இடுகைகள்

தயவு செய்து ஷீ க்களின் மீது நடக்காதீர்கள்.....

படம்
அப்ப நான் மேலப்பொன்னகரம் எட்டாவது தெருல இருந்தேன். இந்த அப்ப னு ஆரம்பிக்கிறப்பவே அது மொக்க ஃப்ளாஷ் பேக் னு யாரும் தெறிச்சு ஓட வேணாம். பத்து வரில நிகழ்காலத்துக்கு வந்துருவேன்...எவ்ளோ எழுத வேண்டியதா இருக்கிறது. உங்களை என் கதைய படிக்க வைக்க..ஒரே குஷ்டமப்பா.... ஏழாவதோ எட்டாவதோ படிச்சுட்டு இருந்தேன். மாடில வீடு. மூணு நாளே ஆன மிக்கி மவுஸ் படம் போட்ட மஞ்சள் கலர் செருப்பு எனக்கும் எங்க அண்ணனுக்கும். வெளிய போட்டு இருந்தோம். எவனோ லவட்டிட்டு போயிட்டான். (லவட்டிட்டு னா..ஆட்டைய போட்டானு அர்த்தம்.. அதுக்கும்அர்த்தம் கேக்காதீங்க) திருடிட்டு போன பிரகஸ்பதி  பக்கி         என் இடது கால் செருப்பையும் எங்க அண்ணனோட இடது கால் செருப்பையும் எடுத்துட்டு போயிருச்சு . சம்பவம் நடந்தது ஞாயித்துக்கிழமை. அப்பவே ஒரு தாத்தா காலத்து டெக்னிக்க எங்க அம்மா கண்டுபிடிச்சு மீதி இருக்குற வலது கால் செருப்ப வெளிய போட்டு வை. திருட்டுப்பயல நம்ம லவட்டிருவோம் ( அப்படினா அமுக்கிருவோம்னு அர்த்தம்...)னு வச்சோம். அடுத்தச் சம்பவம் அடுத்த ஞாயித்துக்கிழமை பட்டப் பகலுல அந்த வலது சோடி செருப்ப லவட்டிட்டு...

பின்வரிசை மன்றாடல்

உங்கள் பின்வரிசையில் இருப்பவருக்குத் திரை சரியாகத் தெரியவில்லை .. உங்கள் பின்வரிசையில் வருபவருக்கு சாமி சிலை கூட சரியாகத் தெரியவில்லை தான். உங்கள் சாளரக்கதவை மூடிய பிறகு உங்கள் பின்னிருக்கைகாரருக்குக் காற்று கூட வரவில்லை தான். உங்கள் அமர்ந்துபோன வண்டியை நகர்த்தாமல் உங்கள் பின்னிருப்பவருக்கு வழியில்லை தான்.. எப்பொழுதும் நீங்கள் ஒதுங்கிக்கொள்ள கேட்கப்படுகிறீர்கள்.. உங்களை ஒதுக்க நீங்களே எத்தனிக்கையில் உங்கள் உயரமோ உங்கள் ஆக்கிரமிப்போ ஏதோ ஒன்றில் தடுமாறி திரும்பிப் பார்க்கிறீர்கள்.... அசாதாரணங்கள் சூழ்ந்து நிற்கும் உங்களின் பின்வரிசையில் நெளிய நெளியக் காத்திருக்கிறது உங்களின் சாதாரணம்.. நீங்கள் எப்பொழுதும் வளர்ந்துவிட்ட ஒரு தடித்த மரக்கிளையின் தண்டைப் போல் நிற்கிறீர்கள்.. பச்சையங்கள் அற்ற வெற்று உலர் பட்டைகளுடன் நிமிர்ந்து நின்ற உங்களுக்கு ஒரு பின்வரிசை தேவைப்படுகிறது ...

