தொத்தல்....

வணக்கம் மக்களே..!சென்னை போக வேண்டும் என்று ஒரு திட்டம். நண்பனின் சகோதரன் திருமணம். பத்திர்க்கை கையில் வந்த போது தேதி மூன்று மாதம் கழித்துதான்.

நமது சுறுசுறுப்புத்தன்மைக்கு எறும்புலாம் பிச்சை வாங்கவேண்டும்.
சென்னைக்கு ரிசர்வ் இந்தா பண்ணலாம் அந்தா பண்ணலாம் னு மூன்று மாதம் ஆகிவிட்டது. இன்னும் 15நாட்கள் தான்.
சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணவில்லை.
 இருந்தாலும் புகைவண்டி யில் என்ன நிலைமை எனப் பார்த்தால் எல்லா ட்ரெயினும் ஹவுஸ்ஃபுல்.

சரி அடுத்த கட்டம் பேருந்து.

முதலில் சென்னையிலிருக்கும் இன்னொரு நண்பனுக்குத் தொலைபேசியில் அழைத்து நான் வருவதைச் சொன்னேன். அவன் வீட்டில் தான் தங்கப்போகிறோம்னு நமக்குத் தெரியும். பாவம் அது அந்த பயபுள்ளைக்குல முதலில் தெரியனும்ல. 
சொன்னேன்.
 நண்பனின் இல்லம் அம்பத்தூர் அவுட்டர். மதுரையிலிருந்து செல்லும் ஒரு தனியார் ஆம்னி பஸ் ஒன்று மட்டும் அம்பத்துர் வரை செல்கிறது.  அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அதில் டிக்கெட் எடுக்கும்படிச் சொன்னார்.
கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணா
 மாட்டுத்தாவணிக்கு புதிதாக மாறுதல் ஆகியுள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்டிற்குள் செல்கிறேன். 
புத்தம் புதிது. 
ஆதலால் மக்கள் அதை அசிங்கப்படுத்த போதிய அவகாசம் கிடைக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் கெடுத்துருவானுக. சரினு உள்ள போனா பாதி ஆபிஸ் திறக்கவேஇல்ல. பிரபலமான நிறுவனங்கள் திறந்திருக்கு.. மீதி எல்லாம் திறக்கல..
.. மணி ஒரு எட்டு இருக்கும். 
கொஞ்சம் பிஸியான நேரம் தான். 
ஒவ்வொரு ஸ்டாலா பாக்குறேன். 
நண்பன் சொன்ன ட்ராவல்ஸ் இருக்கானு...நம்ம நேரம் ..அது இல்ல.

நண்பனுக்கு தொலைபேசியில் அழைக்கிறேன். பஸ் ஆபிஸ் எங்க இருக்கு. புதுசுன்றனால அவங்களுக்கு ஆபிஸ் போடல...கடைசில நிக்கும் பாரு னான்.
ஒரு புது பஸ் ...அத மேலும் கழுவிக்கிட்டு இருந்தானுக..

பக்கத்துல போய் நிற்கிறேன் .
நிற்க.
 பஸ்ஸுக்கு அடில இருந்து பனியனோட ஒரு சின்னப்பையன் வெளிய வந்தான்.
என்னண்ணே
சென்னை போகனும் னு மட்டுந்தான் சொன்னேன்.... அந்தப்பையன் அண்ணே அண்ணே னு அவனோட மேலதிகாரி ஒருத்தர் போல அவரக் கூப்பிட ஓடுறான்...

டேய் நான் இன்னைக்குப் போகலடா பத்து நாள் கழிச்சுத்தான்டா....னு எங்க சொல்ல...அவன் இருட்டுக்குள்ள ஓடிப்போய் மறஞ்சுட்டான்.....

ஒருத்தர் வந்தார். வயசு 50 இருக்கும்.
இருட்டுல பார்த்தாலும் தெரிகிற நரைமுடி.
ஆள் நிறம் வெளிச்சத்தில பாத்தாலும் மங்குன கலர் தான்.
சார் வாங்க சார்
பஸ் 10 க்குத் தான் கிளம்பும்...டிபன் சாப்டு வாங்க சார் னார்.
இல்லண்ணே 27ம் தேதி தான் போகனும்...
அப்டியா சார்...வாங்க சார்..
சீட் இருக்குமா...
அதுலாம் இருக்கும் சார்
புக் பண்ணனுமா.....
பஸ்ல புக் பண்ணுங்க சார்....
அதான் ஆபிஸ் எங்க இருக்கு
நமக்கு ஆபிஸ் இல்ல சார்
அப்புறம் எப்படி புக் பண்றட்து....
பஸ் ல புக் பண்ணுங்க சார்...
(என்னது குழப்பமா இருக்கா...திரும்ப திரும்ப டைப் பண்ணிருக்கேனானு பாக்காதீங்க.....)
அந்த பிரகஸ்பதி சொன்னது ரெட் பஸ் ஸாமாம்.....

