ஸ்பைஸ் ஜெட் பஸ்..
ஒரே தடவை மதுரை டூ சென்னை க்கு
விமானத்துல எவ்வளவுனு பார்த்தேன். தப்பாயா..
எந்த வெப் சைட் போனாலும் விளம்பரம் வருது. சென்னை இப்ப போறியா...எங்க சர்வீஸ்ல போறியா..நாளைக்கு போறீயா..இப்படியே விளம்பரம்.
ஒரு ப்ளாஷ் மெயில் வந்தது. 1100 ரூபா. மதுர டூ சென்னை அப்படினு. 4000 ஓவால 10 சதவீத தள்ளுபடினு போட்டானுக, 30 சதவீத தள்ளுபடினு போட்டானுக, 50 சதவீத கேஷ்பேக்னு போட்டானுக. எதுக்குமே அசையல. பாத்தானுக 1100 ஓவானு போட்டு அசைச்சுட்டானுக. சரினு உள்ள போயி டிக்கெட்ட போட்டேன்.
ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே அந்த இணையதளக்காரன் மெயில் தினமும் அனுப்ப ஆரம்பிச்சான்.
நீ போகப்போற ஃப்ளைட் கரெக்ட் டைம்கு வருதானு இதுல செக் பண்ணுனு ஒரு லிங்க்.
அங்க எதுவும் திங்குறியா, அப்ப பர்கர இங்க ஆரடர் பண்ணுனு ஒரு மெயில்.
இப்படி நம்மள எப்பவும் பறக்குற மொமேன்டலேயே வச்சிருந்தானுக.
பன்னிரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒருவாட்டி விமானத்துல போயிருக்கேன்.
நண்பர்களோடு க்ரூப்பா, எப்படி போனோம் , எங்க டிக்கெட் வாங்குனோம், எங்க லக்கேஜ் வச்சோம் எல்லாமே க்ரூப்பா போனதுனால தெரியல.
இந்த வாட்டி தனியா. அதுனால ஒரே திரிலிங்க்.
கிளம்ப இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு மெயில். ஆன்லைன் செக்கிங் பண்ணிக்கோனு.
அதாவது மக்களே, ஏர்போர்ட்ல நீங்க டிக்கெட் வாங்கிட்டு போனாலும் அந்த சர்வீஸ் கவுண்டர்ல போயிட்டு அதை கொடுக்கனும் . அந்த ஆளுங்க நம்ம உக்காருறதுக்கான சீட் நம்பர ஒதுக்கி தருவானுக. ஆனாலும் இந்த பணக்கார ஆளுங்க அங்க போயி க்யூல நிண்டு அத வாங்க யோசிப்பாங்க இல்லையா, அதுனால ஆன்லைன் செக்கிங். நீங்களே உங்க டிக்கெட் நம்பர வச்சு அந்த வெப்சைட்ல போயி உங்களுக்கு பிடிச்ச சீட்ட ஃபிக்ஸ் பண்ணிக்கிறது. அதான்ப்பே......பஸ்ஸு பஸ் ஸ்டான்டுக்குள்ள வர்றதுக்குள்ளே ஜன்னல தொத்திட்டு துண்டு போடுவோம்ல அதோட அப்டேட்டட் வெர்ஷன் தான் ஆன் லைன் செக்கிங் இன் . அப்படி நானும் ஒரு சீட்ட துண்டு போட்டு வச்சுட்டேன்.
இது இவ்வளவு அறிவா பேசுதே எல்லாம் தெரிஞச பேயோனு யோசிக்காதீங்க மக்களே...
இதுக்காக ஒரு மூணு பேருக்கு போன் பண்ணீ கேட்டுக்கிட்டேன். அதுல உரிமையா கேட்டது நம்ம சிங்கப்பூர் சகோ முருகேசன் ட்ட தான்.
அவருக்கு போன் பண்ணீ ஆன்லைன் செக்கிங் னா என்ன னு கேட்டேன். அவர் இன்டர்நேஷனல் ல இருந்து லோக்கல் ஃப்ளைட் வரைக்கும் விளக்கம் கொடுத்தார். அது ஒரு அஞ்சு நிமிஷம் போச்சு.
