இடுகைகள்

குட்டுப்பட்டி

குருதிப்புனல் படத்தில் ஒரு காட்சி வரும். கதவு இடுக்கு வழியே கமல் கண்களைக் காண்பித்து ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு என வசனம் வரும். இரசாயணத் துறை மாணவனாக யூடெட்டிக் பாயிண்ட் என நான் அடிக்கடிச் சொல்வதுண்டு. திங்கட்கிழமை நன்றாக இருண்டிருந்த காட்டுப்பகுதி. காட்டுப்பகுதி என்று குறிப்பிடுவதில் அந்த நிலச் சரகம் அடங்கிவிடுவதில்லை. மலைப் பாங்கான வடிவமைப்புக்கொண்டப் பகுதி. நடு ரோட்டில் நின்று பார்த்தால் இருமருங்கிலும் மலைச் சரிவாய்க் காணலாம். அதில் எங்கும் பசுமையாக விவசாயம் நடக்கும். கீழ் பரப்புவரை செடி கொடி மரம் எல்லாமே தாவரங்கள் கற்கள் மணல் இப்படி. நத்தம் என்ற ஒரு கிராமம் தாண்டிய கிராமத்துப் பாதை. ரோட்டை சுத்தமாக வழுவழுப்பாய் போட்டு வைத்திருக்கிறார்கள். நான் வேலை முடித்து வரும்பொழுது இரவு எட்டு. நகர்ப்புற இருளுக்கும் கிராமத்து இருளுக்கும் வித்தியாசம் குளிரும் சீக்கிரம் ஊர் அடங்கிவிடும் தன்மையும். அதனாலேயே கிராமத்து இருளில் அடர் என்ற தன்மை இரு சிட்டிகைக் கூடுதலாக இருக்கிறது. அப்படி இன்டென்ஸ் டார்க் இரவு. யோசித்துப்பாருங்கள். அழகிய கிராமத்துப்பாதை. குளிர் மண்வாசன...

ஹீலர்களின் அரெஸ்ட்

பொதுவாக mocking டைப் பதிவுகள் எனக்குப் பிடிக்கும். போதுமான அளவு க்ரியேட்டிவிட்டி பயன்படுத்த வாய்ப்புகள் அதில் இருக்கும். சில நாட்களுக்கு முன் வந்த வாட்ஸப் பதிவு ஒன்றில் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட்ட ஒருவர் கைது. வீட்டிலேயே குழாய் குடிநீர் குடித்தவர் கைது. இப்படி வீட்டிலேயே பிரசவம் பார்த்தவரும் கைது என்று வந்தது. ஒருவருக்கு முகநூலில் ட்விட்டரில் லைக்குகள் அதிகம் விழுந்துவிட்டால் போதும். அவர் தான் தேவதூதராகி விடுகிறார். அவர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று சிக்கலில் மாட்டுகிறார்கள் மக்கள். வீட்டில் பிரசவம் பார்த்து ஒரு உயிர் பலி. இப்படித்தான் ஒரு சிலரின் சின்ன சைகையால் மக்கள் அவரது திறமைக்கு ஏற்ற உயரத்தைவிட அதிக உயரத்தில் தலையில் தூக்கி வைத்து நிறைய எதிர்பார்ப்பார்கள். இது சார் சிக்கல்களில் இப்பொழுது மக்கள் குழம்புவது வீட்டிலேயே பிரசவம் பார்க்கக்கூடாதா..அலோபதி மருத்துவம் மற்ற வழி மருத்துவத்தை அழிக்கிறதா ...ப்ளா..ப்ளா ..ப்ளா எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். புரியும்படி பேசலாம். நம்ம பாட்டிக்கு நார்மல் டெலிவரி. நமக்கு முந்தையத் தலைமுறைக்கு நார்மல் டெலிவரி.  இப்ப ஏன் இல...

மின்னலைப் போல...