உங்களுக்கு ரெட்பஸ்லாம் அக்கவுண்ட் இருக்கா....சரினு புக் பண்றேன்.

கேமராவ கட்பண்ணி ஆன் பண்ணா கம்யூட்டர் முன்னாடி நிக்குறேன். மன்னிக்கவும் அமர்ந்திருக்கிறேன்.
அது ஒரு வரைபடம் காமிக்குது. அந்த பஸ் படுத்துக்கிட்டே போகலாம்ங்கிற வசதி கொண்டது. 
இடது பக்கம் தனித்தனி படுக்கை. வலது பக்கம் இரண்டு இரண்டு பேரா படுக்க வசதி கொண்டது. நான் தனியாத் தான் போறேன். அப்ப எந்தப் பக்கம் செலெக்ட் பண்ணனும்...
இடது பக்கம் தானே?
(என்னடா இவன் பாடம் நடத்துறானேனு பார்க்கிறீங்களா மக்களே....ட்விஸ்ட்ட கவனியுங்க)
நான் இடது பக்கம் செலெக்ட் பண்றேன். 
கிடைச்சிருச்சு. 
நிற்க.
இப்ப மறுபடியும் கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணுங்க. 
சினிமால நாடகள் ஓடுறத காலண்டர் பேப்பர பறக்கவிடுவாங்கள அப்படி பண்ணா...
நான் மாட்டுத்தாவணில நிக்குறேன்.
இன்று இரவு தான் பயணம். நேரம் பத்து மணிக்கு பேருந்து.
இப்பொழுது மணி ஒன்பது.
பஸ் நிற்கிற இடத்துக்கு வர்றேன்.
பேருந்து நிறுத்துமிடம் னு ஒரு போர்டு.
பிரபலமான பஸ் நிறுவனங்கள்லாம் முன்னாடியே ஆபிஸ் எடுத்துக்கிட்டதால கூட்டம்லாம் முன்னாடியே இருக்கு. நான் நிற்கிற இடம் கடைசி.
லைட்டு கூட இல்லை.
என்ட பேசுன நரைமுடி பிரகஸ்பதிக்கு ஃபோன் அடிக்குறேன்.
நம்ம நேரம் எப்படி இருக்கும்.
நாட் ரீச்சபிள்.
பலே வெள்ளையத்தேவா...
முடிஞ்சதா எழுநூறு ஓவா....
மறுபடியும் ஃபோன் பண்றேன்.
ரிங் போகுது...
எடுக்குறார்
அண்ணே! பஸ் புக் பண்ணிருக்கேன். சென்னைக்கு...பஸ் நிக்குற இடத்துல தான் நிக்குறேன். பஸ் எப்பண்ணே..வரும்...னு கேட்டா
அவர் இப்பத்தான்...' ஹலோ..' ன்றார்.
(அப்புறம் என்ன பண்றது மறுபடியும் காப்பி பேஸ்ட் தான்...
அண்ணே! பஸ் புக் பண்ணிருக்கேன். சென்னைக்கு...பஸ் நிக்குற இடத்துல தான் நிக்குறேன். பஸ் எப்பண்ணே..வரும்
எங்க நிக்குறீங்க சார்
மாட்டுத்தாவணில
பஸ் வந்திருச்சா..( நல்லா கவனிங்க மக்களே.. அவர் என்ட்ட கேக்குறாரு)
நாசமா போச்சு...நம்ம மைண்ட் வாய்ஸ்
அண்ணே! பஸ் வரல இன்னும்..
வரலையா...(அதிர்ச்சியா கேக்குறார்)
( ஏன்யா அதிர்ச்சியா கேக்குற..)
ஆமாண்ணே
இருங்க சார்னு கட் பண்ணிட்டார்..
(விடிஞ்சிரும்..  )
அஞ்சு நிமிஷம் ஆச்சு.  
மறுபடியும் கூப்பிட்டேன்.
சார் பதினொரு மணிக்கு வாங்க...போயிரலாம் னார் (அவரும் வருவார் போல)
வேற வழி..அங்கேயே நிக்குறேன்.
பஸ்ஸடேண்ட் கடைசி
லைட்டு இல்ல
கூட்டம் இல்ல
நான் மட்டும் தனியா
இது போதாதா...
ஒரு போலிஸ் பைக்ல வந்தார்
ஏற இறங்க பார்த்தார்
போயிட்டார்
(முகத்துலேயே தெரியும் போல )
அஞ்சு நிமிஷம் கழிச்சு இன்னொரு போலிஸ் வர்றார்
அடாடாடாடாடாடாடா கொடைக்காணல் மலைக்குள்ளும் தேனி காட்டுக்குள்ளும் மாவோயிஸ்ட் திரிகிறானுகளாம்.
அவைங்கள விட்ருங்க..
பஸ்க்கு வெயிட் பண்றவன்லாம் முறைங்க..

