இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஏதாவதொரு தூரத்தில் நெருங்கிக்கொண்டிருக்கும் என் நெருக்கம்! 3/9/14
ஏதாவதொரு தூரத்தில் நெருங்கிக்கொண்டிருக்கும் என் நெருக்கம்! 3/9/14
எல்லாமும் ஆகிய பின் ஏதொனுமொன்றை விடுத்துவிடுகிறது ஏதுமாகாமல்! 3/9/14

இருப்பு

நீயில்லாது நீயே விடுத்துச்சென்ற ஏதோ ஒன்றும்.. நீயிருந்தத் தருணங்களின் நியாபகச் சருகுகளில் வேட்கைத் தீ மூட்டிக்கொண்ட அசரீரியும்.... தொடரட்டுமென்ற என் நிழலற்றுழலும் உன் நிழலுமென இருக்கும் எல்லாவற்றிலும் உனை இருத்தி நீ மட்டுமில்லாமல் இருத்தல் இருப்பு எனப் பெயரோ.... 4/9/14
பிரிவதற்கு முன் பிரயோகிக்கும் மௌனங்களில் நீ அழகு.. 9/9/14
உன் ஒற்றை நீள முடி அவ்வளவு பாரம் நீ தோள் சாய்ந்ததை நினைவுபடுத்துகையில்.... 9/9/14
திரும்பிப் பார்த்திருந்தால் இந்தப் பிரிவு உணரப்பட்டிருக்காது...

பிரி

எதையாவது சொல்லிவிட்டுத்தான் பிரியவேண்டும் என்பது உன் ப்ரியம்... மறுமுறை சந்தித்தலும் அது பிரசவிக்கும் ரணமும் விருப்பமற்று நீ விரும்பியதை முயற்சித்துக்கொண்டே இருக்கிறாய் பகிர்வதற்கு.... அடர்த்தியான மௌனங்களை இலகுவாய் உதிர்க்குமுன் விழிகளில் தெரிகிறது பிரிவிற்கான நெடி... எதிலுமே முரண்படாத எதிர்பார்ப்புகள் முரண்பட்டு நிற்கின்றன இன்னொரு பிரிதலைத் தரும் சந்திப்பு அழகானதல்ல என்று இன்னும் விலகமுடியாமல் நிற்கிறது விலகுவதற்காக விழுந்த உன் நிழலும் எதையாவது சொல்லிவிட்டுப் பிரிய ப்ரியமுடன்.....
எந்தத் திசையில் இருக்கிறது உன்னைக் காட்டும் திசை... 9/9/14
ஸ்ட்ராபெர்ரி என்கிறேன் ஏதோ மூலிகை வாசமென்கிறாய்- குழப்பம் வேண்டாம் மறுபடி சுவைக்கலாமுன் உதட்டுச்சாய சுவையை! 11/9/14
தாகம் தீர்ந்து போனது- தீயெரிய ஆரம்பித்திருக்கிறது. 11/9/14
எதெல்லாம் பிடிக்குமெனப் பட்டியல் வைத்துள்ளேன்- பட்டியலின் பெயர்- நீ! 11/9/14
இனி இப்படி ஏதும் நிகழப்போவதில்லை என்றபடியாய் ஒரு முத்தம்- முற்றும்! 11/9/14
இந்தப் பேருந்து அந்தக் குழந்தை பயணமே சேய் சேமம்! 11/9/14

ஊ..ஊ..

எதை எதையோ வரைந்து " ஊ . .ஊ" என்கிறது அந்தக் குழந்தை- இந்தக் கவிதையின் தலைப்பு கூட " ஊ. .ஊ" 11/9/14
ஆட்டுக்குட்டிகளை எல்லாம் நாய் குட்டிகளாய்க் கூறிவிட்டு எனைப் பார்க்கிறது அந்தக் குழந்தை- ஆகச் சிறந்த வரத்திற்காய் நான்! 11/9/14
குரஙகிற்குத் தீனி போடத் துணிகிறது அந்தக் குழந்தை குரங்காதல் தவம்! 11/9/14

கனா...

