இடுகைகள்

"நோய்களின் தாய்" நூலை முன்வைத்து...

எழுத்தாளர் டாக்டர்.மணிவண்ணன் எழுதிய "நோய்களின் தாய்" என்ற நூலை முன்வைத்து. இரண்டு வருடங்களுக்கு முன் என் உடல் எடை 86 இப்பொழுது 75 சராசரியாக. இந்த இரண்டு வருடங்களில் நானாக எடுத்துக்கொண்ட அல்லது ஏற்படுத்திக்கொண்ட ஆர்வம் மற்றும் விளைவாக இதைச் சொல்வேன். முகநூலில் "சைரன்" என்ற தொடரும் "சைரன்- பக்க விளைவுகளும்" என்ற தொடரும் இந்த காலகட்டத்தில் தான் எழுதினேன். இவற்றை நோக்கி என்னைத் தள்ளியது இரண்டு நிகழ்வுகள். முதல் நிகழ்வாய், என் அம்மா எப்பொழுதும் பார்க்கும் ஒரு அனுபவம் பெற்ற ஒரு மூத்த மருத்துவரிடம் மேல்வயிறு வலி என்று தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் போக அது சரியாகவில்லை. ஒரு பெண் மருத்துவரைப் பார்த்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமென நான் சொல்ல, மருத்துவரை மாற்ற என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் நிறைய யோசனை. அதனை மீறி டாக்டர். நல்லினி அருள் அவர்களிடம் அழைத்துச்செல்ல , அது வரை அல்சர் என நம்பிக்கொண்டிருந்த எங்களுக்கு அது அல்சர் இல்லை என்றும் , மருத்துவர் எடுத்த கிரியாட்டினின் ஆய்வில் 4 ல் இருந்தது (இருக்க வேண்டியது ஒன்றுக்கும் குறைவு) உடனடியாக ஒரு சிறுநீரக சிறப்பு நிப...

ஃபாசிசமும் மருத்துவர்களும்

நேற்று ஒரு மருத்துவர் , அரசு மருத்துவமனையில் வேலைப்பளு தாங்கமுடியாமல் தற்கொலை செய்துள்ளார். அரசு மருத்துவர்களுக்கு இருக்கும் பணிச்சுமை வெளியே தெரிவதில்லை. அதை விடுத்து பொத்தம்பொதுவாய் எல்லா மருத்துவர்களுக்கும் இருக்கும் அழுத்தம் வெளியே தெரிவதில்லை. ஒரு மருத்துவர் மருத்துவம் படித்து முதுகலை சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப் படித்து வெளியே வந்து சொந்தமாய் க்ளினிக் நடத்த குறைந்தது 12 வருடங்கள் ஆகின்றன. இதில் நீட் என்ற தடைக்கல்லைத் தாண்டி வரவேண்டும். குடும்ப வறுமை அவர்களை அனுமதிக்க வேண்டும். இதில் கடந்த ஜூன் மாதத்தில் க்ளினிக் எஸ்டபிளிஸ்மெண்ட் ஆக்ட் என நம் எடப்பாடி அரசு ஒரு சட்டம் கொண்டு வந்து கிளினிக்குகளை 5000 கட்டி பதிந்துகொள்ள வேண்டும் என்று கூறியது. இது எதற்காக என்றால் கஜானாவில் பணம் இல்லை என்பதற்காகத்தானே ஒழிய வேறு எந்த ஹைகோர்ட்டும் இல்லை. ஒரு மருத்துவன் வெளியே வரும்பொழுது பதிய வேண்டும். பிறகு நர்சிங் ஹோம் கட்ட பதிய வேண்டும். ஆப்ரேஷன் தியேட்டர் வைக்க பதிய வேண்டும். பிறகும் இதை ப் பதிய வேண்டும். கேட்டால் போலி மருத்துவர்களைப் பிடிக்கப்போகிறார்களாம். இல்லாவிட்டால் தெரியாதாம். விட்டுவிடு...

ஹலோ...

. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என்றாலே நவீன் காப்பிக் கடையில் கூட்டம் அதிகம். கவுண்டரில் இருப்பவருக்கு முன் நானகைந்து கைகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன டோக்கன் வாங்க. அதில் ஒரு கை ப்ரவீன் உடன் ஒரே நேரத்தில் நடக்க வருபவர். முதியவர். சமயத்தில் இருவருமே ஒன்றாக நடந்திருப்பார்கள். ப்ரவீன், அவருடைய டோக்கனையும் வாங்கிக்கொண்டு, ஓரமா இருங்க சார். நான் வாங்கிட்டு வரேன் என்று கூட்டத்தின் நடுவே இரண்டு காப்பி டம்ளர்களை வாங்கிக்கொண்டு வந்தான். இருவரும் ஓரமாய் பேசிக்கொண்டே காப்பி குடிக்க, அந்த வயதானவருக்கு ஒரு ஃபோன். ஹலோ... எதிர்புறத்தில் பேசுவது பக்கத்தில் இருக்கும் ப்ரவீனுக்கு லவுட்ஸ்பீக்கர் போடாமலேயே கேட்டது. ஆனால் தெளிவாய் கேட்கவில்லை. ஆங்க்...ஆங்க்..மாப்ள சௌக்கியமா..என்றார் உடன் நடப்பவர். எதிர்புறத்தில் ஏதோஒன்று கேட்க.... ஆமா மாப்ள இப்பத்தான் வாக்கிங்க். நீ என்ன இந்நேரத்துலயே கூப்டுட்ட..... எதிர்புறத்தில் மிக நீளமாய் ஏதோ ஒன்று கேட்க.... அது விசாரிக்கனுமே மாப்ள...என இழுத்தவர்..இரு மாப்ள நல்ல நேரமா கூப்ட...என் கூட ஒரு தம்பி இருக்காப்ல..அவர் மெடிக்கல் ஃபீல்டு தான். அவர்ட்ட ஃபோன குடுக்குறேன். நீ...

தீர்த்தங்கர் ராய் எழுதிய கிழக்கிந்திய கம்பெனி

தீர்த்தங்கர் ராய் எழுதி எஸ்.க்ருஷணன் தமிழில் மொழிபெயர்த்த கிழக்கிந்திய கம்பெனி நூலை முன்வைத்து.... கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கம் வளர்ந்துப் பிரவாகம் எடுத்தல் ...

நீலாஸ் லன்ச்

காலை ஏழரை மணிக்கு ஒரு ஃபோன். இன்னைக்குனு பாத்து காலை சாப்பாடு அந்நேரம் நடந்துட்டு இருந்தது. ஃபோன் பண்ண நண்பன் என்ன அதுக்குள்ள சாப்டுறியானு கேட்டான். அவன் கேட்டது கரெக்ட் தான். நான் அதுக்குள்ள சாப்புடுற ஆளுமில்ல. நான் கூட அப்படி கேட்டுருக்கேன் சில பேரை. மதுரைல டிவிஎஸ் டீலர் சத்யஜோதி னு அப்பாடக்கர் கம்பெனி இருக்கு. அந்த டீலர்ட்ட தான் டிவிஎஸ் செண்ட்ரா பைக் எடுத்திருந்தேன். அவைங்கட்டதான் சர்வீஸும் விடப்போவேன். அங்க இருக்குறவைங்களுக்கு அவைங்க டீலர்ட்ட வேலை பாக்கல டிவிஎஸ் கம்பெனில தான் வேல பாக்குறோம்னு நினைப்ப எவனோ ஆழ் மனசுல புதைச்சுவச்சுட்டாஙைக. சர்வீஸ் விட 12 மணிக்கு போனா..அவைங்களுக்கு அது லன்ச் டைம். டான்னு 12க்குலாம் சாப்டுறாஙைகளே...இவைங்களுக்கு மூணு மணிக்கு பசிக்காதானுலாம் யோசிச்சிருக்கேன். எனக்கு அப்படி டைம் க்கு சாப்பிட வாய்ப்பு கிடைச்சிருக்கானு பாத்தா கண்ண கட்டுது. நான் முதுகலை வேதியியல் படிக்கிறப்ப ப்ராக்டிகல் டைம் எங்களுக்கு காலை ஏழு ல இருந்து மதியம் மூணு வரை. காலை சாப்பாடும் கோயிந்தா மதியம் சாப்பாடும் கோயிந்தா. டிஃபன் பாக்ஸ் கொண்டுவந்தால் ஒரு கை சாப்பிடனும் ஒரு கை ர...

