இடுகைகள்

பூம்பூம் வெய்யில்....

படம்
எந்த அன்பும் அற்ற வெயில்  கீற்றுகளாய் இறங்குமொரு வன்பொழுது... வியர்வை ஈர உள்ளங்கைகளில் சமிக்ஞை காட்டும் போலீஸ்கார விரல் நுனியில் ஸ்தம்பித்து நிற்கும் நிஜத்தின் நிரல்கள்... பசியின் ஓலம் மறைக்கும் காரின்கண்ணாடி தொட்டு கை தட்டும் திருநங்கையின் முகத்தில் பச்சாத்தாப வெயிலின் கழிவிரக்கம்.. புறக்கணிப்புகளின் வெயில் மீது புன்னகை நிழல்கள் சிந்தும் அந்த இருபால்காரியின் பாதம் வீழும்  வெயில் நேரத்தில்தான் அழுத குழந்தையின் கவனம் பருகும் ஒரு பூம்பூம் மாடும்.... இப்பொழுதும் கூட வெயில் ஏதாவதொன்றை விழுங்கவே விழுகிறது... ஒரு காமப்பிசாசைப் போல..

கழுவி ஊத்துறாஙைக...

எவ்வளவு நாளைக்குத்தான் கவிதை மாதிரி எதையாவது எழுதி காலத்த ஓட்ட முடியும்.  பேஸ்புக்ல ஆக்டிவா இருக்குறதே ஒரு பெரிய கலை ஆயிருச்சு. வர்ற லைக்குலாம் குறைஞ்சுட்டே வருது... நம்ம மோடி பண்றதுலாம் பார்த்தா இத்தனை லைக் விழுந்தா உங்களுக்கு புது இரண்டாயிரம் ரூபா நோட்டு வீட்டுக்கே வரும் னு சொல்லுவார் போல... எதையாவது எழுதனும். என்னத்த எழுதுறதுனே தெரியல... ஒரு நாள் எப்படி ஆரம்பிக்கிறது னு எழுதலாம். அந்த நாள எப்படி எதிர்நோக்குறதுனு எழுதலாம். அந்த நாளுக்காக நாம் எப்படிலாம் நம்மளை தயார் செய்துகொள்ளலாம் னு எழுதலாம். இப்படிலாம் மோட்டிவேட் ஆர்ட்டிகிள் எழுத நிறைய பேர் இருக்காங்க..எனக்கு ஒர் நாள் எப்படி ஆரம்பிக்குதுனு என் பார்வைல எழுதனும். இப்பலாம் உடல் எடை கூடிட்டே போகுதேனுதான் படுக்குறென் எந்திரிக்கிறேன்.  அப்படி ஒரு நாள் சீரியஸா..ஜிந்திச்சப்ப உடல் எடைய குறைக்க நம்ம ஒரு நாளில் என்னென்ன செய்யனும் உடல் உழைப்பை அதிகரிக்கனும். எல்லாரும் சொல்லுங்க அதுக்கு என்ன பண்ணனும்.  என்னமோ டோரா புஜ்ஜி கதை மாதிரி சொல்லிக்கிட்டேன்.  உடம்ப குறைக்க ஏதாவது பண்ணனும்...

பாஸ்...உங்களுக்கு கல்யாணமாயிருச்சா....

முன்னுரை விளக்கவுரைலாம் இல்லை. ஸ்டெர்ய்டா மேட்டருக்கு வரேன். காடு மலை கடல் எல்லாம் அலைஞ்சு அண்ணனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் வச்சுட்டாஙைக... விசேசத்துக்கு வந்த ஒரு அப்பத்தா அப்படியே சின்னவனுக்கும் பொண்ண பாத்திரு தனம்னு அம்மாக்கு சொல்லுச்சு.   பக்கத்துல இருந்து கேட்டதும் நான் ரொம்ப வெட்கப்பட்டு சிவப்பாயிட்டேன்.... சிவப்பாகி முடிக்கல ஒரு ரெண்டு வருஷம் ஆகட்டும் அவனுக்கு என்ன அவசரம் னு அம்மா சொன்னாங்க..  நான்  பழைய கலர்க்கே வந்துட்டேன்... ஆறு மாசம் கழிச்சு என் ஜாதகத்த தூசு தட்டுனாஙைக..வீட்டுக்கு வந்த மாமா ஒருத்தர் பழனிக்கென்ன ராஜா மாதிரி இருக்கான் பொண்ணு தானா வரும்னார்... எப்படி வருமாம்....தானாஆஆஆஆஆ வருமாம்.. அவ்வளவுதான் ஜாதகத்த மறுபடியும் பூட்டி வச்சிட்டாஙைக.. என் செட் பசங்கள ஒவ்வொருத்தரா கல்யாணம் பண்ணிக்க ஆரம்பிச்சாய்ங்க.. ஒருத்தன ஒருத்தன் பார்த்தா என்ன வேல பாக்குற என்ன சம்பளம் வாங்குறன்ற கேள்விகளைக் கடந்து கல்யாணம் எப்ப னு பேச ஆரம்பிச்சாய்ங்க... டே மாப்ள அவனத் தெரியுமா கல்யாணம் முடிஞ்சிருச்சுடா .. உனக்கு பொண்ணு பாக்குறாங்களா ...