அது ஒரு கடுமையான மணல் தேசமாயிருந்தது.... எண்ணிக்கைகள் பல வைத்துத் தேடிக்கொண்டாலும் கிட்டாத புவியின் திறந்த மார்பு அத்தேசம்... தாபசுரத்துடன் அலைந்தலைந்து தவழ்ந்தழும் யாத்ரீகங்களுக்கான அருகதையற்ற தேசமது.... அது ஒரு கடுமையான வனத் தேசமாயிருந்தது.... அரவங்களை விரும்பாத அமைதியை மாத்திரம் இரைச்சலாய் உற்பத்தி செய்யும் வனாந்திரத்தின் தேசமது.... நோக்குங் கண்களற்று பச்சைய உதிரிகள் செறிந்து வீழும் உதிர்வன தேசம் தான் அது..... அது ஒரு கடுமையான வார்த்தைகளின் தேசமாயிருந்தது..... சொல்லும் சொல்லும் புணர்கையில் குருதி கொட்டும் வாய் தேசத்தின் எச்சமது.... மெய் முழுதும் அமிலந்தெறிக்கும் மெய்யற்ற எழுத்து கொண்ட சொல்லாலான தேசம்...... அது ஒரு கடுமையான வாழ்வியலின் தேசமாயிருந்தது.... வெற்றுப் புன்னகைக்கான நிழலுழல்தலையே வாடிக்கையாக்கிக் கொள்ளும் வாழ்வற்றத் தேசம் தான் அது..... தொலைதலும் தொலைதலின் நிமித்தமும் ஆகச் சிறந்த தொலைந்த தேசமாய்த்தானிருந்தது அந்தக் கனவில்.....
கதறியழ ஓடிக்கொண்டிருக்கிறான் முப்படை வீரனொருவன் அந்தகாரத்தில்..... 14/9/14
ஏதேனும் மாற்று இருப்பின் என்னிலிருந்து எனை விடுவி.... 14/9/14
தாகங்களைத் தீர்க்க சதா வேண்டிக்கொள்ளும் ஒரு பட்சியின் இறகடி உந்தம்- மீள்தல்! 15/9/14
மிகக் கள்ளமாய் ஊர்ந்து என் ஆள்காட்டிவிரலைத் தொட்டுவிட்டோடும் உன் சுண்டுவிரலின் ஏக்கம் அலாதி.....! 15/9/14
அவ்வளவு நேர காததிருத்தலுக்குப் பின் வெறுமையுடன் நகர்ந்திருந்த அந்த இடத்தை ஓரிலை உதிர்ந்து நிரப்புகிறது மற்றொரு காத்திருப்பாய்! 22/9/14
முழுமையாய் எரிந்து முடித்திருந்த மெழுகுவர்த்தியில் காத்திருத்தலின் கடைசிக் கண்ணீர் படர்ந்திருந்தது! 22/9/14
எல்லா வார்த்தைகளும் தயார் - எது நம்மை நாமாக்கும்!
ஒரு கைகுலுக்கல் ஒரு புன்னகை சிறு முத்தம்- இல்லாவிடில் ஒரு கனவாவது!
குளத்து நீரைத் தொடாது வீசப்பட்ட கல் அக்கரையை களங்கச் செய்தது!
எத்தனை முறை திரும்பிப் பார்த்தாலும் இந்தப் பிரிவு வலியே!
எல்லாவற்றிற்கும் மேலாக அளவளாவுதலற்று வாழ்தலை கற்பித்துப் போ!
திரும்பிப் பார்த்தப் பிறகுதான் தெரிகிறது அசரீரியும் நீயென்று!
ஓர் ஆளுகை ஒரு களவு குறைந்தபட்சம் ஒரு மீட்டெடுத்தல் ஏதேனுமொன்றிலாவது என்னை அபகரி!
தினம் தினம் துளிர்க்கிறது ஏக்கங்களைச் சாகடிக்கும் ஒரு மரணம்!
மிச்சத்தையும் கொடுக்கிறேன்- களவாடலில் முழுமை காட்டு!
நாய்க்குட்டியின் கழுத்து ஒரு மயில்தோகை குழந்தையின் முத்தம் மற்றும் நீ
மயிலின் வலியை வருடத் தந்தது அந்தத் தோகை
அவசரவசரமாய் கர்த்தன்களைத் தயாரித்திடல் வேண்டும்- சிலுவைகள் தயார்
இந்தச் சாம்பலுக்கு கங்குகளே அதிகம் உன் வார்த்தைகள் எதற்கு!
இனியும் வியாபிக்கும் இரவும் 'நீ' என்பதன் பொருளும்!
ஒவ்வொரு குறுஞ்செய்தியும் ஒரு மழை...
நெருங்கத் துடிக்கும் ஒவ்வொரு கணமும் தூரமாகிறதுன் விகசிப்பு! தாகமறியும் நதி நீ - கரை உடை
எதையாவதொன்றை எழுதிக்கொண்டே இருக்கிறது- நீ விடுத்துச்சென்ற இறுதிச்சொல்
தாங்கிப் பிடித்த மழையின் கடைசித் துளி உன் சொல்லாயிருந்தது!
எதிர்கொள்ளப் போகும் இவ்விரவுகள் உன் சொற்களாலாகட்டும்!
முத்தங்களை எழுதியாவது அனுப்பு- சொல் உயிராகட்டும்!
எத்தனையாவது முத்தத்தில் அது முத்தமாகவே இருந்தது!
