இடுகைகள்

அ.நா 301

மழையற்ற ஒரு நெடுஞ்சாலையை நான்குவழிச்சாலையென நீட்டி வெட்டி முழக்க வெற்றிடமாய் இருக்கும் ஒரு பாலையின் நீள் பாதையாய் யாருமற்று இருக்கும் இத்தனிமையை நீங்கச் சொல்பவர்களே,,, மழையெனச் சொன்னால் முழுதும் நனையவும் கடலெனச் சொன்னால் முழுதும் மூழ்கியெழவும் இருக்கும் நடிப்புக்கலைஞர்கள் இன்னொரு நாள் இன்னொரு மழை மற்றொரு நாள் மற்றொரு கடலென திளைத்துத் திரிபவர்கள். கேமரா ஃப்ளாஷ்களின் முன் இமை அசைவற்றுச் சிரிக்கும் உயிர் பொம்மையினங்கள் அவர்கள்.. வெறும் வாயசை சமிக்ஞைகளுக்கு எல்லாம் மொழிகளையும் பொருத்தித் திரிவார்கள். பூக்களின் நடுவே பூக்களாய் ஆடை கடலினடுவே நீர் போன்றாடை மையிட்டு மையல் கொண்டபடி பெண்ணும் அவள் கைகளுக்குள் விழும் ஆணுமென நவநாகரிக கார்ப்பரேட் காதலர்களாய்த் திரிவார்கள்.. வெண் திரை முழுக்க வண்ண வண்ணமயமாய் எல்லாப் பக்கமும் சத்தமென டால்ஃபி சத்தங்களுக்குள் விழுந்து எழுந்து உயிர்ப்பிக்கும் திரையரங்குகளில் ஒளிர்ந்து இன்னொரு நாள் இன்னொரு படமென மறைபவர்கள் அவர்கள்.. முதல் நாள் மாலை பாலென ஆச்சாரக் காட்சியெல்லாம் திரை அமர்ந்த நடுநிசி நேரத்தில் ஓசையற்ற ஒரு தருணமென ...

காலா - விமர்சனங்களின் விமர்சனம்

அட ஆமாங்க. இது காலா பற்றியப் பதிவு தான். விமர்சனங்களின் விமர்சனம் தான். திரைப்படத்தைத் திரைப்படமாகப் பார்க்கும் பழக்கம் ஆரம்பக் காலந்தொட்டே தமிழ் ரசிகர்களுக்கு இருந்ததில்லை. அரசியல் அறிவிப்பிற்கு முன் வரை ரஜினிக்கு இவ்வளவு எதிர்ப்பாளர்கள் இருந்ததில்லை. இப்பொழுது வந்துவிட்டார்கள். எப்பொழுதெனக் காத்திருந்து கற்களை எறிய அவர்களிருக்க, ரஜினியும் தானாய் மனமுவந்து தூத்துக்குடியில் அந்த வாய்ப்பை வழங்கிவிட்டார். நிற்க. ஒரு அரசியல்வாதி ரஜினி மீது அவரின் எதிர்ப்பாளர்கள் பல காரணங்களைக் கூறி அவரது குறையுடன் அவரை வீழ்த்த முடியும். ஆனால் ஒரு நடிகனாக அவரது உழைப்பை அவர் கட்டமைத்த ஒரு வடிவத்தை அவ்வளவு எளிதாக அவரது வெறுப்பாளர்களால் உடைக்க முடியாது.  ஆதலால தான் படம் வருவதற்கு முன் பொங்கி பொங்கல் வைத்த பல போராளிகள் பட ஆரம்ப சீனிலேயே ரஜினி போல்ட் என்பது போன்ற குற்றங்களைச் சொல்கிறார்கள். ஒரு சிலர் இது ரஞ்சித் படம் அதான் வெற்றி என்கிறார்கள்.  அதாவது அந்தப் படம் அவர்களுக்குப் பிடித்துவிட்டது.  ஆனால்.ரஜினியைப் புகழ விருப்பமில்லை . அதற்குக் காரணம் சொல்கிறார்கள். ரஞ்சித் படமென்ற...