இயேசுவே உமக்குப் புகழ்

பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தச் சமயம் அது. கிறிஸ்டியன் மேனேஜ்மெண்ட். ஆர்.சி ஆரம்பப்பள்ளி, நான் படிச்ச பிரிட்டோ (ஆண்கள் மட்டும்) பள்ளி, ஹோலி ஃபேமிலி (பெண்கள் மட்டும்) பள்ளி எல்லாம் ஒரே பகுதியில் தடுப்புச்சுவர் மூலமா பிரித்து வைக்கப்பட்டப் பள்ளிகள். மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை திருப்பலி நடக்கும். பள்ளி சார்ந்த பள்ளிக்கு கொஞ்சம் எதிரில் இருந்த ஒரு சர்ச்சில். கிறித்தவ மாணவர்கள் போவார்கள். அன்று மட்டும் பள்ளி ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கும். அதுவரை கிறித்தவம் சாராத அல்லது அந்தத் திருச்சபை சாராத அதாவது கிறித்தவ வேறு கிளைக்கான மாணவர்கள் எல்லோரும் வகுப்பில் உக்காந்து படிக்கனும். எதுனாலும் படிக்கலாம். விளையாடக்கூடாது. மீறி பேசினா விளையாடினா ஒரு லீடர போட்டு போர்ட் ல பேர் எழுதச் சொல்வானுக. அதுனால எங்களுக்கு வேலை காலை திருப்பலிக்குப் போறப்ப ஹோலிஃபேமிலி பொண்ணுக சாரை சாரையா போகுங்க. அதைப் பார்க்குறது. திரும்பி போறப்பவும் பார்ப்போம். ரொம்ப கேவலம் சார். பள்ளி வகுப்பறைல இருந்து பாக்குறப்ப க்ரவுண்ட்ல க்ராஸ் ஆகுற பொண்ணுக ஒருத்தி முகமும் தெரியாது. இருந்தாலும் ஆ....னு பாத்து இருக்கோம் ...

வெள்ளை நியூட் ரின் சாக்லேட்

இப்பொழுது தான் அம்மாவிற்கு அழைப்பு வந்தது. என்னிடம் கேட்கலாம் எனச் சொல்லி அம்மா ஃபோனை அணைக்கும்வரை அவர் யாரிடம் பேசுகிறார் என்று  நான் கவனிக்கவில்லை. அவர் ஃபோனை அணைத்துவிட்டு வெளியில் வருவதற்கும் நான் என் பைக்கை வெளியில் எடுக்கத் தயாராவதற்கும் சரியாக இருந்தது. டே ப்ரவீன்... அரவிந்த் டா ஃபோன். இதைச் சொல்லிவிட்டு அம்மா வாசலுக்கு என்  அருகில் வரும் வரை அரவிந்த் க்கான ஒரு சிறு ட்ரெய்லர் என் மனதில் ஓடியது. இரண்டு வருடத்திற்கு முன் இப்படித்தான் ஃபோன் செய்தான். அதுவும் அவன் அல்ல. அவனது அம்மா. மாணிக்கம். அம்மாவோடு ஒன்றாய் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தன் இரண்டாவது மகன் அரவிந்த் விசயமாக ஃபோன் செய்திருக்கிறார். எம் பி ஏ அரியர் . வேலை இல்லை. வீட்டிலேயே சொத்தை அழிக்கும் படியாக அமர்ந்து உணவு உண்ணும் தறுதலைப் பையன் . அவனது அப்பா இப்படித்தான் சும்மா இருந்து வேலை வெட்டி என்று எதுவும் இல்லாமல் புகை தண்ணீர் என எல்லாக் கெட்ட பழக்கங்களுடனும் வீட்டில் சுமையாக மாறி விட்டார்.. இவனும் அப்படி ஆயிரக்கூடாது என்று சொன்னார். ஆதலால் அவனுக்கு ஏதாவது வேலை. இது தான் அன்று வந்த ஃபோன். என்னை...

ஹேப்பி தீவாளி.....

தீபாவளினு ஒண்ணு வந்தாலே எனக்குப் பல ஃப்ளாஷ்பேக் போயிருது. சின்னப்பிள்ளைல தீபாவளினா புது ட்ரஸ், வெடி , ஸ்வீட். கீழ் வீட்டு ரஞ்சிதம் அத்தை சுட்டுத் தர்ற அப்பம். இதான் தீபாவளி. அப்ப மதுரைல மேலப்பொன்னகரம் எட்டாவது தெருல இருந்தோம். அங்க இருந்து க்ராஸ் ரோட்டுப்பக்கம் எங்கேயோ நடந்து ஒரு கல்லு சந்துக்குள்ள குடும்பத்தோட போவோம். அங்க தான் இருக்கும் வெங்கட் ராமன் கடை. அந்தக் கடை பேரு வெங்கட் ராமனா இல்ல ஓனர் பேரு வெங்கட் ராமனா னு தெரியாது. அது ஒரு பத்துக்கு பத்து இருக்குற ஒரு சின்ன ரூம் கடை. கீழ தரைல பாய் விரிச்சிருப்பானுக. கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் வச்சுப் பார்த்தா அந்தக் கிழிஞச பாய்லாம் வருஷா வருஷம் நாங்க எடுக்குற துணில நல்ல பாய விரிச்சுட்டானுக. துணியா எடுத்து வெளிய தைக்க கொடுப்போம். சட்டை டவுசர் தான்.  எனக்குத் தெரிஞ்சு  அஞ்சாவது படிக்குறப்ப கூட படிச்ச பாலசுப்பிரமணியன் என்றவன் வெங்கட் ராமன் கடைலயா எடுக்குற...பாத்து டவுசர் கிழிஞிசுருமேடா.....கால தூக்கிறாத னான். முடிஞ்சது கதை. சைக்கிள்ல டக் அடிச்சு உக்காந்ததுமே டக்குனு குனிஞ்சு பாத்துக்குவேன். அந்த தீபாவளிக்கு வெங்கட் ராம...

