நெடு நாட்கள் கழித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று ஓர் ஆசை. அதுவும் பேச்சுத் தமிழில் முழுக்க முழுக்க என் ஸ்டைலில். எத பத்தி எழுதணும்னு ரொம்ப யோசனை. ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல...2 மாசம் யோசிச்சு யோசிச்சே போச்சு. இப்பத் தான் நேத்து பேங்க் ஆப் இந்தியா, மதுரை கிளைக்கு ஒரு வேலை விசயமா போனேன்.... நறுக்கு னு ஒரு கட்டுரை கிடைக்குது. ரொம்ப நாள் தொடர்பிலிருக்கும் இணைய நண்பர்களுக்குத் தெரியும் எனக்கும் வங்கிக்கும் எப்படி தொடர்பு னு( ஏற்கனவே வங்கி பத்தி ஒரு கட்டுரை எழுதுன அனுபவத்துல) இப்ப உங்களுக்கு நான் ஒரு பிளாஷ்பேக் சொல்லப்போறேன். வாங்க மதுரை அண்ணாநகர் பேங்க் ஆப் இந்தியா கிளைக்குச் செல்லலாம். ஒரு வருடத்திற்கு முன்னால் ஒரு 25000 ரூபாய fd (வைப்புத்தொகை) யா போடலாம் னு போனேன். அங்க இருக்குற ஒரு ஆபிஸர் அம்மாட்ட எனக்கு அக்கவுண்ட் இருக்கு. அதுல இருக்குற பணத்துல 25000 த டெபாசிட் பண்ணனும் னு சொன்னேன். ஒரு அப்ளிகேஷன் பார்ம் கொடுத்து நிரப்பச் சொல்லுச்சு. பொதுவா பேங்க்ல செலான் தான் குழப்பமா இருக்கும். டிடி க்கு எது, பணம் கட்ட எது, பணம் எடுக்க எது....
இடுகைகள்
2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
தொத்தல்....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வணக்கம் மக்களே..!சென்னை போக வேண்டும் என்று ஒரு திட்டம். நண்பனின் சகோதரன் திருமணம். பத்திர்க்கை கையில் வந்த போது தேதி மூன்று மாதம் கழித்துதான். நமது சுறுசுறுப்புத்தன்மைக்கு எறும்புலாம் பிச்சை வாங்கவேண்டும். சென்னைக்கு ரிசர்வ் இந்தா பண்ணலாம் அந்தா பண்ணலாம் னு மூன்று மாதம் ஆகிவிட்டது. இன்னும் 15நாட்கள் தான். சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணவில்லை. இருந்தாலும் புகைவண்டி யில் என்ன நிலைமை எனப் பார்த்தால் எல்லா ட்ரெயினும் ஹவுஸ்ஃபுல். சரி அடுத்த கட்டம் பேருந்து. முதலில் சென்னையிலிருக்கும் இன்னொரு நண்பனுக்குத் தொலைபேசியில் அழைத்து நான் வருவதைச் சொன்னேன். அவன் வீட்டில் தான் தங்கப்போகிறோம்னு நமக்குத் தெரியும். பாவம் அது அந்த பயபுள்ளைக்குல முதலில் தெரியனும்ல. சொன்னேன். நண்பனின் இல்லம் அம்பத்தூர் அவுட்டர். மதுரையிலிருந்து செல்லும் ஒரு தனியார் ஆம்னி பஸ் ஒன்று மட்டும் அம்பத்துர் வரை செல்கிறது. அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அதில் டிக்கெட் எடுக்கும்படிச் சொன்னார். கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணா மாட்டுத்தாவணிக்கு புதிதாக மாறுதல் ஆகியுள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்டிற்குள் செல்கிறேன். புத்த