சைரன் பக்க & பக்கா இறுதி

ஒரு நண்பர் என்னை இரு மாதங்கள் கழித்துப் பார்த்து என்ன பழனி இப்படி மெலிஞ்சுட்டீங்க என்றார் நான் தான் குறைச்சிருக்கேன் என்றேன் எதுவும் டயட்டா..பேலியோவா என்றார். இல...

சைரன் பக்க & பக்கா 5

உடல் எடை குறைப்பில் இவ்வளவு வேலை இருக்கிறதா என்று ரிஷி சார் கேட்டிருந்தார். ஒருவகையில் எடை குறைப்புப் பற்றி ஒரு பயத்தை அல்லது தெளிவற்ற நிலையை நான் ஏற்படுத்திவிடக்கூடாது. இதை விழிப்புணர்விற்கோ அல்லது எச்சரிக்கைக்கோ சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். இப்படி எல்லாம் எல்லாருக்கும் நடக்குமா என்று கேட்டால் நடக்காது. ஆனால் நடக்கலாம். ஒருத்தர் உடல் எடையைக் குறைக்கும்பொழுது குறையும் வேகம் சீராக இருக்க வேண்டும். கடுமையான பயிற்சி செய்தால் வேகமாகக் குறைக்கலாம். உதாரணத்திற்கு வாரணம் ஆயிரம் சூர்யா , ஐ படத்தில் விக்ரம் குறைத்தது. ஏன் கமல் உடம்பு கூட குறைந்து ஏறி வரும் திறன் பெற்றது. வசூல்ராஜா படத்தி ல்இருக்கும் கமலுக்கும் தசாவதாரம் படத்தில் இருக்கும் கமலுக்கும் விஷ்வரூபம் படத்தில் இருக்கும் கமலுக்கும் வித்தியாசம் இருக்கும். இது எல்லாம் வண்டியை வேகமாக ஓட்டும்பொழுதே கவனிப்புடன் அதே நேரத்தில் வண்டியின் கண்ட் ரோல் முழுக்க நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஓட்டுவது போல் தான். நம்மை மீறி உடல் எடை குறைகிறது என்ற போது தான் பிரச்சினை. ஒரு பாகத்திற்கு எப்பொழுதும் போல இரத்தம் போய் வந்து கொண்டிருக்கும். திடீரெ...

சைரன் பக்க அண்ட் பக்கா 4

உடல் எடை அதிகமாக இருப்பது தான் பிரச்சினை என்றால் குறைப்பதில் பிரச்சினையா என்பது ஒரு வகையான பயத்தை ஏற்படுத்தியிருக்கும் உங்களுக்கு. வழவழ கொழகொழ வேண்டாம். உடல் எடை குறைப்பில் என்னென்ன பிரச்சினைகள் வரும். அதை மனதளவில் உடலளவில் என இரண்டா பிரிச்சுக்கிறேன். முதலில் மனசுல இருந்து ஆரம்பிப்போம்.. எப்படியாவது சாப்பிட்டு விடு என்று மூளை உங்களைத் தூண்டும். க்ரேவிங்க் எனக்கு முதல் எதிரி. இரண்டாவது நேர் எதிராய் சந்திக்கும் ஒரு விமர்சனம். இப்ப மெலிஞ்சு என்ன செய்யப்போற. இந்த மாதிரி விசயங்கள். மூன்றாவது எதற்காக மெலியவேண்டும் என்ற அவசியமும் விழிப்புணர்வும் இல்லாமலிருத்தல். அடுத்ததாக உடலளவில் ஏற்படும் பிரச்சினைகள். நாம் உடல் எடையைத் திடீரெனக் குறைக்க ஆரம்பிக்கிறோம். அதில் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியும் காரணிகளாக இருக்கும். கண்டிப்பாக உடற்பயிற்சி சில வலிகளையும் அசதிகளையும் தரும். நான் போன சைரன் மெலிதல் தொடரில் சொன்னதைப் போல ஓட்டப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்பொழுது நம்ம எப்ப கடைசியா ஓடுனோம்னு யோசிச்சுப் பார்த்தா பதினேழு வருசத்துக்கு முன்னாடினு போகும். திடீருனு ஓடும்பொழுது கால் வலி...

