாவது கொழுப்பு. உடல்...

பேராசிரிய. கு. ஞானசம்பந்தன் உரையிலிருந்து எழுதப்பட்டது.

உறவுகளில் உயர்ந்த உறவு அம்மா! அம்மா என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை இல்லை. அம்மா என்ற வார்த்தையில் உடல், உயிர் என எல்லாம் அடங்கும். எடுத்துக்காட்டாக " அம்மா"  என்ற வார்த்தையில்   'அ'  என்பது உயிர் எழுத்து 'ம்'   என்பது மெய் எழுத்து 'மா' என்பது  'ம்+ஆ'  உயிரும் மெய்யும் சேர்ந்த உயிர்மெய் எழுத்து. அம்மா என்பவள் நமக்கு உயிரைத் தருவதால் உயிரெழுத்து. நம் மெய்யாய் இருப்பதால் மெய் எழுத்து. இவ்வாறு உயிரும் உடம்புமாய் பாலூட்டி வளர்ப்பதால் உயிர்மெய் எழுத்து. உலகத்தை வெறுக்கும்  துறவிகள் கூட அம்மா மீது பாசம் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக பட்டினத்தார் மற்றும் ஆதிசங்கரரையும் சொல்லலாம். ஆதிசங்கரர் ஆன்மீகப் பாதையில் ஒரு துறவியாக எங்கெங்குச் சென்றாலும், அம்மா மரணமடைந்ததும் தான் பிறந்த ஊரான 'காலடி' க்கு வந்தார். அதே போல் பட்டினத்தாரும் அவருடைய தாய் இறந்ததைக் கேள்விபட்டதும், தன் சொந்த ஊருக்கு விரைகிறார். அங்கு அவருடைய அம்மாவை விறகுகளை அடுக்கி எரிக்கச் செய்கிறார்கள். ஆனால் பட்டினத்தாரோ - 'என் அம்மாவின் உடம்பு மிகவும் ...
கழுத்துக்குக் கீழே வெள்ளைப் பூத்த காகம்.... புறாவைப் படைக்கப்போகும் கடைசித் தருணத்தில் பிரம்மன் செய்த சூத்திரத் தவறு அந்த காகம்.... நானும் அதுவும் பேசிக்கொள்ள ஒரு குவளைத் தண்ணீர் அலைவரிசை..... இன்றைக்கு மட்டும் இன்னும் பறக்கப்பழக்கப்படாத தன் வாரிசுடன் வந்தமர்ந்தது.... நீரிட்டக் கைகளுக்குப் பிரிவுபச்சாரமாய் கரைந்தன இரண்டும்..... நாளை நிறைந்திருக்கும் என் குவளை வெறுமையே......

