இடுகைகள்

பால்கனி அறை.

எங்கள் வீட்டில் ஒரு ஹால் ஒரு அடுப்பறை ஒரு பூஜை அறை ஒரு படுக்கை அறை அது போக ஒரு அறை இருக்கிறது. நடுவே ஹால். ஹாலின் இடப்பக்கம் இரண்டு அறைகள். வலப்பக்கம் இரண்டு அறைகள் என அமைப்பு. கீழ் வீட்டில் இருந்து மாடி வீடு கட்டும்பொழுது கீழே வண்டிகள் வைக்க இருக்கும் முன் காலி இடத்தில் பில்லர் வைத்து அப்படியே மாடியில் ஓர் அறையாக வடிவமைக்கப்பட்டுக் கட்டினது. பால்கனி அறை என்று வைத்துக்கொள்ளலாம். இரண்டு அடி தெருவை நின்று பார்க்கும்படியாகக் கட்டப்பட்டிருக்கும். தெருவிற்கும் நமக்கும் உண்டான பார்வை தூரத்திற்காக ஒரு இரும்பு வலை போட்டு பூசியிருப்போம். திருடர்கள் வரக்கூடாது என்பதற்காக. அந்த அறைக்கு பால்கனி அறை எனப் பெயரிட்டு இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கேன் அல்லவா. அதை அப்படி இன்று இப்பொழுது தான் குறிப்பிட்டுள்ளேன். வீடு கட்டிய ஆரம்பப்பொழுதுகளில் கல்லூரியில் படித்த பொழுது நாங்கள் வளர்த்த டைகர் அங்கு உலவுவான். அந்த பால்கனியில் ஒரு மர ஸ்டூல் போட்டிருப்போம். அதில் ஏறி லாவகமாக அமர்ந்துகொண்டு தெருவை அவர் நோட்டம் இடுவார். அந்த ஸ்டூல் அங்கு அவருக்காக என் அண்ணனால் போடப்பட்டது தான். அது அவருக்கான இடம். அது ...

copy paste ( காப்பி- பேஸ்ட்)

காப்பி-பேஸ்ட் என்ன ப்ரோ தலைப்பு இங்கிலீஸ்ல கொடுத்த்ருக்கீங்கனு சொல்லும் நல் உள்ளங்களுக்கு, தமிழில் தான் டைட்டில் கார்ட் போடனும் அப்பத்தான் ஜி.எஸ்.டி குறையும்னு விதி இல்லாததால அப்படியே தொடருவோம். அதாவது காப்பி-பேஸ்ட்னு தலைப்பு பாத்ததும் உடனே நமக்குள்ள இருக்குற பில்கேட்ஸ்கள் இது ஏதோ கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்டதுனு ஜெர்க் ஆகி ஓட்டிவிடவேண்டாம். இது வேற காப்பி பேஸ்ட். ஒருத்தன் செய்றதை பார்த்து அப்படியே அடுத்தவன் எந்தச் சேதாரமும் கலக்காம அப்படியே காப்பி அடிப்பான்ல அந்த வகையறா. உதாரணத்துக்கு, நம்ம நால் வழிச்சாலை வழியா போவோம். அப்ப ஏதாவது ஒரு சின்ன ஊருக்கு ரோடு உள்ள இறங்கிப் போகும். இல்லாட்டி ஊருக்கு மேல பாலமா போகும். நீங்க பாத்துருப்பீங்க. அப்படி நால்வழிச்சாலை போட்டுட்டு அதுவரைக்கும் கிராமம் வழியா போன வண்டிக எல்லாம் ஊருக்குவெளியே பைபாஸ்ல போகுதுனு ஊர்காரைங்க பாப்பானுக. அதுல ஒரு பிஸினஸ் மேக்னட், ஊருக்கு வெளியே பைபாஸ் சந்திப்புல ஒரு டீக்கடைய போட்டா என்னானு யோசிப்பான். அந்த யோசனைக்குலாம் உடனே கிடைக்குற தாத்தா காலத்து ஐடியா , ஐயங்கார் பேக்கரி . ஒவ்வொரு ஊருக்கும் வெளியே ஸ்வீட் பப்ஸ் காரம் மசாலாபால்...