அப்புறமா அவர் எப்படி போவாருனு எனக்குப் புரியுற மாதிரி ஒரு உதாரணம் சொன்னாப்புடி.
அது ஒரு ஏழு நிமிஷம் போச்சு.
எல்லாம் கேட்ட பின்னாடி அவர்ட்ட கேட்டேன்,
சகோ இதுலாம் ஓகே, இப்ப நான் ஏர்போர்ட்டுக்குள்ள நுழைஞ்சதும் என்ன பண்ணனும், எங்க போகனும்னு சொல்லுங்கனு சொன்னேன். பாவம் மனுசன் போன்ல சத்தத்தையே காணாம்.
விடிய விடிய கதை கேட்டு ஃப்ளைட்டுக்கு எத்தன கண்டெக்டர்னு கேட்ட கதையா போச்சு...
அவர் பாவம் அமைதியா இருந்தாப்புடி.
நான் சொன்னேன், ' ப்ரோ, நான் கொஞ்சம் தர டிக்கெட்.... எனக்கு உள்ளே போனதுல இருந்து சொல்லுங்க.
அப்புறம் மனுஷன் நம்மள ஃபோன்லேயே ஏற இறங்க பார்த்துருப்பாரு போல.
உள்ள போகனுமாம். எந்த விமான கம்பெனியோ அங்க போயி நிக்கனுமாம்.
அவர் சொல்லிட்டு இருக்கிறப்பவே நான் முந்திரிகொட்டையா, இந்த லக்கேஜ்லாம் சினிமா படத்துல காமிப்பானுகள...சுத்திட்டே வரும்ல அதுல போடனுமானு கேட்டேன்.
அவர் பல்ல கடிச்சுக்கிட்டாரு போல. எல்லாத்தையும் சொன்னார்.
இப்ப வாங்க நான் எப்படி போனேனு பாக்கலாம்.
மதுரை விமான நிலையம் .
ரிலையன்ஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல பொருள வச்சு சேட்டு வீட்டு ஆண்ட்டிகளுல்லாம் தள்ளிட்டு போற வண்டி ஒரு இருபது வச்சிருந்தானுக. அது நமக்குத் தேவைப்படல...வாசலுக்குப் போனேன்.
ஒரு செக்யூரிட்டி. டிக்கெட் இருக்கானு கேட்டார்.
கொடுத்தேன்.
ஐடி கேட்டார்.
கொடுத்தேன்.
மூஞ்சிய ஒருவாட்டி பார்த்தார். அவருக்கு டவுட்டு. நான் கொடுத்தது ஆதார் கார்டு. அதுலதான்யா தீவிரவாதி மாதிரி இருப்பேன். நேருல கொஞ்சம் தயிர்சாதம் னு நினைச்சுக்கிட்டு உள்ளே போனேன்.
பெரிய வெயிட்டிங்க் ஹால். நம்ம போறது ஸ்பைஸ்ஜெட். அந்த கவுண்டருக்குப் போகனும்னு தேடுனேன். சுத்தி சுத்திப் பார்த்தா கவுண்டரே இல்ல. அதுக்குள உள்ள நிண்ட மூணு செக்யூரிட்டி என்னையவே பார்த்தானுக. எங்க கவுண்டருக்கு போறதுக்குள்ள என் கவுண்டர் ஆயிருமோனு போயி சேர்ல உக்காந்துட்டேன். நமக்கு ஃப்ளைட் 11.30க்கு. ஆனா இன்னைக்கு லேட்டு. 12.45க்கு. நம்ம் ஆர்வக்கோளாறுல 10 மணிக்கு வந்தாச்சு. சுத்தி கவனிச்சதுல ஒரு நாலு அஞ்சு டிக்கெட் பக்கா தர டிக்கெட் நம்மள மாதிரி. முதன் முதலா ஃப்ளைட்டுல வராங்க. அதுல 2 தாத்தா பாட்டி. 2 அண்ணன் மார்கள், அடக்கம்.
