இடுகைகள்

M.I பீரியட்

சும்மா எப்ப பாரு நச்சுநச்சுனு இருக்கானுக. இவனுகளா விருது தரானுக...அத ஒரு க்ரூப் திட்டுது. இன்னொரு க்ரூப் புரோமோ பண்ணுது. வெளிய வந்தாலும் வெக்கை. உள்ள வந்தாலும் வெக்கை. ச்சை...ஊராயா இதுனு காந்தி மியூசியம் ரோட்டுல மரத்தடில நிண்டு சர்பத் சோடா நல்லா சில்லுனு கடல் பாசி பெப்பர்லாம் போட்டு தருவார் ஒரு அண்ணேன். குடிச்சா ஜிவ்ஜிவ்வுனு இருக்கும். அப்படி இதமா எங்கயாவது போகனும். அட்லீஸ்ட் மன நிலையிலாவது அப்படி போயிரனும். பள்ளிக்கூடம் படிக்கிறப்ப காலை  ஆரம்பிக்கிறப்ப நல்லொழுக்கம் க்ளாஸ் இருக்கும். நான் படிச்சது புனித பிரித்தோ மேல்நிலைப்பள்ளி. இந்து முஸ்லீம் பசங்களுக்கு நல்லொழுக்கம் க்ளாஸும், கிறித்தவ மாணவர்களுக்கு கத்தோலிக்கக் கிறித்தவ க்ளாஸும் நடக்கும். பரீட்சைலாம் வைப்பானுக. மொக்க க்ளாஸ். என்னா பெரிய நல்லொழுக்கம் க்ளாஸ். படிச்சு ஒப்பிச்சு பாஸ் பண்ணுறதுதான..பண்ணியாச்சு. கிறித்தவ பசங்களுக்கு நல்லொழுக்கம் தேவையில்லையானு கேட்டீங்கனா நீங்க ஒரு ஆன்டி இந்தியன். அப்புறம் உடற்கல்வினு ஒரு வகுப்பு இருக்கும். எல்லாப் பசங்களும் சட்டைய கழட்டிட்டு ஸ்கூல் யூனிஃபார்ம் பனியனோட க்ரவுண்ட்டுக்கு போவோம். மூணு ...

வினோத் மாமா....

நான் ஐந்தாவது ஆறாவது படிக்கும்பொழுது என் வீட்டில் அப்பா ட்யூஷன் எடுப்பார்கள். நிறைய அண்ணன்மார்கள் வந்து படிப்பார்கள். அப்பா வேலை பார்த்த பள்ளி ஒரு வசதியற்ற தாழ்வுநிலையில் உள்ள மக்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்த பள்ளி. அப்பா அங்கு தமிழாசிரியர். ஆரம்பகால பணி நிமித்தம் காரணமாகவும் அனுபவம் காரணமாகவும் ஆங்கிலமும் கணிதமும் அப்பாவிற்கு அத்துபடி. அவரது பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறையில் கணிதத்திற்கு அப்பாவே வகுப்பு எடுத்தார். மொத்தமே பத்து மாணவர்கள் படித்த பத்தாம் வகுப்பெல்லாம் உண்டு. சில சமயம் சந்தேகங்கள் இருந்தால் வீட்டிற்கு வாங்க என்று அழைத்து விடுவார். ஏழை மாணவர்கள் பணம் கொடுக்க வசதி இல்லை எனத் தயங்குவார்கள். அதையும் மீறி வந்து படி கொடுக்க வேண்டாம் எனலாம் நடக்கும்.  அதில் சில அண்ணன்மார்கள் எனக்கு மிகவும் ப்ரியம். இலவசமாக ஓர் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் வீட்டில் இருக்கும் குட்டிப்பையனை யாருக்குத்தான் பிடிக்காது. எனக்கு அப்பொழுது பொங்கல் வாழ்த்தாக  ராஜா சின்ன ரோஜா பணக்காரன் என ரஜினி படங்களை வாங்கி அப்பாவிடம் கொடுத்து அனுப்புவார்கள். அப்பொழுது எல்லாம் சைக்கிள் வாடகைக்...

