copy paste ( காப்பி- பேஸ்ட்)

காப்பி-பேஸ்ட்

என்ன ப்ரோ தலைப்பு இங்கிலீஸ்ல கொடுத்த்ருக்கீங்கனு சொல்லும் நல் உள்ளங்களுக்கு, தமிழில் தான் டைட்டில் கார்ட் போடனும் அப்பத்தான் ஜி.எஸ்.டி குறையும்னு விதி இல்லாததால அப்படியே தொடருவோம்.

அதாவது காப்பி-பேஸ்ட்னு தலைப்பு பாத்ததும்
உடனே நமக்குள்ள இருக்குற பில்கேட்ஸ்கள் இது ஏதோ கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்டதுனு ஜெர்க் ஆகி ஓட்டிவிடவேண்டாம். இது வேற காப்பி பேஸ்ட்.
ஒருத்தன் செய்றதை பார்த்து அப்படியே அடுத்தவன் எந்தச் சேதாரமும் கலக்காம அப்படியே காப்பி அடிப்பான்ல அந்த வகையறா.
உதாரணத்துக்கு, நம்ம நால் வழிச்சாலை வழியா போவோம். அப்ப ஏதாவது ஒரு சின்ன ஊருக்கு ரோடு உள்ள இறங்கிப் போகும். இல்லாட்டி ஊருக்கு மேல பாலமா போகும். நீங்க பாத்துருப்பீங்க.
அப்படி நால்வழிச்சாலை போட்டுட்டு அதுவரைக்கும் கிராமம் வழியா போன வண்டிக எல்லாம் ஊருக்குவெளியே பைபாஸ்ல போகுதுனு ஊர்காரைங்க பாப்பானுக. அதுல ஒரு பிஸினஸ் மேக்னட், ஊருக்கு வெளியே பைபாஸ் சந்திப்புல ஒரு டீக்கடைய போட்டா என்னானு யோசிப்பான். அந்த யோசனைக்குலாம் உடனே கிடைக்குற தாத்தா காலத்து ஐடியா , ஐயங்கார் பேக்கரி .
ஒவ்வொரு ஊருக்கும் வெளியே ஸ்வீட் பப்ஸ் காரம் மசாலாபால் சகிதம் ஒரு ஐயங்கார் பேக்கரி இருக்கும். உண்மையிலேயே இந்த ஐயங்கார் யாருனு தெரியல. எல்லாப்பயலும் அவர் பேர் ல பேக்கரி ஆரம்பிக்கிறாய்ங்க. சிலருக்கு உள்ள குத்தும்போல. ஒரு இடத்துல போதும்பொண்ணு ஐயங்கார் பேக்கரி னு போட்டு இருந்தானுக. ஐயங்காருக்கு வந்த சோதனை அது.இப்படி ஒருத்தன் பேக்கரி போட்டதும் அது நல்லா டெவலப் ஆகும். இத பார்த்ததும் ஊருக்குள இருக்குற இன்னொருத்தன் ஆஹா நம்ம பங்காளி ஊர் எல்லைல பேக்கரிய போட்டு செட்டில ஆகுறானேனு அவனும் அதுக்கு எதிர்த்தாப்புல இன்னொரு பேக்கரிய போடுவான். கொஞ்சம் பாசக்காரனா இருந்தா ஒரிஜினல் ஐயங்கார் பேக்கரினு பேர வைப்பான். அப்புறம் அடுத்தவன் அப்புறம் இன்னொருத்தன். அந்த ஊர் பிரிவையே காணாம போகுற அளவுக்கு பத்து கடை வந்திரும். ஊர்லயே மொத்தம் நூறு குடும்பம் தான் இருக்கும். அதுல பத்து பேர் கடை வச்சிருப்பானுக. இவன் கடைல குடிச்சா அவன் கோபிப்பான். அவன் கடைல குடிச்சா இவன் கோபிப்பானு, அந்த ஊர்காரைங்க எவனும் அங்க எந்த கடைலயும் குடிக்கமாட்டான். நம்மள மாதிரி எவனாவது வண்டிய நிப்பாட்டி அட் ரஸும் தண்ணீ கேனும் வாங்குனாத்தான் உண்டு. கடைசில ரெண்டு பேர் நட்டப்பட்டு போவான். இதான் காப்பி பேஸ்ட் தலைப்புக்கான அச்சாணிங்க. ஒருத்தன் ஒரு விசயத்த செய்றானு நம்மளும் செய்றது சரிதான். அப்படியே காப்பி அடிச்சு வாழ்க்கைல பேஸ்ட் பண்ணா செட் ஆகுமா.