சிவப்புப்பணம்- பாலகுமார் விஜயராமன்

எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் எழுதிய , 'சிவப்புப்பணம்' நாவலை முன்வைத்து... ஓர் இரவில் தங்கள் கையில் இருக்கும் பணம் செல்லாக்காசு என அறிவிப்பை நாட்டின் அரசாங்கம் வெளியிடுகிறது. ஒட்டுமொத்த தேசமும் பைத்தியம் பிடித்து அலைகிறது. கையிருப்புப் பணத்தைத் தக்க வைத்தலும் அதைச் செல்லும்படியாய் மாற்றவுமென ஒரு தேசமே அலைய ஆரம்பித்த வாதையின் காலம் அது. கடந்த பத்தாண்டுகளில் நடக்கும் வரலாற்றுச் சோகம் அது சார் நடந்த நிகழ்வுகள்.  சிவப்புப்பணம் நாவல் அந்த துன்பியல் சோகத்தின் ஒரு சிட்டிகை எடுத்து அதைப் பிரித்துக் காட்டுகிறது.  எழுத்தாளர் புனைவு என்று ஒப்புக்குக் கூறினாலும் தேசத்தின் மூலையில் எங்கோ நடந்திருந்த சம்பவமாகவே படுகிறது. வலிமை மிகுந்த எதேச்சதிகார ஆட்சியாட்களின் நெருக்கடிக்கு உள்ளாகும் பல பிரபலங்களை நினைவுபடுத்தியபடி  யாருமற்ற முதியவளுக்குத் தன் பணமே பலமென்ற நினைப்போடு இருந்த முதியவளுக்குப் பணமதிப்பிழப்பில் விழுந்த இடியின் வலியை உணரச்செய்தபடி ஏதாவது ஒரு கட்டத்தில் எதையாவது பற்றி எழுந்திட எத்தனிக்கும் ஒரு குறுந் தாவர மனதோடு போராடும் சாமான்யர்களை கண் முன் நிறுத்தியபடி சிவப்புப்பணம் வண்ணம...

க்யூ

க்யூ ஃபீவர் என்றழைக்கப்படும் க்யூ என்ற மின் புத்தகத்தை முன்வைத்து... கதையின் மையச் சரடிற்கும் என் தொழிலுக்கும் நிறைய சம்பந்தங்கள் உண்டு. நோய் ,மருத்துவர், மருத்துவம் போன்ற காரணிகளால் கதை கட்டமைக்கப்பட்டதே அதற்குக் காரணம். என்னால் ஒரு குறு நாவலை வேகமாகப் படிக்கமுடிந்ததற்கும் அதே காரணம். நோயாளிகள் வாழும் மருத்துவமனை படுத்துக்கிடக்கும் படுக்கை ஐசியூக்கள் பயிற்சி மருத்துவர்களின் வாழ்க்கை என எல்லாமே நான் நேரில் கேட்பதும் பார்ப்பதுமான எதார்த்தக் களம் இந்த க்யூ. கீழிருந்து மேல் ஒரு நிகழ்வும் மேலிருந்து கீழ் ஒரு நிகழ்வும் மையத்தில் ஒரு நிகழ்வும் ஒருங்கிணைய கதை முழு பெற்று உரு அடைந்து முடிகிறது. க்ளாசிக் வகைமையான நாவல்களிலிருந்து பின்நவீனத்துவ படைப்பாளிகள் தன்னை வேறுபடுத்திக்காட்டிக்கொண்டாலும் க்ளாசிக் வகைமை வர்ணனை எழுத்துகளையும் கதை போக்கையும் தக்கவைப்பார்கள். புதியதாய் உருவெடுத்துவரும் இளம் படைப்பாளிகளில் சிலர் , புதியதாய் வாசிக்கவருவோர்க்கு நல்ல சுவாரஸ்யத்தை அள்ளித்தருகிறார்கள். வாசிக்க அயர்ச்சியாய் உணரும் புதிய வாசகர்களை வாசிப்புப்பழக்கம் நோக்கி நகர்த்த இது போன்ற சுவாரஸ்ய கதைசொல்லிக...

ஆண்டவரே....