முதல் பிறழ்வு

முதல் பிறழ்வு முதல் பிறழ்வுனு தலைப்பைப் பார்த்ததும் பிறழ்வு பொறழ்வுனு கவிதை கிவிதை எழுதிருவேனு வயசானவங்கலாம் நெஞ்ச பிடிச்சிர வேணாம். அதுலாம் பண்ண மாட்டேன். பயப்படாம படிக்கனும். அப்புறம் ஏன் பிறழ்வுனு தலைப்புனா அப்படித்தான்....ஒரு அந்தி வேளை நேரம், ஆகச்சிறந்த தருணம், மழைமுடிந்த இரவு, பிரயத்னம், இப்படிலாம் வார்த்தைகள போட்டாத்தான் நமக்கு இலக்கியவாதினு மார்க் போடுறானுக சீனியர் இலக்கியவாதிக... சரி விடுங்க...விசயத்துக்கு வாங்க மக்களே..  சமயத்துல முதன்முதலா ஏதாவது ஏடாகூடமா பண்ணி அது சொதப்பிருக்கும். உடனே இப்படித்தான் அந்த காலத்துல னு சீரியஸா கதை சொல்லாதீங்க..நான் சொல்லப்போறதுலாம் வெட்டிக்கதை தான். முதல் தடவையா பண்ண மிஸ்டேக் பற்றிய வெட்டிக்கதை.( யாருய்யா அது கல்யாணம் அந்த லிஸ்ட்ல வருமானு மனசுக்குள கேக்குறது....) மெடிக்கல் ரெப் ஆகி நான் பஜாஜ் எம்80 வண்டி வச்சிருந்தேன். மதுரைல இருந்து வெளியூருக்கு வண்டில போறதா இருந்தா நானும் என் நண்பனும் சேர்ந்து போவோம். அவன் புதுசா வண்டி வாங்குனான். அதுவும் பைக்.ஸ்பெலணடர் ப்ளஸ் பைக்.  புது பைக் ல திருப்பாசேத்தி ஒரு நாற்பது கி.மீ இருக்கும்....

நெடுவாசல்

வான்வெளியில் வலம் வரலாம் காற்றலைகளுடன் பேசி சிலாகிக்கலாம்... எதிர் குரல் அற்ற மோன நிலையின் அபத்தங்கள் அங்குதான்... பெயர் பொறித்த ஆடையுடன் ஜொலிக்கலாம்.. வண்ண வண்ண விளம்பரங்களில் மிடுக்கலாம்.. எதார்த்தங்கள் தெரியாத மயக்கங்கள் அங்குதான்.. தேவையற்றச் சிலைகளின் காடழுகும் சிலாகிப்புகளை மண்டியிட்டு பிரகடனப்படுத்தலாம்... எங்களின் உடனடித்தேவைகளில் பசி மட்டுந்தான் ஆண்டவரே... பிரார்த்தனைகளில்லை... இதோ... முதுகில் குத்தப்பட்டத் தடங்களோடு மார்பு காட்டி உங்கள் வாசல் கிடக்கிறோம்... வழக்கம்போல் ஒரு நச்சு உங்கள் வசம் இருக்கலாம்... கலைத்து விடவும் அழித்து விடவுமென கடவுச்சொற்கள் உங்கள் வசம் இருக்கலாம்.. அழிந்துபோன நாகரிகத்தின் பெயரால் நாங்கள் அழைக்கப்படும் ஒரு நாளில் பேயெனத்தெரியாமல் மான் கள் உங்கள் காவடி ஏந்தியிருக்கும்..
ஒரு ரோஜாப் பூ போதுமானதாயிருந்தது... ஜெமினி கணேசன் களுக்கு... ஒரு வாழ்த்து அட்டை  போதுமானதாயிருந்தது கமல்ஹாசன் களுக்கு... ஒரு தாஜ்மகாலும் கவிதையும் போதுமானதாயிருந்தது அஜித்களுக்கு.. இப்படித்தானே  ஊடல் தருணங்களின் தடங்கள்  சமரசமாயின... சினிமாத்தனமில்லாத ஓரன்பு இருக்கிறது.. குறுந்தொகை காலத்துத் தலைவியின் ஊடல் பாடும் பசலையின் தலைவனாய்.... வானவில் ரசித்ததை நெடுஞ்சாலை ரயில் பார்த்ததை அடிபட்ட கைவிரல் போலிஸ்காரரின் தடம் சொன்னதை பிடித்தப் பாடலை வக்களித்துச் சிரித்ததை ஏதேனுமொன்றை ஞாபகப்படுத்த ஒரு வடையும் காப்பியும் பருகலாம் தானே....