செஞ்சுரியன்

அவர் பேரு செஞ்சுரியன். நான் நடக்குற ஏரியாலத்தான் நடக்குறாரு. வயது ஒரு நாற்பத்தைந்துக்கு மேல இருக்கும். கொஞ்சம் குட்டை. கொஞ்சம் பருமன். கொஞ்சம் நரை. நிறைய கஞ்சம். ஏதாவது மீட்டிங்க்னா வந்து பேசுறவன் யாருனு பாக்ககூட மாட்டாரு. கிளப்புல ஏதாவது வேலைனா வந்து கலந்துக்கவும் மாட்டாரு. மீட்டிங்க் முடிஞ்சு சாப்பாடுனா வந்து நிப்பாப்புல... பஃபே சிஸ்டத்துல ஒருத்தன் எத்தனை பந்திக்கு சாப்பாடுறானு கண்டுபிடிக்க முடியாதுன்ற சட்டத்து ஓட்டைய செஞ்சுரியன் நல்லா பயன்படுத்திக்குவாரு. ஆமா நான் ஏன் செஞ்சுரியனு பேர் வச்சிருக்கேன்னு தெரியுமா. அதை கடைசியா சொல்றேன். இப்ப சொல்ற கதைய எடிட்டிங்க் மனசுல பண்ணி வேகம் வேகமா காட்சிகளை நகர்த்திப் பாக்கனும். ஃப்ளாஷ்பேக் ஒன்று. (ஆறு மாதத்துக்கு முன்னால்) நானும் இன்னொரு நண்பரும் நடக்குறோம். செஞ்சுரியன் வந்தாப்புடி. எவ்வளவு நடந்தாலும் பிரச்சினை போகமாட்டிங்குதே... என்ன சார் உங்க பிரச்சினை. ..இது நாங்க. மூலம் மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினை...இப்படி செஞ்சுரியன் அடுக்குனாரு. நல்லா நடங்க சார் ..இது என் நண்பர். மூச்சு வாங்குதே...இது செஞ்சுரியன்.. யோகா பண்ண...

மதுரை புத்தக மழை விழா

மதுரையில் நேற்றோடு புத்தகக் கண்காட்சி நடைபெற்று முடிவடைந்துள்ளது. அது பற்றி எழுத வேண்டியது ஆசை. அந்த புத்தகக் கண்காட்சியில் நான் என்னென்ன புத்தக்ங்கள் வாங்கினேன் என்று ஒரு பட்டியல் போடப்போகிறேன் என நினைக்காதீர்கள். இது அது அல்ல. கொஞ்ச நாள் முன்னதாக எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்கள் ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவை ஒட்டி தினமும் நிலைத் தகவலாய் அந்த புத்தகத்திருவிழா பற்றி பதிவு செயதார். அப்பொழுதே எனக்கு தோன்றிய விசயம் நாமும் ஏன் மதுரையில் புத்தகத் திருவிழா நடக்கும்பொழுது இப்படி எழுதக் கூடாது என யோசித்து எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்களிடம் வாட்சப்பிலும் பின்னூட்டத்திலும் காட்டப்படாத சூடத்தின் மேல் சூளுரைத்தேன். நானும் எழுதப் போகிறேன் என்று. அவரும் எழுதித் தொலையும் என்ற மைண்ட் வாய்ஸை மொழிபெயர்த்து எழுதுங்க பழனி)))) என்று ஸ்மைலியோடு சொன்னார். ஆனால் அவர் எழுதிய தொணி நமக்கு சரிபட்டுவராது என்பதும் நமக்கு வருவதை எழுத முற்பட்டால் scary movie ரேஞ்ச்க்குத்தான் மாறும் என்பதையும் காட்டப்படாத சூடத்தின் மேல் சூளுரைத்தேன். அதற்கான புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 1ம் தேதி ஆரம்பமானது. அதுவரை அஸ்ஸாம் ...