இடுகைகள்

யூ.பி சார்

அவர் பெயர் U. பாலசுப்பிரமணியம். நாங்கள் செல்லமாக யூ.பி என அழைப்போம். பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் நான் அந்த நிறுவனத்தில் மருநது விற்பனை பிரதிநிதியாகச் சேர்ந்தபோது ...

ஆலவாய்

தூரங்களால் அளவிட முடியாத ஒரு நெருக்கமும் வெக்கை தரும்படியான ஒரு கதகதப்புமாய் முன்மாலை பொழுதொன்றை இப்படித்தான் சொல்லியிருந்தேன்.. இன்னொரு முறை கிட்டிராத ஒரு தாகத்திற்கானத் தண்ணீர்த்துளியைப் பருகுதல் போல என... சம்பாஷணையின் நீட்சியாய் ஒரு மௌனமும் முத்தப் பார்வையும் அந்நாளை முடித்தன... பிறிதொரு முன்மாலைப் பொழுதில் தனிமையின் தீயொன்று முழுதுமாய் விழுங்கியது போக எச்சமென தீர்ந்துபோன தாகமிருந்தது... உறைந்துபோன தண்ணீர்துளியின் தாக நினைவொன்று உள்நாக்கின் மடிப்பிற்குள் வளைந்து விரிந்துகொடுத்தது அனைத்தையும் விழுங்கிச் சாக!

R.I.P Dr. M.B.S க்ருஷ்ணன்.

அது ஒரு சம்பவம். மருந்து விற்பனை பிரதிநிதிகள் மருத்துவரிடம் புரோமோட் செய்வார்கள். விஷ்வல் எய்ட் இது போன்று வைத்திருப்பார்கள். அப்படி அந்த மருத்துவரிடம் ஐந்து விற்பனை பிரதிநிதிகள் பேசுவதற்கு நின்று கொண்டிருந்தோம். முன்னதாக நின்றவன் ஒரு புது விற்பனை பிரதிநிதி. இந்தத் துறைக்கே புதிது. திக்கிதிக்கி சொல்லிக்கொண்டிருந்தான். dr. reddy's என்ற ஒரு பெரிய நிறுவனத்தின் பிரதிநிதி அவன். நாங்கள் எல்லாம் அவன் பின்னே நின்றிருந்தோம். அப்பொழுது அந்தப் பையன் சொன்னதில் ஒரு மாத்திரை மேலும் விலை குறைந்து விட்டது . நான்கு ரூபாய் தான் .மலிவு என்றான். அதற்கு மருத்துவர் எட்டு ரூபாய் இருந்ததைக் குறைத்துவிட்டீர்களா என்றார். அதற்கு அவன் எட்டு ரூபாயிலிருந்து போன மாதம் ஆறு ரூபாய்க்கு குறைத்தோம். இப்பொழுது நான்கு ரூபாய் சார் என்றான். உடனே அவர் அடுத்த மாதம் ஓசியா கொடுப்பீங்களா என்றார். அவன் திகைத்து நின்றான். இந்த உரையாடல் எல்லாமே ஆங்கிலத்திலேயே நடந்தது. அந்த மருத்துவர் ஒரு கதையை ஆங்கிலேத்திலேயே சொன்னார். என்ன கதை என்னவென்றால் ஒரு சர்க்கஸ் க்ரூப் ரோட்டில் வித்தை காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய வளையத்தை ஒ...

சைரன் 10

மாற்று மருத்துவத்தைப் பற்றி ஆரம்பித்திருந்தேன்.  உண்மையில் சித்தா ஆயுர்வேத ஹோமியோபதி இன்னபிற மருத்துவம் அதாவது அலோபதிக்கு மாற்றாக உள்ள முறைகளில் சிறந்த சிகிச...