எல்லாமே மின்னலைப் போலத்தான் கடக்கின்றன. யாரும் பார்த்தறியாத் தருணங்களில் கைகளை வேகமாக ஒன்றிணைத்து விடுவித்துக்கொள்வதும்.. ஒவ்வொரு கண்களைப் பார்த்தும் விலகி நம் கண்களுக்குள் மட்டும் சம்பாஷணைகளைத் தொடுத்துக்கொள்வதும்.. சின்னஞ்சிறிய அதனினும் நுண்ணளவிலான ஆசை கொண்டு கொண்டாடியத் தருணங்கள் எல்லாமே மின்னலைப் போலத்தான் கடக்கின்றன. பிடித்தப் பாடலின் அந்த வரிகளைக் குறுக்கிடும்பொழுது பகிர்ந்த முத்தங்களைப் போல மின்னல்களும் கடந்துவிடுகின்றன மேகத்தில் விழுந்தக் கீறல்களைத் தெரியப்படுத்தாமல்.....

இந்த அறையில் நான் மட்டும் தான் இருக்கிறேன்.

இந்த அறையில் நான் மட்டும் தான் இருக்கிறேன். இந்த காலி  இருக்கையில் நீ வந்திருந்தால் அமர்ந்திருக்கலாம். பாதி படித்து  மீதிப் பக்கங்கள்  திறந்தபடியே கிடக்கும் இந்தப் புத்தகத்தை நீ எடுத்துப் புரட்டியிருக்கலாம். ஒழுங்கற்றுக் கிடக்கும் என் மேசைக் காகிதங்களை வரிசைப்படுத்தி நீ அமரலாம். சுவற்றில்  சாய்ந்தபடி தொங்கும் ஒரு பிள்ளையாரை நீ  நேராக்கி வைக்கலாம். நேற்றைய நாளில் இருந்து இன்றைய நாளுக்குக் கிழித்து வைக்கலாம். சமமற்ற மின்சாரப்  போக்கால் குளிர்சாதனப்பெட்டி மின்னழுத்தச் சத்தம்  கொடுக்கையில் தெரிகிறது இந்த அறையில் நான் மட்டும் தான் இருக்கிறேன். மறுபடியும் இந்த இருக்கை காலியாகத் தானே  இருக்கிறது. பாதிப் பக்கங்கள் புரட்டப்படாமல் தானே புத்தகம் திறந்து கிடக்கிறது. ஏதோ ஒரு தனிமை தானே இந்தக் காகிதங்களை வீசியிருக்கிறது. உன்னால் நேராக பிள்ளையார்  வெறும் குறியீடு தானே.. காலண்டர்களில் இன்றுகள் உன்னால் துவங்கப்படாமல் இருக்கின்றன.. என்னைப்போலல்லாது இந்தக்...

பனை விதைக்குள் செங்குத்து நிழல் - சென்றாயன் (முன்வைத்து)

கவிஞர் சென்றாயன் அவர்களின் " பனை விதைக்குள் செங்குத்து நிழல்"                                   தொகுப்பை முன் வைத்து ஒரு கவிதையை நாம் எதற்குப் படிக்க வேண்டும். வாசகனைப் பார்த்துக் கேட்பது போல் ஒரு கவிஞனை அல்லது ஒரு படைப்பாளியைப் பார்த்துக் கேட்க முடியாது. அப்படிக் கேட்பது இங்கு அனைவரின் சார்பாக ஏதாவது ஒரு மன்றத்தில் ஏதாவது ஒரு படைப்பாளிடம் கேட்டிருக்கலாம். ஆனால் ஒரு வாசகனிடம் இப்படிக் கேட்பது மிகவும் ப்ரியம் கொண்டதாக இருக்கிறது. கவிதைகள் பிடிக்கும் என்போரைப் போன்றே கவிதைகள் பிடிப்பதில்லை எனச் சொல்வோரும் உண்டு. சக வாசகன் கவிதையை ஒதுக்க நேரிடும்பொழுது இன்னொரு வாசகன் கவிதை பிடிக்கும் என்பது எப்படி சாத்தியமாகிறது. இலக்கியம் பல வகை ஒழுக்கக் கூறுகளைக் கொண்டது போல் கவிதையையும் ஓர் ஒழுக்கக்கூறாகவே எடுத்துக்கொள்ளலாம். ஒழுக்கக் கூறு என்ற சொல்லாடல் புதியதாக இருக்குமானால் அளவை என்று கூட படித்துக்கொள்ளலாம். கவிதையைக் கையாள்வது கடினமானக் காரியம் என்றே நான் கருதுகிறேன். ஒரு சிறுகதை படிப்பதைக்காட்டிலும் ஒரு ...

