இடுகைகள்

அமெரிக்காவின் புதிய அதிபர் ..

 எப்பொழுதும் இல்லாமல் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளில் மும்மரமாய் இருக்கிறோம்.  ட்ரம்ப் தோற்றுக்கொண்டிருக்கிறார் என்பது இந்திய சமூக வலைதளங்களில் மகிழ்ச்சிப் பெருக்கைக் காண்பித்தது. நம் நண்பர்கள் ட்ரம்ப் பற்றிய கேலி சித்திரங்களையும் மீம் களையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்கள். முடிவு அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்படுவதற்கு முன்பே ட்ரம்ப் பின் பின்னடைவைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம்.  இதுவரை இல்லாத ஒரு வல்லரசின் அதிபரை இத்தனைக் கேலிகளுக்கு உள்ளாக்கியிருக்கிறோமா என்றால் ஞாபகம் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் ட்ரம்ப் தான் காரணம் என்பது நிதர்சனம்.  ட்ரம்ப் தன் முட்டாள்தனங்களை மறைக்கத்தெரியாதவரா என்று தெரியவில்லை.  பதவியோ , வயதோ அல்லது பாதுகாப்பிற்கு இருக்கும் வசதிகளோ அவருக்குத் தடையாய் இருக்கவில்லை , தன்னுடைய தாந்தோன்றித்தனமானப் பேச்சிற்கு.  அவர் என்ன நினைத்தாரோ அதைப் பற்றிப் பேச அவரே முடிவெடுத்துக்கொண்டார். தன் கிறுக்குத்தனங்களின் வாயிலாக ஏகாதிபத்தியங்களின் நிழலை அவர் பரப்ப நினைத்தார்.  உலகின் பல மூலைகளிலிருந்து ட்ரம்ப் பற்றி எள்ளி நகையாட அவரே வாய்ப்பு வழங்கினார்....

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 4 கல்லூரி முடித்ததும் என்ன வேலைக்குப்போகலாம் என்றுலாம் யோசிக்கவில்லை, இரண்டு தீர்மானங்கள். ஏதாவது பள்ளிக்கு , என் ஆசையான ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிப்பது, இரண்டாவதாக  எந்த வேலை கிடைத்தாலும் செய்வது.  மெடிக்கல் ரெப் வேலைக்கு இன்டர்வ்யூ வந்தது. எந்த பஸ் வருகிறதோ அதில் ஏறிவிடவேண்டும் என்ற மனநிலை தான். சரியான பஸ் சரியான நேரத்தில் தான் ஏறியிருக்கிறோம் என்பதை உணர சில ஆண்டுகள் பிடித்தாலும் கூட , ஆரம்பகட்டம் படு மோசமானவை.  அப்பா அம்மா வின் முகத்திற்காகப் பெண் கொடுக்கலாம், ஆனால் பையன் தான் ரெப்பு வேல பாக்குறான்...என்று இழுத்துப்பேசியவர் என் கண்களை நேருக்கு நேராய் பார்த்திருந்தார்.  என் மீதும் நான் பார்க்கும் வேலை மீதும் அவர் வைத்திருந்த அந்த அவமரியாதை பார்வையை மறக்கமுடியாது. முதல் மாதம் திண்டுக்கல் அவுட்ஸ்டேஷன் வொர்க். மதுரையிலிருந்து திண்டுக்கலுக்குப் பஸ் ஏறி, அங்கு வாடகை சைக்கிள் எடுத்து, ஓட்டி வேலை பார்க்கவேண்டும்.  முதல் நாள் பேருந்து நிலையத்திலிருந்து மாலை ஒரு மருத்துவரைப் பார்க்க வியர்த்து விறுவிறுத்துப் போய்க்கொண்டிருக்கிறே...