ஒரு அப்பா அம்மா. மக வீட்டுக்கோ , மகன் வீட்டுக்கோ வந்துட்டு போறாங்க. பேத்திட்ட ஃபோன்ல பேசுறாங்க. கையில தேனி ஆனந்தம் சில்க்ஸ் கட்டப்பை. நம்மாளுகய்யானு ஒரு சந்தோசம். அந்த அப்பா சொல்றாரு, இல்லம்மா, ஏரோட் ராம்ல இருக்கேன்...(ஆஹா ஆஹா....இந்த ஏரோ ட்ராம் ன்ற வார்த்தைய கேட்டு எவ்ளோ நாளாச்சு) . வண்டி இன்னும் வரலையாம். சூப்பர் நமக்கு கம்பெனிக்கு ஆள் இருக்கு.
ஸ்பைஸ்ஜெட் கடைய திறந்தானுக. அதான் கவுண்டர திறந்தானுக. சிவப்பு மேலாடை. கீழாடை போட்டுருக்கானுக. பரவால.
சிவப்பு யூனிஃபார்ம்க்கு சிவப்பு கலரே லிப் ஸ்டிக் போடனும்ன்றது ஃபார்முலா . அதுக்காக ஒரு பொண்ணு மூணு பேரு போட வேண்டிய லிப்ஸ்டிக்க தடவிட்டு வந்திருக்கு. பெயிண்ட் அடிச்சு தான் அந்தப் பொண்ணுக்கு உதடே தெரியுது.
அந்தம்மா தான் கவுண்டர்ல நிண்டுச்சு.
டிக்கெட்ட கொடுத்தேன்.
யுவர் நேம் ...னு கேட்டுச்சு.
சொன்னேன்.
ஐடி கேட்டுச்சு.
கொடுத்தேன்.
அப்புறம் என்னமோ கேட்டுச்சு.
எனக்கு கேக்கல...
லக்கேஜ்னு கேட்டுச்சு.
தூக்கி காமிச்சேன்.
கேபின்? அப்படினு கேள்வி கேட்டுச்சு.
அதாவது கையில வச்சிருக்கிற லக்கேஜ் பேரு கேபின் லக்கேஜ்ஜாமாம்.
யாருக்குத் தெரியும். முன்ன பின்ன செத்தா சுடுகாடு தெரியும். இந்த விசயத்துல ஃப்ளைட்ல போயி பதிமூணு வருசம் ஆச்சு. சுடுகாடு அட் ரஸ் மறந்துபோச்சு.
அந்த உதட்டை வரைஞ்சுட்டு வந்த பொண்ணு போர்டிங் பாஸ் கொடுத்துச்சு. மேல போயி உட்காருனு ஒரு டேக் கையும் கையில கொடுத்துச்சு.
மேல போனேன்.
அங்க ஒரு செக்யூரிட்டி.
போர்டிங்க் பாஸ் கேட்டார்.
கொடுத்தேன்.
ஐடி கேட்டார்.
கொடுத்தேன். (யோவ் வர்ற தீவிரவாதிகள்லாம் விட்டுருங்க. தயிர்சாதத்துட்ட இத்தன தடவ ஐடி வாங்கி பாருங்க...)
லக்கேஜ் கேட்டார்.
காமிச்சேன்.
டேக் எங்கனார்.
காமிச்சேன்.
ஹிந்தில ஏதோ சொன்னார்.
வாட் னு அற்புத ஆங்கிலத்துல கேட்டேன்.
அதுக்கும் அந்த ஆசாமி ஹிந்தில ஏதோ சொன்னார்.
அதாவது அந்த டேக் க நான் கொண்டு வந்திருக்குற பையில கட்டனுமானு கேட்டேன்.
ஆமானார்.
பக்கத்துல பைய வச்சு அந்த டேக்க தமிழ்னாட்டு மாப்பிள்ளை பொண்ணு கழுத்துல போடுற மூணு முடுச்சு போடுற மாதிரி போட ஆரம்பிச்சேன்.
அவர் சிரிச்சுட்டார்.
என்னனு பார்த்தா, அந்த டேக் க போட ஒரு டெக்னிக் இருக்கு. இழுத்து விட்டார். அது டபக்குனு டேக்காயிருச்சு பையோட.
மிஸ்டர் முருகேசன் ப்ரோ, செக்கிங்க்லாம் சொன்னீங்க இந்த டேக் மேட்டர சொல்லலையேனு கேக்கனும் அவர்ட்ட.