96னு ஒரு படம். த்ரிஷ்ஷுவும் விஜய்சேதுபதியும் ஏர்போர்ட்ல நிக்குற போஸ்டர் இருக்கும். அந்தபடம் ஹிட். இத பாத்துட்டு கன்னடத்துல 99னு எடுத்தாஙைக. அதே மாதிரி ஏர்போர்ட்ல நிக்கவச்சு போஸ்டர் போட்டாஙைக. ஆனா என்ன..அவைங்க ஏதோ ஏர்போர்ட்ல நோட்டிஸ் கொடுக்குற ஆளுக மாதிரி நிண்டாஙைக.ஒரு விசயத்த ஒருத்தன் பண்ணிட்டானா கொஞ்சமாது மாத்தனும்ல.

இன்னொரு காப்பி-பேஸ்ட் சொல்றேன்.

நான் முதுகலை படிச்ச சமயம். எங்க வகுப்பு.

ஒவ்வொரு வரிசைக்கும் ஆறு பேர்.

வலது பக்கம் பெண்கள் மூணு பேர்

இடது பக்கம் ஆண்கள் மூணு பேர்னு வரிசை இருக்கும்.

மாணவிகள் வரிசைல முதல்ல உட்காந்திருக்கிறது ஜாஸ்,மெர்சி,சுமதி னு மூணு பேர். இவங்களாம் ஐ ட்விஸ்ட்டர்ஸ். அதாவது செமினார் எக்ஸாம் ப்ராக்டிக்கல்னு நல்லா படிச்சு ரேங்க்ல வந்து க்ளாஸே ஆஆஆ னு பார்க்கும். அப்டி ஐ ட்விஸ்டர்ஸ்.

அதே முதல் வரிசைல பசங்க சைடுல ஜெயக்குமார், ரமேஷ் அப்புறம் ஷாத் ஷாத் பழனிக்குமார்ன்ற பிரகஸ்பதி. இந்த மூணு பேரும் கூட ஐ ட்விஸ்ட்டர்ஸ் தான். உடனே மேல சொன்ன எக்ஸாம் செமினார்னு போகாதீங்க. க்ளாஸையே ஆஆஆஆனு பாக்ககூடிய ஐ ட்விஸ்ட்டர்ஸ்.

நான் முதல்வரிசைன்றனால க்ளாஸ கவனிச்சே ஆகவேண்டிய கட்டாயம். கண் திறந்துக்கிட்டே தியானம் பண்ற கலையும் ஜென் நிலைக்குப் போற வித்தையையும் அந்தப் பருவத்தில தான் நான் கத்துக்கிட்டேன்றதை சபைக்குத் தெரிவிச்சுக்கிறேன்.

அந்தப்பக்கம் ஜாஸுக்கும் மெர்சிக்கும் ஒரு பழக்கம்.

புரோபஃஸர்ஸ் நோட்ஸ் சொல்லும்போது வேகமா எழுதி யார் முதல்ல எழுதிமுடிக்கிறோம்னு மாத்தி மாத்தி பேனா காண்பிச்சுக்கோங்க.

ஜாஸ் எழுதிட்டா மெர்சிட்ட பேனா நீட்டுவா. மெர்சி எழுதிட்டா ஜாஸ்ட்ட. ரெண்டு பேரும் ஒரே நேரத்துல சார் சொல்ல சொல்ல எழுதி பேனாவ நீட்டுனா சியர்ஸ் பண்ணிக்கிற மாதிரி பேனாவ தட்டிக்கிருங்க. க்ளாஸைக் கவனிக்கிறதோடு மட்டுமில்லாம இந்தப் பிள்ளைக பேனா சியர்ஸ் பண்ணிக்கிறத கவனிக்குற மாபெரும் காரியத்த நானும் ரமேஷும் செஞ்சுட்டு இருந்தோம்.