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 1

 மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் முதன் முதலாகக் கம்பெனியில் சேரும்பொழுது அவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.  கம்பெனி பயிற்சியின் போது அவர்களது ஒரிஜினல் முகத்தைத் தூக்கியெறிந்துவிட்டு கம்பெனியின் இயல்பை அவர்களது முகத்தில் அவர்கள் அறியாமலேயே ஏற்றிவிடும்.  நான் வேலைக்கு வருவதற்கு முன்பே என் நண்பன் ஒருவன் மெடிக்கல் ரெப்பாக இருந்தான். அவனுக்கென்று ஒரு மேனேஜர் இருந்தார். அவர் அவனுடன் ஒரு நண்பனைப் போல பழகிக்கொண்டிருந்தார். எனக்கு அதைப் பார்த்ததும் எல்லா மேனேஜர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்று பட்டது. ஆனால், நான் வேலைக்குச் சேர்ந்ததும் எனக்கு வந்த முதல் மேனஜர் எனக்கு ஐந்தாம் வகுப்பு எடுத்த ஆயுதலட்சுமி டீச்சரின் ஆண் வடிவம். அவ்வளவு கடுமை என்று அப்பொழுது பட்டது. (பிறகு இலகுவான மனதுக்காரர் என்று நான் புரிந்துகொண்டேன்) ஒரு மருத்துவர் முன் ஒரு ரெப் எப்படி நிற்கவேண்டும் , எப்படி அமர வேண்டும் எப்படி பார்க்கவேண்டும் என்று என் உடல்மொழியை மாற்றினார். அப்படி அவர் சொல்லிக்கொடுத்த பல விசயங்களை இன்னும் நான் செய்துகொண்டிருக்கிறேன். அதில் ஒன்று , எவ்வளவு நெருக்கமான டாக்டராக இருந்தாலும் அவர்...

எங்கே இருக்கிறீர்கள் பாலு...

எங்கே இருக்கிறீர்கள் பாலு.. நெடுநாட்களாக நீங்கள் எங்களுடன் தான் இருந்திருக்கிறீர்கள் என்பதும் நீங்கள் இனியில்லை எனும்போதுதான் தெரிகிறது. பெரும்வாதையும் நெடிய கோடையும் சூழ்ந்திருந்த ஒரு தருணத்தில் தான் 'இளவேனில் உன் வாசல் வந்தாடும்' என்று பாடியிருந்தீர்கள் பாலு.. கண்களை மூடி நின்ற  அத்தருணங்களிலெல்லாம் ஏதோ ஒரு காற்று நெற்றி தழுவி போனதாயிருந்தது.. உங்கள் மூச்சுக்காற்றிற்குத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாத உங்கள் பாங்கு பாலு.. யாரிடமோ யாரோ  இறைஞ்சுகிறார்கள்.. அழுதுவிடக் கூட அவர்களுக்கு ஒரு குரல்  தேவைப்பட்டது... உங்கள் குரலில் வேண்டுவதெல்லாம் கிடைப்பதாக நம்புகிறார்கள் பாலு . 'நானும் கம்பன் தான் கொஞ்சும்போது...'என எவனோ ஒருவன் எவளோ ஒருத்தியைக் கொஞ்ச உங்கள் குரலைக் கொஞ்சம் கை மாற்றாய் கேட்கிறான்.. மெழுகைத்  தீயேற்றாமல் உருக்குகிறது  பாலு அந்தக் குரல்.. 'இதயமே..இதயமே' என  ஒருவனுக்குச்  சாய  உங்கள் குரல் தான் இருக்கிறது பாலு... நீங்கள் காற்று.. எப்பொழுதும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் மழை... கைகளில் தூக்கிய முதல் குழந்தையின் வெம்மை பாலு.. முதல் முத்தம் உங்கள் ...

அருணன் எழுதிய ' தமிழ் இலக்கிய (வழி) வரலாறு நூலை முன்வைத்து..