உள்ள போயி உக்காருங்கனார்.
அங்க ஃப்ளைட் ஓடி வர பாதைய பார்த்துட்டே உக்காந்திருந்தேன்.
ஸ்பைஸ் ஜெட் வந்தது. லக்கேஜ்லாம் ஏத்துனானுக.
ரொம்ப லேட்டா வரான். நிண்டு நிண்டு போவான் போல டவுன்பஸ் மாதிரி.
உண்மையிலேயே ஸ்பைஸ்ஜெட் ன்றது மதுரை டூ தேனி போற பஸ்ஸோட பின் நவீனத்துவ வடிவம் தான் போல. மொக்கை சர்வீஸ் அது.
உள்ள விட்டானுக.
ரெண்டு பொண்ணுங்க அதாவது ஏர் ஹோஸ்ட் ரஸ் நிண்டுக்கிட்டு கடனுக்கு ஹலோ ஜீ...அப்படினு வெல்கம் பண்ணுச்சுக. பதிமூணு வருசத்துக்கு முன்னாடி போன ஏர் இண்டியா ஏர் ஹோஸ்ட் ரஸ்ன்ற பேர்ல இரண்டு பாட்டிகள வேலைக்கு வச்சிருந்தது ஞாபகம் வந்தது.
போயி சீட்ல உக்காந்தாச்சு. ஜன்னலோர சீட்டு.
அவனவன் செல்ஃபி எடுத்தான். இப்ப அது ஒரு சமுதாய கடமை. நம்மளும் அதை பண்ணிட்டு ஜன்னல் வழியா ஃபோட்டோ எடுத்தேன்.
இந்தப் பிள்ளைக ஏதோ அபிநயம் பண்ணி சீட் பெல்ட் போடுறது தண்ணிக்குள்ள விழுந்துட்டா எப்படி தப்பிக்கிறது சொல்லிட்டு இருந்ததுக.
அதுல ஒருத்தி வேகமா வந்து என் வரிசைல வந்து நிண்டு என்ட்ட ஏதோ கேட்டா.
அதுல ஜன்னலோரமா நானு, என் பக்கத்துல இரண்டு பொதுஜனம்.
அவ கேட்டதும் என் பக்கத்துல இருக்குறவரு கையில அவைங்க மெனு கார்ட வச்சு பாத்துட்டு இருந்தாரு.
அவ கேட்டதும் அவர் தான் பாத்துட்டு இருந்த மெனு கார்ட கொடுத்தார்.
அவ வேணாம்னு கையால ஆட்டி என்ட கேட்டா.
ஒரு வேள நம்ம மெனு கார்ட தான் கேக்குறா போல னு முன்னாடி இருந்த சீட்டுல சொருகி வச்ச மெனு கார்ட கொடுத்தேன்.
அது அதுனு ஹிந்தில ஏதோ கேட்டா, இந்த கையில இருக்குறதானு டிக்கெட்ட கொடுத்தேன்.
மொபைல் போன்...அப்படினு கேட்டா...
அது எதுக்குனு...அதை கொடுத்தேன்.
அதுல கேலரிய தேடி ஓபன் பண்ணா, பண்ணி ஃபோட்டாவ காட்டுனா
எந்த ஃபோட்டா வேணும்னு கேட்டேன்.
என்னைய எடுத்தேல அந்த ஃபோட்டவ காட்டுனு சொன்னாள்.
நான் உன்னைய எடுக்கல, நான் எதுக்கு உன்னைய எடுக்கனும்னு கேட்டேன்,
ம்ச்னு இச்சு கொட்டிட்டு போயிட்டா.
என்ன கொடுமை குமாரு....அவ எதுக்கு இப்ப ம்ச்சு கொட்டுறா நான் ஃபோட்டோ எடுக்கலனா....இதுக்குத்தான் மோடி ஹிந்தி படி ஹிந்தி படின்னு சொல்றாரு. இந்த தமிழ் பயலுக படிக்கவிடாம பாருங்க....ஒரு ஆரியக்கார பிள்ள ம்ச்சு கொட்டிட்டு போயிருது. (அப்பப்ப பாலிடிக்ஸ்ல டிரெண்ட் பண்ணுவோம்ல....)