இவரும் முறைச்சார் போயிட்டார்.
நல்ல வேள அடுத்த போலிஸ் வர்றதுக்குள பஸ் வந்திருச்சு.

கூட்டத்துக்குள இருந்து ஒரு அஞ்சு டிக்கெட் ஓடி வந்தது.
நான் தான் முத ஆளா ஏறுறேன்...(விடுவோமா...)
பஸ் ல இடதுபக்கம் தான தனித்தனி படுக்கை...நான் அதுல தான் புக் பண்ணியிருக்கேன்.
7ம் நம்பர் படுக்கை.
ஸ்கிரீன் போட்டுருக்கு.
ஸ்கிரீன்ன விலக்கப் பாக்குறேன்.
உள்ள யாரோ புடிக்கிறாங்க..
என்னடா இது னு வேகமா விலக்கப்பாக்குறேன்.
உள்ள இருந்து ஒரு பொண்ணு எட்டிப்பார்த்து...'நொச்சு..' னு சொல்லுச்சு...
நான் என்னமோ அந்தப் பிள்ளைய வேணும்னு எட்டிப்பார்த்தமாதிரி...
இப்ப நான் என்ன பண்ண...
எனக்குப் பின்னாடி அந்த அஞ்சு பேரும் பைய தூக்கிட்டு நிக்குறானுக...
தள்ளுங்க தள்ளுங்கனுட்டு நிக்குறாங்க.

திருச்செந்தூர் கோயில்க்குள்ள ஸ்பெஷல் டிக்கெட் எடுத்து சன்னிதி முன்னாடி இருக்குற இத்துனுன்டு இடத்துல கூட தள்ளி நிக்கலாம்  ஆனால்இந்த ஆம்னி பஸ்ஸுக்குள தள்ளவும் முடியாது விலகவும் முடியாது..
க்ளீனர் மாதிரி ஒரு பையன் டிரைவர் கிட்ட நின்னுகிட்டு சார் முன்னாடி போங்க ன்றான்.
என் சீட்டு 7 னு சொல்றேன்.
அது தான் சார் ஏழு போங்க சார் ன்றான்.
எனக்கென்னமோ ஏழ முன்னப்பின்ன பாக்காத மாதிரி...
உள்ள ஆள் இருக்குங்க..
அடுத்த சீட் போங்க சார் ன்றான்
அந்த சீட்டுல ஸ்கிரீன விலக்குறேன்..
உள்ள இருந்து 'நொச்சு' னு ஒரு லேடி வாய்ஸ்.
(அடாடாடாடா...ஏம்மா தாய்மார்களே ஆம்னிபஸ்ல பெண்களுக்கெதிரா வன் கொடுமை  னு பேஸ்புக்குல ஸ்டேடஸ போட் ராதீங்கமா....எல்லாரும் 'நொச்சு'னுபானுக..)
தம்பி இங்கயும் ஆள் இருக்கு பா...
எதிர்த்த சீட் போங்க சார்..
அதாவது டபுள் பெட்..
மேல் தளம்
இருட்டா இருக்கு
ஒரு ஆள் படுத்துருக்கார்.
அவர் பக்கத்துல படுக்கனும்.
நல்லா கூர்ந்து கவனிச்சா அவர் சாய்ந்து உக்காந்திருக்கார்.
எனக்குத்தான் படுத்திருக்க மாதிரி தெரியுது.
அவர் பாக்க ஒரு குட்டி அம்ஜத்கான் மாத்ரி இருக்கார்.
கொஞ்சம் தள்ளிக்கோங்க னேன்..
(அவர் எங்க தள்ளுறது....)
ஏறி படுத்துக்கிட்டேன்..
பஸ்ல எல்லாரும் படில தொத்தி பார்த்திருப்பீங்க...
பஸ்க்குள்ள தொத்தி பாத்தது இல்லையே....
அன்னைக்கு நடந்தது.
ஐய்யா டிரைவரு பஸ்ஸ குலுக்காம ஓட்டுய்யா...
குலுக்கி ஓட்டுறேனு உள்ளுக்குள என்னைய ஓட்டிவிட்டூராத.