ஆகச் சிறந்த பிரிவின் சூத்திரம் பிரிவின் மொழியை மொழியாதிருத்தல்!
கைகளைப் பற்றிக் கெண்டு தோளில் சாய்ந்து கொண்டு கண் கண் எதிர் பார்த்து இதற்காகவேனும் ஓர் இரவு செய்- முழுதாய் அழ!
ஒன்றுக்கொன்று பேசிக்கொள்கையில் டெடிகள் குழந்தைகளை சொந்தம் கொண்டாடுகின்றன!
விழுந்ததெல்லாம் சொற்கள்- நனைந்தது மழை!
நீயாய் வந்து சமைத்துப் போன அந்த இரவை செரிக்க செரிக்கத் தின்கிறது இந்த இருட்டு! இந்தக் காத்திருப்பும் வரப்போகுமுன் குறுஞ்செய்தியும் ஏக்கத்தின் நீட்சிகள்! அழகாய்த்தான் இருக்கிறது- அருகருகே இருந்தாலும் தூரம் காட்டுமுன் நெருக்கம்!  
குழந்தையாகவே இருத்தல் உத்தமம் - டெடி பொம்மையாயிருத்தல் அதனினும் உத்தமம்!
எல்லா வரிகளும் எழுதப்பட்டன. உன் பெயர் சூட்டுகையில் பொய்யெல்லாம் மாண்டிருந்தன!
நண்பகல் நேரம் கொஞ்சமான பசி நிறைய தாகம் இரண்டிற்கும் நீ
வறட்சியின் நீட்சி யாதெனின் இப்பொழுதும் நீயற்றதாயிருத்தல்!
ஆகச் சிறந்த தொலைதல் உன் விழி பார்த்தல்!
ஒன்று இரண்டு மூன்றென பின்னோக்கி நகரும் மரங்களை எண்ணிக்கொண்டிருக்கும் அந்தப் பயணக்குழந்தைக்கு அடுத்த வருடம்- இந்த எண்ணிக்கையை தரப்போவது எது? இப்பொழுது விரவிக்கொண்டிருக்கும் பசியை ஒரு துளி நீர் தௌித்தாவது ஆற்றிவிடவேண்டும். இல்லையெனில் அது உன்னையவே தின்றுவிடக்கேட்கும. எதையாவதொன்றை பிடித்துக்கொண்டு எப்படியாவது வளர்ந்து விடுகிறது அந்தத் தாவரம். மனிதனுக்குத்தான் அது சாபக்கேடு!  
கசக்கி எறிந்த பிறகும் அந்தக் காகிதம் உனக்காக எழுதப்பட்ட கவிதையாகவே இருந்தது!
அது ஒரு பேருந்துபயணம். அடுத்த இருக்கையில் அமர்ந்தவர் விற்பனைத்துறையில் மேலாளராயிருக்க வேண்டும். யாருக்கோ அலைபேசியில் தொடர்புகொள்கிறார். வண்டி வந்துவிட்டதா எனக்கேட்கிறார். இல்லை என பதில் வந்திருக்க வேண்டும். தான் விசாரித்துவிட்டு அழைப்பதாக அழைப்பைத் துண்டிக்கிறார். அலைபேசியில் மற்றொரு எண்ணைத் தேடித் துழாவி அழைக்கிறார். வண்டியின் ஓட்டுனரின் அலைபேசி எண்ணைக் கேட்கிறார். அந்த முனையில் எண் குறுஞ்செய்தியாக அனுப்புவதாகச் சொல்லியிரருக்கவேண்டும். அந்த அழைப்பைத் துண்டிப்பதற்குள் முதலாவத ாக அவர் அழைத்த அனேகமாக அவர் வாடிக்கையாளராக இருத்தல் வேண்டும் அங்கிருந்து மறுபடியும் அழைப்பு வருகிறது. ஓட்டுனரின் எண்ணைக் கேட்டிருப்பதாகவும் பேசிவிட்டு அழைப்பதாகவும் துண்டித்துவிட்டு அலைபேசியையே பார்க்கிறார். அதற்குள் ஓர் அழைப்பு வருகிறது, மிகவும் சாந்தமாக பேச ஆரம்பிக்கிறார். வந்துகொண்டிருப்பதாகவும் இரவு உணவுக்காக காத்திருக்காதே சாப்பிட்டு விடு எனச் சொல்லிவிட்டு பாப்பா சாப்பிட்டாளா எனக் கேட்கும் தருவாயில் தொடர்பு எல்லைக்கு வௌியில் இவர் வந்திருக்கவேண்டும் ஏனென்றால் அந்தக் கேள்வியை இரண்டுமுறை கேட்டா
ஒரு யானையை அழைத்துச் செல்கிறான் பாகன் ஒருவன்.  வேகமாய் நடக்கச் சொல்லி தன் கையிலிருந்த மூன்று பிரம்புக்குச்சிகளை ஒன்று சேர்த்து அதன் பாதத்தில் அடிக்கிறான். அடி விழுந்த அந்த பாத நகர்தல் மட்டும் திணறி அடுத்த முறையில் யானை வேகமாக நகர்கிறது. யானையாயினும் வலி வலியே. எப்பொழுதும் மனிதன் பலம் தெரிந்து மோதுகின்றான்.மனிதன் தவிர இயற்கையும் இயற்கைசார் மற்றவைகளும் பலத்தை அடிக்கடி பிரயோகிப்பதில்லை. பிரயோகிக்கையில் அது பிரவாகமாய்த் தானிருக்கும்