இது ஒருகட்டத்துல யார் முதல்ல எழுதி முடிக்கிறாங்களோ அவ இன்னொருத்தி நோட்டுல கிறுக்குவா. சமயத்துல ஜாஸும் மெர்சியும் நோட்டுல மாத்தி மாத்தி கிறுக்கி விளையாடுங்க. அஃப்கோர்ஸ் முன்னாடி புரோஃபஸர் க்ளாஸ் எடுக்குறப்பதான் இது லாம் நடக்கும்.

ஒருவாட்டி இது நடந்தப்ப நான் பக்கத்துல இருந்த ரமேஷ தட்டி, டே டே ரமேஷ் இதுமாதிரி நம்மளும் விளையாடுவோமா னு கேட்டேன்.

அந்தப் பிள்ளைக நோட்டுல லேசா கிறுக்கிட்டா டக்குனு அடுத்தப் பக்கம் திருப்பிருங்க.

நான்லாம் அப்படி வளரல. வீட்டுக்கு எவனாவது உள்ளாடை உலகம் அம்பது சதவீத ஆஃபர்னு பிட்டு நோட்டிஸ் வீசிட்டுப்போயிருப்பான். அதலாம் சேத்துவச்சு ஒன் சைட் தான் பிரிண்ட். இன்னொரு சைட் காலியாருக்குனு அதுல பத்தாவது படிக்கிறப்பவே அல்ஜிப்ரா எழுதி பாத்தவன்.

நான் பரவால. நம்ம நண்பன் ரமேஷ் உள்ளாடை உலகத்துக்கும் அம்பது சதவீத ஆஃபர் வரிக்கும் நடு கேப் லயே எழுதி பார்த்தவன்.. நல்ல நோட்டுல கிறுக்குற விளையாட்டுக்கு ஒத்துக்குவானா...

சின்னப்புள்ளதனமா...சும்மாருடானுட்டான்.

நான் விடல. இன் ஆர்கானிக் புரோஃபஸர் பாடம் நடத்திட்டு இருந்தார். நான் எட்டி ரமேஷ் நோட்டுல கிறுக்குனேன்.

பயபுள்ள ஜாஸ் மெர்சி மாதிரி சிரிப்பானு பாத்தா பதிலுக்கு என் பக்கம் திரும்பி என் நோட்டுல கிறுக்குறேனு இழுத்ததுல பேப்பர்ல பேனாவால ஓட்டையபோட்டு நோட்ட கீழ இழுத்து தள்ளிவிட்டுட்டான். அம்புட்டுத்தான்...புரோஃபஸர் பாத்துட்டார்..

.என்ன பண்ணனு ரமேஷ்ட்ட கேட்டார். அவனாவது சமாளிச்சிருக்கனும். என் நோட்டுல கிறுக்கிட்டான்சார்னு என்னைய பாத்து சொன்னான்...

பாவம் புரோஃபஸர். இன்னோசன்ட் மேன். எம்எஸ்ஸி படிக்கிறபசங்க பண்ற காரியமா இதுனு வருத்தப்பட்டார். அப்புறம் கொஞ்சநேரம் திட்டுனார். அப்புறம் போர்ஷன முடிக்கனுமேனு க்ளாஸ கண்டின்யூ பண்ணார்.

அங்குட்டு ஜாஸும் மெர்சியும் சிரிக்குதுக...

அப்ப கத்துக்கிட்டதுதான் காப்பி பேஸ்ட் பண்ணா கொஞ்சமாவது க்ரியேட்டிவா யோசிச்சு பண்ணனும்னு..

இதைக் காப்பி பேஸ்ட் பண்ணப்போகுபவர்கள் பழனிக்குமார்னு பெயர்போட்டு பேஸ்ட் செய்யவுமென விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....