லாவகம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அவர் இப்பொழுது சென்றுகொண்டிருப்பது அருணாச்சலப்பிரதேசப் பகுதியின் எல்லையோரக் காட்டுப் பகுதி. அவர் வனத்துறையின் உயர் அதிகாரி. வன உயிரின மற்றும் எல்லா உயிரின ஆரவலரும் கூட. அவரும் அவருடைய நண்பரான ஒரு கால்நடை மருத்துவரும் ஒரு டிரைவருடன் காரில் செல்கிறார்கள் ஒரு தேடலை நோக்கி. அடர்ந்த காடு அது. எங்கும் மரங்கள். எங்கு பார்த்தாலும் தாவரங்கள்...மலை முகடுகள்.. வானத்திலிருந்து பார்த்தால் பூமியின் உடம்பில் பச்சை வண்ணம் தீட்டியிருப்பதாகத் தோற்றம். சின்ன சின்னச் செடிகள், கொடிகள், சிறு மரங்கள், பெரிய மரங்கள். மண் வாசனை, இலை வாசனை. பழ வாசனை. பூ வாசனை. பூச்சிகளின் சத்தம். தூரத்திலிருந்தும் பிறகு அருகிலிருந்தும் கேட்கும் பறவைகளின் சத்தம். அது ஒரு காடு என்பதைத் தன்னிடமுள்ள எல்லாவற்றிலும் காண்பித்துக்கொண்டிருந்தது. சில செடிகளை விலக்கியும், சில கிளைகளை வளைத்தும், குனிந்தும் சென்றனர். பக்கத்துக் கிராமத்துக்காரப் பையன் ஒருவன் குறுக்கிட அவனிடம் தான் கொண்டு வந்திருந்த புகைப்படங்களை அவர் காண்பித்தார். டிரைவருக்கு அது புதிராக இருந்தது. அவை இரண்டு சிறுத்தைக் குட்டிகளின் புகைப்படங்கள். அவரு
அழுத்தம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வெள்ளைக்காரனால் பெயர் வைக்கப்பட்ட வெஸ்ட் கிரேட் காட்டன் சாலையில் தானும் ஒரு துணி வியாபாரியாய் பிரயாணிப்பது மருதப்பனுக்குக் கௌரவமாகவே தெரிந்தது. இந்தியர்களின் நூலைக் காட்டிலும் சிறந்த நூலை வெள்ளைக்காரன் வைத்திருந்ததாகவும் ஆதலால் அதை ஏற்றுமதி செய்ய துறைமுகம் செல்லும் சாலைக்கு அப்படி ஒரு பெயரை வைத்ததாகவும் கேள்விபட்டிருக்கிறார் மருதப்பன். . இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை. அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என வியாபாரம் சம்பந்தமாக தூத்துக்குடிக்கு அவர் பலமுறைகள் வந்திருக்கிறார் . துணி மில் வைத்திருக்கிறார். ஏற்றுமதி படு ஜோர். வட இந்திய வியாபாரமும் ஜோர். தமிழ்நாடு முழுதும் சுற்றுவார். . முதலாளியே நேரில் வருகிறாரென வாடிக்கையாளார்கள் அதிகமாய் அவருக்குக் கிடைத்தனர்.. சின்னவயதில் படிக்க முடியாமல் ஒரு துணி மில்லில் வேலைக்குச் சேர்ந்து சைக்கிளில் மிதித்து வேலை பார்த்த அந்த வெஸ்ட் கிரேன் காட்டன் சாலையில் இப்பொழுது காரில் சென்றுகொண்டிருக்கிறார். கையில் விற்கப்போகும் துணி போல் ஒரு சட்டை தைத்து அணிய வேண்டும் என்று ஏங்கிய அவருக்கு அப்பொழுது வயது 11. அந்த காலத்தில் அவர் வசம் 2 சட்டைகள் தா