செம்பருத்தி

இது ஒரு மழைக்காலம் தான் அதற்காக ரோட்டில் இந்த அளவு சகதியாக இருப்பதற்குக்காரணம் மழை இல்லை. ரோடு போடுவதற்காக கொட்டப்பட்ட மண் தான். இவர்கள் எப்போதுமே இப்படித்தான். மழைக்காலத்தில் தான் பாதாளச்சாக்கடை போடுவது கேபிளிற்காகத் தோண்டுவது ரோட்டைப் போடுவது என்று செய்வார்கள். அப்படித்தான் ரோட்டைப் போட மண்ணைப் போட்டு சில இடங்களில் பள்ளங்களை நிரப்ப செம்மண்ணைப் போட்டு சாலையைச் செந்நிறமாய் வைத்திருக்கிறார்கள். நகரின் புறநகர் பகுதியில் இருக்கும் முக்கியமான ஒரு பகுதிக்கு இந்தச் சாலை தான் பிரதானம். எல்லாம் குடியிருப்புகள் இருக்கும் சாலை. சாலையில் நடப்பவர்கள் ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிக்கும் தண்ணீருக்கும் ஏற்றபடி தாண்டி தாண்டிச் சென்றார்கள். சோமசுந்தரம் மாமா தான் என் முன் போய்க்கொண்டிருக்கிறார். ஒரு கையில் மஞ்சள் பை வைத்திருக்கிறார். சிவப்பு நிற லெதர் பேட்டா செருப்பின் நுனியில் சற்று சகதி அப்பியிருக்கிறது. இடது கையால் தன் பேண்ட்டை ஏற்றிப் பிடித்தபடி நடந்துகொண்டிருந்தவருக்குப் பின்னால்தான் பஜாஜ் பல்சரில் போய்க்கொண்டு இருக்கிறேன். அரை கிலோமீட்டரில் என் வீடு. அதற்கு நான்கு வீடுகள் முன்னதாகத் தா...

டிவிஎஸ் சேம்ப்

மாப்ள விஷயம் தெரியுமா (இப்படி உரிமையா கேக்குறவன் என் நண்பன் கணேஷ்குமார். இப்பொழுது தொடர்பில் இல்லை. இப்பொழுதுனா இப்பொழுது. ஏன் என்றால் அப்படி அவன் கேட்டபொழுது வருடம் கி.பி 1994. ) சொல்லுடா... அவங்க அப்பா வண்டி வாங்கிருக்காங்களாம். என்ன வண்டி தெரியுஉஉஉமாஆஆஆஆ னு பெருமையா கேட்டான். அப்ப டிவிஎஸ் சேம்ப் பயங்கர ஃபேமஸ். என் சீனியர் உதயச்சந்திரன் அதுல வருவான். ஒரு நாள் அவன் வண்டி ஸ்டார்ட் பண்ணப்ப ஹாரன் அடிச்சேன். சின்னப்பிள்ளைத்தனமா இருக்குல. அப்பலாம் மோட்டர்வண்டிகளை தெரிஞ்சவங்க ஓட்டுறது கம்மி. அப்படி யாராவது இருந்தா அவங்கட்ட அனுமதி வாங்கி ஒரு தடவை ஹாரன் அடிப்பேன். இப்ப கணேஷ்குமார் அப்பா வாங்கிருக்கார். டே..சூப்பருரா...என்ன கலர் சில்வரா.. (சில்வர் தான் உதயச் சந்திரனோடது) இல்லடா ப்ளு... டே சூப்பர்றா..(சூப்பர் டா வத்தான் நாக்கு வளையாம சூப்பர்ர்றா...னு வர்து) இப்ப நான் பக்கத்து வீட்டு நண்பன்ட்ட சொன்னேன். அவன் பேரும் கணேஷ். கணேஷ்னா வெறும் கணேஷ். கணேஷ்ன்ற பேர சுருக்கமுடியல. அவன் என்னுல பாதி அப்ப. ஒரு வயசு ஜுனியர். எது பண்ணாலும் சேர்ந்துதான். பட்டம் விடுறது, பம்பரம் சுத்துறது, ...