சைரன் பக்க அண்ட் பக்கா 3

கூட்டத்துல ஒரு பச்சை சட்டைக்காரன் நழுவுறான். காசு போடாம போனா இரத்தம் கக்கி சாவான்னு வடிவேல் காமெடி மாதிரி போன பதிவில் ஒரு ஹார்ட் அட்டாக் கதையோடு முடித்தேன். அந்தக் கதை பீதியைக் கிளப்புவதற்கா என்று கேட்டால் இல்லை. ஆனால் உங்களுக்கு பீதியாகிறது என்றால் கம்பெனி பொறுப்பாகாது. கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறோம். நமது அணி பேட்ஸ்மேன் தூக்கி அடிக்கிறான். பந்து பறக்குது. சிக்ஸர் போகப்போகுது. கடைசி கோடு கிட்ட ஒரு உசந்த வெஸ்ட் இண்டிஸ் ஃபீல்டர் எட்டிப் பறந்து அந்தப் பந்தைக் கேட்ச் பிடிச்சிரான். எப்படி இருக்கும் . அப்படித்தான் அந்தக் கதையில் அந்த அண்ணனுக்கு. லிபிட் புரொஃபைல் டெஸ்ட் எடுத்து ஒழுங்கா நடக்க ஆரம்பித்து உணவு முறையை மாற்றியிருந்தால் அந்த ஒரு மாதத்தில் கொஞ்சமாக ஏதாவது தேறியிருப்பார். சேதாரம் அதிகமாகி இருக்காது. எல்லாம் சரி. இவ்வளவு விழிப்புணர்வு இருந்தும் ஏன் எடை குறைப்பு நமக்குக் கடினமாக இருக்கிறது எடை குறைப்பில் நமக்கு பெரும் சிக்கலாக இருப்பதுனு நீங்க என்னென்ன லிஸ்ட்லாம் போடுங்க. எத்தனை காரணிகளையும் சேர்த்துக்கோங்க. என் புருஷன் விடல, என் பொண்டாட்டி விடல. எனக்கு ஆபிஸ் இருக்கு...

ஸ்டெர்லைட்..போஸ்ட்மார்டம்.

என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்விகள் என்னுடையக் கேள்விகள் அல்ல. சிலரது பதிவுகளில் சிலரது வாதங்களில் வந்தவை. அவற்றிற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்று சலித்து சலித்து வைத்தாலும் சில கேள்விகளை நாம் தவிர்க்க முடியாது. அதில் ஒரு கேள்வி ஸ்டெர்லைட் ஆபத்தானது என்று இன்று தான் தெரியுமா. ஏன் இவ்வளவு நாட்கள் போராடவில்லை என்பது போன்ற ஒரு கேள்வி அது சார் இன்னொரு கேள்வி கேன்சர் ஸ்டெர்லைட் மூலமாகத்தான் வருகிறதா அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்பது. தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் வந்தது முதல் பிரச்சினைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த எல்லோர்க்கும் என்பது அரசியல்வாதிகள் தூத்துக்குடி சார் அரசு அதிகாரிகள். பாதுகாக்கப்படவேண்டிய வளைகுடாவிலிருந்து இத்தனை கி.மீ தூரத்தில் தான் இந்த ஆலை இருக்கவேண்டும் என்ற விதி தான் முதல் விதி மீறல். அப்படிப்பார்த்தால் அந்த ஆலையே அங்கு அமைந்திருக்கக்கூடாது. அதை அப்படியே அமுக்கிவிட்டார்கள். இந்தப் பிரச்சினை ஏன் தெரியவில்லை என்றால் இப்பொழுது இருக்கும் சமூகவலைத்தளங்களின் வீச்சு அப்பொழுது இல்லை. இப்பொழுது இருக்கும் சமூக ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பான தொடர்புக...