காதல்ல்ல்ல்ல்ல்ல்....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அவர் ஒரு திருவாளர். பொதுஜனம். காலையில் வாக்கிங் செல்லும் 26 வயது பெரியமனுஷர். 6 மணிக்கெல்லாம் வாக்கிங் செல்லும் ரிடையர்ட் ஆசாமிகள் எல்லாம் இவருக்கு ஜிகுடி ஜிகுடி தோஸ்த். வீட்டு வாசல்லுல காலையில் அமர்ந்திருக்கும் வயதானவர்கள், குழந்தைகள் அப்புறம் பால்காரர்கள் காய்கறிக்கடைகாரர்கள் எல்லாம் அத்திரி புத்திரி நண்பர்கள். நம்ம திருவாளர்.பொதுஜனம் ஒரு மருத்துவமனையில் அட்டெண்டர். ஊசி போடுவார். மாத்திர சீட்டுக்கு மருந்து எடுத்துத்தருவார். ஆப்ரேஷன் தியேட்டர்ல கொஞ்சம் எடுபிடி. ஸ்டிட்ச்சிங் ட்ரெஸ்ஸிங் ன்னு நர்ஸிங் வேலைனாலும் , அய்யா ஏரியாக்குல டாக்டர் பந்தா தான்... சும்மா டீக்கடை பக்கம் போவார். பச்சமுத்து அண்ணன் வடை போடுவார். என்ன பச்சமுத்து அண்ணே கால்ல காயம் பார்... எண்ணெ தாளிக்குறப்ப பட்டுரூச்சும்பார் பச்சமுத்து அண்ணேன்... உடனே நம்மாளு ....சில்வரெக்ஸ் ஆயின்ட்மெண்ட் போடுணே னு வாயிலேயே பிரிஸ்கிரிப்ஷன் கொடுத்துட்டுப்போவார் . ச்ச...எவ்ளோ அறிவுனு பச்சபுள்ளையாட்டம் பார்ப்பார் நம்ம பச்சமுத்தண்ணன்... தெருமுனைல இருக்குற கண்ணாத்தாள் பாட்டிக்கு நம்மாளு தான் கன்சல்டண்ட் டாக்டர். மூட்ட
ஸ்பைஸ் ஜெட் பஸ்..
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஒரே தடவை மதுரை டூ சென்னை க்கு விமானத்துல எவ்வளவுனு பார்த்தேன். தப்பாயா.. எந்த வெப் சைட் போனாலும் விளம்பரம் வருது. சென்னை இப்ப போறியா...எங்க சர்வீஸ்ல போறியா..நாளைக்கு போறீயா..இப்படியே விளம்பரம். ஒரு ப்ளாஷ் மெயில் வந்தது. 1100 ரூபா. மதுர டூ சென்னை அப்படினு. 4000 ஓவால 10 சதவீத தள்ளுபடினு போட்டானுக, 30 சதவீத தள்ளுபடினு போட்டானுக, 50 சதவீத கேஷ்பேக்னு போட்டானுக. எதுக்குமே அசையல. பாத்தானுக 1100 ஓவானு போட்டு அசைச்சுட்டானுக. சரினு உள்ள போயி டிக்கெட்ட போட்டேன். ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே அந்த இணையதளக்காரன் மெயில் தினமும் அனுப்ப ஆரம்பிச்சான். நீ போகப்போற ஃப்ளைட் கரெக்ட் டைம்கு வருதானு இதுல செக் பண்ணுனு ஒரு லிங்க். அங்க எதுவும் திங்குறியா, அப்ப பர்கர இங்க ஆரடர் பண்ணுனு ஒரு மெயில். இப்படி நம்மள எப்பவும் பறக்குற மொமேன்டலேயே வச்சிருந்தானுக. பன்னிரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒருவாட்டி விமானத்துல போயிருக்கேன். நண்பர்களோடு க்ரூப்பா, எப்படி போனோம் , எங்க டிக்கெட் வாங்குனோம், எங்க லக்கேஜ் வச்சோம் எல்லாமே க்ரூப்பா போனதுனால தெரியல. இந்த வாட்டி தனியா. அதுனால ஒரே திரிலிங்க். கிளம்