விளையாடற்காலம் - விமர்சனம்.

கவிஞர் ஆத்மார்த்தி எழுதிய கவிதைத் தொகுப்பு "விளையாடற்காலம்" என்ற புத்தகத்தை முன் வைத்து... தோழர் ராமதாஸ் சென்றாயன் ஏற்பாடு செய்த விடுதலை இலக்கிய பேரவையின் முதற் கூட்டத்தில் "விளையாடற்காலம்" தொகுப்பைப் பற்றி வழங்கிய விமர்சனமும் அது சார் எழுதிய முழு வடிவமும். பொதுவாகக் கவிதை என்பது உளவியல் ரீதியாக எழும்பப்படும் அல்லது எழுப்பப்படும் ஓர் உணர்வு அதிர்வலை.  மிகச் சுருக்கமாக என் பாணியில் சொல்வது என்றால் ஒரு குழந்தையிடம் தூக்கிப் போடப்படும் ஒரு பந்தைப் போன்றது. ஒரு கவிதையின் நல்ல வாசகனுக்கு அந்தக் குழந்தை ஓர் உருவகம் என்பேன். குழந்தையிடம் விழும் அந்தப் பந்தை அந்தக் குழந்தை எடுத்துச் சிலாகிக்கும். சில குழந்தைகள் அந்தப் பந்தை எடுத்து கைகளால் உருட்டி விளையாடும். சில குழந்தைகள் அந்தப் பந்தை திரும்பி நம்மிடம் எடுத்து எறியும். சில குழந்தைகள் எப்போதோ எறியப்பட்ட அந்த பந்தை நினைவில் வைத்துக்கொண்டு கையில் கிடைக்கும் பாத்திரங்கள் காகிதத் துண்டுகள் அலைபேசிகள் பொம்மைகள் என எல்லாவற்றையும் பந்தாக நினைத்துக்கொண்டு தூக்கி எறிந்து விளையாடும். அது போல் தான் ஒரு கவிதையின் வாசகனும். ஒ...

பூம்பூம் வெய்யில்....

படம்
எந்த அன்பும் அற்ற வெயில்  கீற்றுகளாய் இறங்குமொரு வன்பொழுது... வியர்வை ஈர உள்ளங்கைகளில் சமிக்ஞை காட்டும் போலீஸ்கார விரல் நுனியில் ஸ்தம்பித்து நிற்கும் நிஜத்தின் நிரல்கள்... பசியின் ஓலம் மறைக்கும் காரின்கண்ணாடி தொட்டு கை தட்டும் திருநங்கையின் முகத்தில் பச்சாத்தாப வெயிலின் கழிவிரக்கம்.. புறக்கணிப்புகளின் வெயில் மீது புன்னகை நிழல்கள் சிந்தும் அந்த இருபால்காரியின் பாதம் வீழும்  வெயில் நேரத்தில்தான் அழுத குழந்தையின் கவனம் பருகும் ஒரு பூம்பூம் மாடும்.... இப்பொழுதும் கூட வெயில் ஏதாவதொன்றை விழுங்கவே விழுகிறது... ஒரு காமப்பிசாசைப் போல..