சைரன் 10
மாற்று மருத்துவத்தைப் பற்றி ஆரம்பித்திருந்தேன். உண்மையில் சித்தா ஆயுர்வேத ஹோமியோபதி இன்னபிற மருத்துவம் அதாவது அலோபதிக்கு மாற்றாக உள்ள முறைகளில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் நிபுணத்துவமான மருத்துவர்களும் அச்சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வும் மிகக் குறைவு. எனக்குத் தெரிந்து என் பழைய நிறுவனத்தின் ரீஜனல் மேனேஜர் இரத்த அழுத்தத்திற்கு ஹோமியோபதி எடுத்து நிவர்த்தி பெற்றார். என் நண்பன் ஒருவன் சிறுநீரக கிரியாட்டினினும் அது சார் இரத்த அழுத்தமும் ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சை அளிப்பதை சொல்லி வருகிறான். ஒரே ஒரு விசயம் தான். நல்ல மருத்துவர்களின் கையில் நாம் சிக்க வேண்டும். ஏன் என்றால் இப்பொழுது அலோபதியை எடுத்துக்கொண்டால் தலைவலி என்று போனால் கால்பால் எடு செப்ட்ரான் எடு டோலோ எடு என எல்லோரும் கூறுவார்கள். மருத்துவர் போதிய அனுபவம் இல்லை என்றாலும் அந்த அலோபதி மருந்து வேலை செய்துவிடும். இப்படி வெளிப்படைத்தன்மை மாற்று மருத்துவத்தில் இல்லை. எத்தனை மாற்று மருத்துவர்கள் தான் கொடுக்கும் மருந்து யாருக்கும் தெரிந்துவிடக்கூடாதென லேபிள் இல்லாமல் தருகிறார்கள் தெரியுமா. சில ஆயுர்வேத சித்தா