யூ.பி சார்

அவர் பெயர் U. பாலசுப்பிரமணியம். நாங்கள் செல்லமாக யூ.பி என அழைப்போம். பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் நான் அந்த நிறுவனத்தில் மருநது விற்பனை பிரதிநிதியாகச் சேர்ந்தபோது ...

ஆலவாய்

தூரங்களால் அளவிட முடியாத ஒரு நெருக்கமும் வெக்கை தரும்படியான ஒரு கதகதப்புமாய் முன்மாலை பொழுதொன்றை இப்படித்தான் சொல்லியிருந்தேன்.. இன்னொரு முறை கிட்டிராத ஒரு தாகத்திற்கானத் தண்ணீர்த்துளியைப் பருகுதல் போல என... சம்பாஷணையின் நீட்சியாய் ஒரு மௌனமும் முத்தப் பார்வையும் அந்நாளை முடித்தன... பிறிதொரு முன்மாலைப் பொழுதில் தனிமையின் தீயொன்று முழுதுமாய் விழுங்கியது போக எச்சமென தீர்ந்துபோன தாகமிருந்தது... உறைந்துபோன தண்ணீர்துளியின் தாக நினைவொன்று உள்நாக்கின் மடிப்பிற்குள் வளைந்து விரிந்துகொடுத்தது அனைத்தையும் விழுங்கிச் சாக!

R.I.P Dr. M.B.S க்ருஷ்ணன்.

அது ஒரு சம்பவம். மருந்து விற்பனை பிரதிநிதிகள் மருத்துவரிடம் புரோமோட் செய்வார்கள். விஷ்வல் எய்ட் இது போன்று வைத்திருப்பார்கள். அப்படி அந்த மருத்துவரிடம் ஐந்து விற்பனை பிரதிநிதிகள் பேசுவதற்கு நின்று கொண்டிருந்தோம். முன்னதாக நின்றவன் ஒரு புது விற்பனை பிரதிநிதி. இந்தத் துறைக்கே புதிது. திக்கிதிக்கி சொல்லிக்கொண்டிருந்தான். dr. reddy's என்ற ஒரு பெரிய நிறுவனத்தின் பிரதிநிதி அவன். நாங்கள் எல்லாம் அவன் பின்னே நின்றிருந்தோம். அப்பொழுது அந்தப் பையன் சொன்னதில் ஒரு மாத்திரை மேலும் விலை குறைந்து விட்டது . நான்கு ரூபாய் தான் .மலிவு என்றான். அதற்கு மருத்துவர் எட்டு ரூபாய் இருந்ததைக் குறைத்துவிட்டீர்களா என்றார். அதற்கு அவன் எட்டு ரூபாயிலிருந்து போன மாதம் ஆறு ரூபாய்க்கு குறைத்தோம். இப்பொழுது நான்கு ரூபாய் சார் என்றான். உடனே அவர் அடுத்த மாதம் ஓசியா கொடுப்பீங்களா என்றார். அவன் திகைத்து நின்றான். இந்த உரையாடல் எல்லாமே ஆங்கிலத்திலேயே நடந்தது. அந்த மருத்துவர் ஒரு கதையை ஆங்கிலேத்திலேயே சொன்னார். என்ன கதை என்னவென்றால் ஒரு சர்க்கஸ் க்ரூப் ரோட்டில் வித்தை காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய வளையத்தை ஒ...

சைரன் 10

மாற்று மருத்துவத்தைப் பற்றி ஆரம்பித்திருந்தேன்.  உண்மையில் சித்தா ஆயுர்வேத ஹோமியோபதி இன்னபிற மருத்துவம் அதாவது அலோபதிக்கு மாற்றாக உள்ள முறைகளில் சிறந்த சிகிச...