ப்ளைன் மெதுவா கிளம்புச்சு...
வாவ் டேக் ஆஃப்... காலைல சாப்பிட்ட ஒரு வெங்காய தோசைய திருப்பி போட்டு சுட்டு இருக்கத் தேவையே இல்லை. பைலட்டு தூக்குன தூக்குல வயித்துக்குள்ள தோசை தன்னால திரும்புது...
மேல வந்துட்டாரு....
நம்ம ஃபோட்டாவா அள்ளி வீசிட்டு இருக்கோம்....
பயபுள்ள மதுர பெரிய ஊராத் தெரியுது....எங்கயும் தண்ணிய காணாம்..
கொஞ்ச நேரத்துல மேகம் தெரியுது. எல்லாம் பொடிசு பொடிசா தெரியுது.
பக்கதுல இருந்த அண்ணன் எட்டிப்பார்த்து சார் அங்க பாத்தீங்களானார்.
அவர் காமிச்ச இடத்துல ஒரு ஆறு போன இடம் தண்ணி இல்லாம இரண்டா பிரிஞ்சு போயிருந்தது.
அது ஸ்ரீ ரங்கம் சார் னார்.
எனக்கு ஆச்சரியம். ச்ச.....எவ்வளவு உசரத்துல பறந்தாலும் ஸ்ரீ ரங்கத்த அண்ணன் பாத்துட்டாப்புடி..
ஒரு வேள கோபுரம் தெரியுதோ..னு நானும் உத்து பார்த்தேன். தெரியல..
எப்படினே சொல்றிங்கனு கேட்டேன்.
ஆறு இரண்டா பிரிஞ்சு போனா அது ஸ்ரீ ரங்கம் னார்

பரவால லாஜிக் இருந்தது.
அடுத்து ஒண்ணு சொன்னாரு பாக்கனுமே. மதுரை டூ சென்னை எப்போதும் திருச்சி வழி தான. அதான் ஸ்ரீ ரங்கம் னார்.
யோவ் அள்ளிப்போடுய்யா, பஸ் தான் திருச்சி வழியா போகும். ஃப்ளைட்டுமா. விட்டா அங்க கேண்டின்ல நிப்பாட்டி வெங்காய வடையும் டீயும் குடிக்க கேப்பானுக போலேயே.
கொஞ்ச நேரத்துல ஃப்ளைட்டு கடலுக்கு மேல பறந்துச்சு.
இப்ப நம்ம டர்ன். விடுவோமா,
பக்கத்துல இருக்குற அண்ணன கூப்பிட்டு , கடல் ண்ணே னு சொன்னேன்.
அவர் எட்டிப்பார்த்தார். ஆமா சார் னார்.
நான் விடல. அண்ணே! வண்டி இராமேஸ்வரம் வழியா போகுதோனு கேட்டேன்.
கோபுரம் தெரியுதானு கேட்டார்.
(வாடா வா......ங்கொய்யாலே..) இல்லண்ணே...அலை கம்மியா இருக்குல...இராமேஸ்வரக் கடலுல அலை கம்மியாத்தான் இருக்கும்ண்ணே னேன்.
ஆமா உங்களுக்கு அது பக்கம்ல னார்.
அண்ணனுக்கு எந்த ஊர் னு கேட்டேன்.
புதுக்கோட்டையாம்.
அது இராமேஸ்வரமே தான்.
அது என்ன ...பைலட்டுக்கு அப்படி ஒரு குறும்பு னு தெரியல..கடலுக்கு மேல போறப்ப வண்டிய ஒரு குலுக்கு குலுக்குறாரு...
அவர் வண்டிய குலுக்க குலுக்க ஒரு ஏர்ஹோஸ்ட் ரஸ் பின்னாடி திரும்பி கேமராவ பாத்து சிரிக்குது.
யோவ்...பைலட்டு ..நீ வண்டிய குலுக்கி ஏர் ஹோஸ்ட் ரஸ கரெக்ட் பண்ண எங்க வயித்துக்குள்ள இருக்குற வெங்காய தோசைய ஏன்யா திருப்புற....
யப்பாடி...சென்னை வந்திருச்சு....

கருத்துகள்
கருத்துரையிடுக