வசந்தம் வெளியீட்டகம் வாயிலாக , அருணன் எழுதிய ' தமிழ் இலக்கிய (வழி) வரலாறு' நூலை முன்வைத்து.... பழனிக்குமார் மதுரை. கால ஓட்டம் என்பது பத்தாண்டுகளாக, இருபது ஆண்டுகளாக, நூற்றாண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. அதனூடே வரலாற்று நிகழ்வுகளாக அரசியல் மாற்றங்கள், புரட்சிகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் நியாய அநியாய தர்க்க மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிகழவும் செய்கின்றன.  தமிழ்மொழியின் இலக்கியங்களின் வாயிலாக அவற்றைப் படைத்த புலவர்கள், கவிஞர்கள் அவரவர் காலத்து அழகியலை, துன்பியலை ஆவணப்படுத்தியிருக்கின்றனர்.  ஒரு பருவத்து தர்க்க மோதல்கள் அடுத்த பருவத்திலும் தொடர்கின்றன.  அப்படியான தர்க்க வாதங்களில் கலந்துகொள்வோர் குறிப்பாக நியாயத்தின்பால் நிற்போர், அறம் பேசுபவர் கடந்த கால அறத்தின் சிந்தனைப் போக்குகளையும் அதற்கு மாற்றாய் விளம்பிய தர்க்கங்களையும் அறிந்துகொள்ளவேண்டும். திராவிடர் கழக அரசியல், கம்யூனிச சித்தாந்த அரசியல் காலகட்டம் தலைதூக்க ஆரம்பிக்கையில் அதன் தொண்டர்கள் மேற்கொண்ட வாசிப்பனுவ வாழியல் முறை அவர்களது நியாயம்சார்போராட்டங்களுக்கு வலு சேர்த்தது.  நாம் கடந்துவந்த வரலாறை நம...

'வைன் என்பது குறியீடல்ல...' - தேவசீமா கவிதைத் தொகுப்பை முன்வைத்து

 'வைன் என்பது குறியீடல்ல'  தேநீர் பதிப்பகம் வாயிலாக கவிதாயினி தேவசீமா எழுதிய கவிதைத் தொகுப்பை முன்வைத்து. கவிதைக்கான வாசகர்கள் அருகி வரும் இக்காலகட்டத்திலும் தொடர்ச்சியாகக் கவிதை தொகுப்புகள் வருவது , கவிதை மீதான பிடிப்பையும் கவிதைகளுக்கான இருப்பையும் அவற்றிற்கானத் தேவையையும் தான் காண்பிக்கின்றன. ஒரு சிறுகதை, ஒரு நாவலை அணுகுவது போன்று ஒரு கவிதையை அனைவராலும் அணுகமுடியாது என்றே ஒரே காரணம் தான் கவிதைக்கான வாசகர் வட்டம் குறுகியிருப்பதன் காரணம். மொழி மீது பிடித்தம் உள்ளவர்கள் இதில் முரண்படுவார்கள். காரணம், ஓர் ஒற்றைச் சொல்லில் தொலைந்துபோவதற்கும் ஒரு வாக்கியத்தில் லயித்துப்போவதற்கும் கவிதைகள் தான் வழி தருகின்றன. கவிதை நேசர்களுக்கு அந்த இலகு சாத்தியப்படும்.  'வைன் என்பது குறியீடல்ல' என்பது சமகாலத்தில் சமூக வலைதளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் கவிஞர் தேவசீமா அவர்களின் தொகுப்பு. சமகால அவதானிப்புகள், சமகால வலிகள் , சமகால உணர்வுகள் என 'வைன் என்பது குறியீடல்ல' தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  ஒரு காட்சியைக் கவிதையாக்குவதை விட காட்சியைக் காணும் கனத்தில்/ கணத்தில் ...

க்ருஷ்ண ஜெயந்தி

எல்லாக்  கிருஷ்ணர்களுக்கும் வேடம் கலைத்தாகிவிட்டது.. ராதைகள் மட்டும் ராதைகளாகவே  உறங்குகின்றனர்...