நிறுவு..3

அஜித் நடித்து வந்த பில்லா இரண்டாம் பாகத்தில் ஒரு வசனம் வரும். உட்கார்ந்து வேலைபார்ப்பவனுக்கும் களத்துல் இறங்கி வேலைபார்ப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கும்.  இதை விற்பனைத்துறையில் பொருத்திப் பார்த்தால் கனக்கச்சிதமாய் இருக்கும்.  பொதுவாக மருந்து விற்பனைத்துறை என்பது விற்பனைத் துறைக்கு மிகவும் சவாலான ஒன்று.  இப்பொழுது இஙகு பல பல நாட்டுக் கம்பெனிகளும் வந்து விட்டன.  நாகரிகம் வளர்ந்த பிறகு MBA படிப்பு படித்து விட்டு ஹெச் ஆர். என்று சொல்லப்படும் மனிதவளத்துறை உள்ளுக்குள் வளர்ந்திருக்கிறது.  சில நிறுவனங்களில் அவர்கள் தான் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்.  தகுதியில்லாதவர்களை அப்பணியில் அமர்த்தி நிறுவனங்கள் சீரழிகின்றன. சில நாட்களுக்கு முன்னதாக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியே சென்ற ஒரு பிரதிநிதி என்னை தொலைபேசியில் அழைத்தார். CIPLA (முன்னனி நிறுவனம்) நிறுவனத்திற்கு அப்ளிகேஸன் அனுப்பியுள்ளதாகவும், அதில பழைய மேலாளர் பெயரைக் கேட்டதாகவும் அதில் என் பெயரையும் என் எண்ணைக் கொடுத்துள்ளதாகவும் சொல்லியிருந்தார். அவர் அப்படி சொன்ன இரண்டாவது நாள்...
ஓரிழப்பைப் பெற்ற வீடு பாவம்....! சேகரமாயிருந்த ரோஜாக்களெல்லாம் நுகர மறுத்து சாலைக்குத் தள்ளப்படும் வாசல்கொண்டவீடு  பாவம்.... சவம் கிடத்தப்பட்டத் தரையை எந்தச் சலனமுமின்றி இரத்தச்சம்பந்தமில்லா மூதாட்டி ஒருத்தித் துடைத்தல் கொண்ட வீடு பாவம்....! எல்லாம் முடிந்த பின்னும் ஒருவரைத் தவிர- எப்போதும் போல் எல்லோரும் ஆகும் வரை அவ்வீடு பாவம்...!

பால்யக்காதலிகள்...

பால்யக்காதலிகள் பரஸ்பரமானவர்கள் அல்லர்! என் இதயக் கல்லுக்கு முதல் உளி செய்து கொடுத்தவர்கள் அவர்கள்! என் கடிகார முட்களை முன்னோக்கியே நகர்த்திக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்! தாஜ்மகாலை படம் வரைந்து பாகம் குறிக்கச் செய்த மும்தாஜ்கள் என் பால்யக்காதலிகள்! சில தெருக்களின் நீள அகலங்களை அங்கலாய்க்கச் செய்தவர்கள் அவர்கள்! மிட்டாய் துண்டுகளைத் துண்டாடி அதன் பாதியைப் பகிரப் பயிற்றுவித்தவர்கள் என் பால்யக்காதலிகள்! கோயில்விழா இரவு கச்சேரிகளில் இசையை மீட்டுக் கொடுத்தவர்கள் அவர்கள்! கொடுக்காமல் புதைக்கப்பட்ட சில வாழ்த்து அட்டைகளில் இன்னமும் வாழ்பவர்கள் என் பால்யக்காதலிகள்! என் சாளரங்களை வேவு பார்த்த தேவதைகள் அவர்கள்! வெயில் நேரத்து மழையாய் என் வாசல் நனைத்துச் சென்ற மழைக்காயங்கள் என் பால்யக்காதலிகள்! காலியாயிருக்கும் பக்கத்து இருக்கைகளைக் கண்களால் குடிகொள்ளச் செய்தவர்கள் அவர்கள்! மேகம் விலகிய பின்னும் கலையாத வானவில் கூட்டம் என் பால்யக்காதலிகள்! பழைய பூங்காக்கள் கோயில்களின் எனக்கானப் புராதனங்கள் அவர்கள்! என் பால்யப்புகைப்படத்தின் நிழற்படமாயிருக்கும் பால்யக்காதலிகள் பரஸ்பரமானவர்கள் அல்லர்!

சிறகு.....

இலைகளினூடே இலகுவாய் அது இறகு.... வளியூடக வாயிலில் வலியின் வழியாய் அது சிறகு....! பறக்கும் திசை பிடிக்காமல் பறவையிடத்து உறிந்து வந்ததோ.... இதுவும் தேவையில்லையென ஏதோ ஒரு சமணப்பறவையே அறுத்தெறிந்ததோ.... யாருக்குத் தெரியும்... எனக்காய் ஏதோ ஒரு தேவதையின் காலந்தாழ்த்தி அனுப்பப்பட்ட மடலோ அச் சிறகு.....