மறதி நோய்...Dr Neethiarasu அவர்களின் உரையை முன் வைத்து

08/07/18 அன்று மதுரை வாக்கர்ஸ் க்ளப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் விருந்தினராக வந்த  DR.நீதி அரசு , நரம்பியல் நிபுணர்,மதுரை அவர்களின் சொற்பொழிவை முன்வைத்து.... வாக்கர்ஸ் க்ளப்பில் சில சமயங்களில் மாதாந்திரக்கூட்டம் நடக்கும். அறுபது சேர்கள் கூட்டத்தைப் பார்த்து பார்த்து போடப்படும். பொதுவாக முப்பது நபர்கள் ஆஜர் ஆவார்கள். கூட்டம் ஒரு பெரிய பூங்காவின் நடுவே மரத்தடியில் நடப்பதால் ஆங்காங்கே அமர்ந்திருப்பவர்கள் நடப்பவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே நடப்பார்கள். இன்று நடந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட இருநூறு நபர்கள் இருப்பார்கள். ஆங்காங்கு நின்று டாக்டர் நீதி அரசின் சொற்பொழிவைக் கேட்டார்கள். அதற்கானக் காரணம் இரண்டு. ஒன்று சில மாதங்களாகவே வாட்ஸப் ஆடியோ வழி மருத்துவர் நீதி அரசு அவர்களின் ஆடியோ ஒன்று குழந்தைகளுக்கான நரம்பியல் சம்பந்தமான அறுவுரை ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. இன்னொன்று இன்று எடுத்துக்கொண்டத் தலைப்பு - மறதி நோய் வராமல் தடுக்க என்ன செய்வது. (prevention of Dementia) ஞாபக மறதி அவ்வளவு பெரிய நோயா என்று நீங்கள் கேட்டால் நெட்டை போய் பாருங்கள். நாம் அந்த நோய்க்குள் போய்க்கொ...

அ.நா 301

மழையற்ற ஒரு நெடுஞ்சாலையை நான்குவழிச்சாலையென நீட்டி வெட்டி முழக்க வெற்றிடமாய் இருக்கும் ஒரு பாலையின் நீள் பாதையாய் யாருமற்று இருக்கும் இத்தனிமையை நீங்கச் சொல்பவர்களே,,, மழையெனச் சொன்னால் முழுதும் நனையவும் கடலெனச் சொன்னால் முழுதும் மூழ்கியெழவும் இருக்கும் நடிப்புக்கலைஞர்கள் இன்னொரு நாள் இன்னொரு மழை மற்றொரு நாள் மற்றொரு கடலென திளைத்துத் திரிபவர்கள். கேமரா ஃப்ளாஷ்களின் முன் இமை அசைவற்றுச் சிரிக்கும் உயிர் பொம்மையினங்கள் அவர்கள்.. வெறும் வாயசை சமிக்ஞைகளுக்கு எல்லாம் மொழிகளையும் பொருத்தித் திரிவார்கள். பூக்களின் நடுவே பூக்களாய் ஆடை கடலினடுவே நீர் போன்றாடை மையிட்டு மையல் கொண்டபடி பெண்ணும் அவள் கைகளுக்குள் விழும் ஆணுமென நவநாகரிக கார்ப்பரேட் காதலர்களாய்த் திரிவார்கள்.. வெண் திரை முழுக்க வண்ண வண்ணமயமாய் எல்லாப் பக்கமும் சத்தமென டால்ஃபி சத்தங்களுக்குள் விழுந்து எழுந்து உயிர்ப்பிக்கும் திரையரங்குகளில் ஒளிர்ந்து இன்னொரு நாள் இன்னொரு படமென மறைபவர்கள் அவர்கள்.. முதல் நாள் மாலை பாலென ஆச்சாரக் காட்சியெல்லாம் திரை அமர்ந்த நடுநிசி நேரத்தில் ஓசையற்ற ஒரு தருணமென ...