எப்படி ஒரு சிலுவையைத் தாங்குகிறீர்கள் ஆண்டவரே.. விரும்பியேற்றுக்கொண்ட ஒன்றைப்போல அதையும் ஏற்றுக்கொண்ட வலியை எப்படித்தாங்குகிறீர்கள் ஆண்டவரே.. போலி புன்னகையின் பரிசாக ஒரு துரோகத்தின் பரிசாக வலியை எப்படித் தாங்குகிறீர்கள் ஆண்டவரே.. உங்கள் மீது மழைத்துளி விழுந்ததுண்டா.. சிலுவையில் விழுந்த அதே துளியின்  பாரவலியை  எப்படித் தாங்குகிறீர்கள் ஆண்டவரே... யாரேனுமொருவர் கனிந்து உங்களிடம் பேசியது உண்டா ஆண்டவரே... உங்கள் சிலுவையின் வலியை அவர்களிடத்துச் செவிகளில் உங்களால் சேர்க்கவியலாத் துயரத்தை  எப்படித் தாங்குறீர்கள் ஆண்டவரே... யாரேனுமொருவர் கருணையுற்று உங்களைக் கண்டதுண்டா.. அவர்களிடத்து நின்று கூடு இழந்த ஒரு தாய்க்குருவியின் சிறகடித்தலைச் சொன்னதுண்டா  ஆண்டவரே... எந்தப் பாவத்திற்கான தண்டனை இந்தப் பாழாய்ப்போன அன்பை யாசித்தலென ப்ரியமானவர்களிடம் யாசித்ததுண்டா ஆண்டவரே.... இத்தனை சிலுவைகளை எப்படித் தாங்குகிறீர்கள் ஆண்டவரே..  

மழைக்குருவி

உங்களுக்கெல்லாம் காது இல்லாதபோது தான் அந்த மழைக்குருவி அழுகிறது. உங்கள் மீது பட்டுத் தெறிக்கும் எல்லாத் துளிகளுக்குமே நீங்கள் வெறுப்படையத்தேவையில்லை. தானாய் விழுந்து பிறகு கலைந்து போகும் வானவில்லைப் போல வளைந்தொழியும். அதுவரையாவது குடை பிடிக்காதிருங்கள். உங்களை நனைத்தப் பாவத்திற்காகத்தான் கரைந்தொழுகுகிறது ஒரு மெழுகைப் போல..

"நோய்களின் தாய்" நூலை முன்வைத்து...

எழுத்தாளர் டாக்டர்.மணிவண்ணன் எழுதிய "நோய்களின் தாய்" என்ற நூலை முன்வைத்து. இரண்டு வருடங்களுக்கு முன் என் உடல் எடை 86 இப்பொழுது 75 சராசரியாக. இந்த இரண்டு வருடங்களில் நானாக எடுத்துக்கொண்ட அல்லது ஏற்படுத்திக்கொண்ட ஆர்வம் மற்றும் விளைவாக இதைச் சொல்வேன். முகநூலில் "சைரன்" என்ற தொடரும் "சைரன்- பக்க விளைவுகளும்" என்ற தொடரும் இந்த காலகட்டத்தில் தான் எழுதினேன். இவற்றை நோக்கி என்னைத் தள்ளியது இரண்டு நிகழ்வுகள். முதல் நிகழ்வாய், என் அம்மா எப்பொழுதும் பார்க்கும் ஒரு அனுபவம் பெற்ற ஒரு மூத்த மருத்துவரிடம் மேல்வயிறு வலி என்று தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் போக அது சரியாகவில்லை. ஒரு பெண் மருத்துவரைப் பார்த்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமென நான் சொல்ல, மருத்துவரை மாற்ற என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் நிறைய யோசனை. அதனை மீறி டாக்டர். நல்லினி அருள் அவர்களிடம் அழைத்துச்செல்ல , அது வரை அல்சர் என நம்பிக்கொண்டிருந்த எங்களுக்கு அது அல்சர் இல்லை என்றும் , மருத்துவர் எடுத்த கிரியாட்டினின் ஆய்வில் 4 ல் இருந்தது (இருக்க வேண்டியது ஒன்றுக்கும் குறைவு) உடனடியாக ஒரு சிறுநீரக சிறப்பு நிப...