சார் எங்க போறீங்க ( அண்ணே ஆரம்பிச்சார்)
சென்னை சார்
சென்னைல?
அம்பத்தூர் சார்
நானும் அங்கதான்
நாசமா போச்சு அம்பத்தூர் வரை நான் தொத்தல்தானா...

அண்ணனுக்கு இப்ப ஃபோன் வருது
ம்ம்...சொல்லு..
அந்தப்பக்கம் என்னமோ கேக்குறாங்க
ஏறிட்டேன்...
மதுரை..
இல்ல...
இன்னும் இல்லை( அநேகமா சாப்டியா னு கேட்டுருப்பாங்க போல)
(நம்ம கிரிமினல் மூளைய உபயோகிச்சு பாத்ததுல அண்ணனுக்கு பேசுறது அண்ணி போல)
இனி தான் சாப்பிடனும்.
நீ சாப்பிட்டியா..
ஏன் (அண்ணி இன்னும் சாப்டல போல)
இப்படியே நான் ஒரு ரெண்டு கிலோமீட்டர கடத்திட்டேன்.
திடீருனு வை வை னு ஃபோன கட் பண்றார் அண்ணன்.

அடுத்த ஃபோன்.
ம்ம்...சொல்லு..(இதுலயும் இப்படித்தான் ஆரம்பிக்குறாரு)
ஏறிட்டேன்...(அதே கேள்வி போல... ஆள்தான் வேற)
இல்ல...
இன்னும் இல்ல
நீ சாப்டியா...
ஏன்..(அவங்களும் சாப்பிடல போல
( ஆஹா பாரபட்சமில்லாம அண்ணன் அக்கறையா இருக்காரு...நமக்கு நானூறு கிலோமீட்டரும் கிளுகிளுப்பா போகும் போலேயே)
ஏன் சாப்டல...(டேய்...அப்பத சாப்டியா னு கேட்டியே அது அண்ணியா...இல்ல இப்ப சாப்டியா னு கேட்டியே இது அண்ணியா..இல்ல ரெண்டுமே அண்ணியா...என் கிரிமினல் மூளைக்கு கிரிமினால்டி பத்தாது போலேயே..)
அரை மணி நேரம் வண்டி (அண்ணன் வண்டியும் தான்) ஓடுச்சு.
ஒரு வழியா ஃபோன கட் பண்ணிட்டார்.

சாப்டீங்களா...(இப்ப என்னை பாத்து கேக்குறார்...)
(ஆனாலும்ணே..நீ சாப்டியா சாப்டியானே எல்லாத்தையும் கரெக்ட் பண்ணிருக்கீங்கண்ணே!)
நான் சாப்டேன் சார்...
இப்ப அண்ணன் செல்லுக்கு மெசேஜ் வந்தது...
ஐ! அண்ணன் மெசேஜ் பாத்து சிரிக்கிறார்...

இன்னிக்கு சிவராத்திரிதாண்டா பழனிக்குமாரோய் னு என் மனச்சாட்சி குஜால் ஆயிட்டான்...

அப்படி இப்படி னு அண்ணன் புரண்டு படுத்து கடலை போட ஆரம்பிச்சார்.

எனக்கு நேர் எதிரா இருந்த ஒரு படுக்கை ல ஒரு பையன் யார்ட்டயோ பேசிக்கிட்டு இருக்கான்...

வெளிய தலைய லைட்டா பஸ்ஸோட நடைபாதைல விட்டு பாத்தேன். ஒவ்வோர் சீட்லயும் லைட்டா ஒரு செல்ஃபோன் லைட்டு எரிஞ்சது...

கொய்யாலே...இன்னிக்கு ஒரு பயலும் தூங்கமாட்டான் போலேயே...

இப்ப வந்த ஒரு மெசேஜ்க்கு அண்ணே சிணுங்கி சிரிக்கிறார்.

( டேய் அண்ணா.. என்ன கருமம்னாலும் பண்ணு..சிணுங்க மட்டும் செய்யாத...நானே தொத்திட்டு வர்றேன்)

வண்டி பத்து நிமிஷம் நிக்கும் னு சத்தம்.

நிற்கட்டும்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8