சைரன் 9

ஒன்பதாவது சைரன் ஒலிக்கு உங்கள் குரலையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும்படியாய் கேட்டிருந்தேன். சுந்தராஜன் சார் தன்னுடைய பதிவில் கர்ப்பமானப் பெண்களை குனிந்து நிமிர்ந்து வேலை செய்யச் சொல்லி பெரியவர்கள் கண்காணிப்பார்கள் என்றும் இப்பொழுது அப்படிச் செய்தால் சில கணவன்மார்களே அதற்கு ஒத்துழைப்புத் தருவதில்லை எனக் கூறியிருந்தார். உண்மையே. இடுப்பு எலும்பு விரிவடைந்து இருந்தால் சுகப்பிரசவத்திற்கு நல்ல வழி கிடைக்கும். குழந்தைகள் நல்ல ஆரோக்கியமானதாய் பிறக்க அதுவும் உடல் மற்றும் மன ஆரோக்கியமாகப் பிறக்க கர்ப்பத்திலேயே நல்ல ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடவேண்டும். இப்பொழுது பார்த்திருப்பீர்கள் ஹார்லிக்ஸ் போன்ற உணவுப்பொருட்களில் DHA  என்ற ஒரு கொழுப்புச்சத்தைச் சேர்க்கிறார்கள். இது என்ன என்று தெரியுமா. கதைக்கு வருகிறேன். கர்ப்பத்தில் உருவாகும் குழந்தையின் மூளை தண்டுவட புருவம் எல்லாம் உற்பத்தியாவதற்கு கர்ப்பப் பெண்ணிற்கு FOLIC ACID தேவை என்று ஒரு காலத்தில் சொன்னார்கள். அந்த காலத்தில் பெண்களுக்குத் தேவையான் ஊட்டச்சத்துகள் நன்றாகக் கிடைத்தன். இப்பொழுது இருக்கும் பெண்களுக்குக் கிடைத்தாலும் அப்பட...

சைரன் 8

நேற்றையப் பதிவில் நண்பர் முருகேசன் குழந்தைகளுக்கான தடுப்பூசி வகைகள் அது போட வேண்டிய காலம் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். போன பதிவில் அதைப் பற்றி எழுத நினைத்தாலும் அது நீண்டு தனிப் பதிவாக வரும் என்றும் அதை விட்டு விட்டேன். இருந்தாலும் நண்பரின் ஆசைக் கிணங்க சில கருத்துகள். உங்களுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என உங்கள் கையில் குழந்தையைத் தந்த உடனேயே இன்னொரு அட்டவணையையும் தருவார்கள். அது தடுப்பூசி அட்டவணை. சில மகப்பேறு மருத்துவமனைகளில் அந்த அட்டவணையைத் தருவதுடன் அங்கேயே நீங்கள் ஊசி போட்டுக்கொள்ளலாம் எனச் சொல்வார்கள். சில மகப்பேறு மருத்துவர்கள் குழந்தை மருத்துவரிடம் காண்பித்து போட்டுக்கொள்ளூங்கள் என்று சொல்வார்கள். தடுப்பூசிகளைப் பொறுத்தவரை நீங்கள் கண்டிப்பாக போட வேண்டும். அரசாங்க சார்பில் ஒரு அட்டவணையையும், பிரைவேட் குழந்தை மருத்துவர்கள் சார்பில் ஒரு அட்டவணையையும் வைத்திருக்கிறார்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் கண்டிப்பாகப் போட வேண்டிய ஊசிகள் அரசு சார்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நிரலில் இருக்கும். தனியார் குழந்தை மருத்துவ மையம் சார்பில் தந்திருக்கும் கொடுக்கப்பட்டிருக்கு...

சைரன் 7

யுனெஸ்கோ என்ற அமைப்பு நமது இந்தியாவைப் பார்த்து ஓர் அறிக்கை சமர்ப்பித்தது. அதாவது இந்தியாவில் இருக்கும் குழந்தைகளுக்கு வைட்டமின் d3 குறைவாய் இருக்கிறது. அப்படியாஆஆஆஆஆஆஆ னு வாயைப் பிளக்காதீங்க. இது நடந்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.  ஒரு காலத்துல குழந்தை பிறந்ததும் சூரய வெளியில் தினமும் காலையில் காட்டி சன் பாத் எடுத்த இனம் நம்ம நாட்டு இனம். ஆனால் இப்ப பார்த்துக்கொள்ளூங்கள். சூரிய வெளியிலிருந்து கிடைக்கும் விட்ட டி3 நமக்கே பற்றாக்குறையாம்.  குழந்தை பிறந்ததும் மருமகள் மாமியார்ட்ட தர யோசிக்கிறா. மருமகன் தன்னோட மாமியார்ட்ட தர யோசிக்கிறான். அவங்களுக்குள ஒரு எண்ணம் . அவங்க குழந்தைகளைப் பராமரிக்கத்தெரியாது. இன்பெக்ஷன் ஆயிரும் னு. ஆனா அந்த காலத்துப் பாட்டிமார்களுக்க்த் தெரியும் ஒரு குழந்தையை எப்படி கையாளனும்னு. ஆனால் போகிற  போக்கைப் பார்த்தால் நமது பேரக் குழந்தைகளைக் கையாள்வதற்கு நாம் வெளி நாட்டிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்யவேண்டி வரும் என நினைக்கிறேன். அந்த காலத்தில் லேக்டோஜென் 1 2 3 னு லாம் எண்ணிக்கைல இருக்காது. சத்து மாவுக் கஞ்சிய அவங்களே தயாரிச்சுட...