A Separation ஈரானிய மொழி திரைப்படத்தை முன்வைத்து. பொதுவாக வளரக் கூடிய நாடுகளில் மனிதனின் வாழ்வியல் என்பது அங்கு நிலவக்கூடிய பொருளாதார நிலைமைகளை வைத்து என்ற படியே இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்ற படி பல காரணிகள் இருக்கின்றன. வேலை பார்க்கும் சூழல் நிமித்தமாக புலம் பெயர்தல் என்பது நாம் கேள்விப்பட்டதுண்டு. மிகவும் பிற்போக்கான கருத்துகளைப் பின்பற்றும் தேசங்களில் கூட கல்விக்காகவோ, பொருளாதாரத்திற்காகவோ புலம் பெயர்தல் அவசியப்படுகிறது. ஆனால் தனிமனிதன் ஓர் இடத்தில் தன்னைத் தகவமைத்துக்கொள்ள பல காரணிகளைத் தின்று செரிக்கிறான். சிலர் அதைத் தியாகம் என்று அழைக்கிறார்கள். ஈரானிய மொழி திரைப்படமான 'A Separation" கூட அப்படியானச் சில அளவைகளை முன் வைத்து ஒரு குடும்பத்திற்குள் நிகழும் நிகழ்வுகளைச் சொல்கிறது. 11 வயது ஆகும் மகளிற்கு நல்ல கல்வி கொடுக்க வேறு இடம் செல்ல வேண்டும் என்பது குடும்பத்தலைவியின் ஆசை. இந்த ஊரில் அவளுக்கு நல்ல கல்வி கிடைக்காது என்பதை விட இங்கு கிடைப்பதை விட மேம்பாடானக் கல்வி என்பது அவளது நிலைப்பாடு. குடும்பத்தலைவனுக்கு 80 வயதில் இருக்கும் Alzhiemers (மறதி போன்ற ந
நமக்கென்று ஒரு குடும்ப மருத்துவரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம். அவர் சரியில்லை என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கேள்வி. நான் முந்தையப் பதிவில் சொன்னதுபோல் மூன்று முறை நாம் நமக்கே வாய்ப்பு தரலாம். ஒரு மருத்துவருக்கும் நமக்கும் சரிப்பட்டு வர. அப்படி சரிபட்டு வராவிடில் தாராளமாக நாம் மருத்துவரை மாற்றிக்கொள்ளலாம். ஆக இப்பொழுது ஒரு நோய் உங்களுக்கு வர இருக்கிறது என்றால் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையோ ஒரு கன்சல்டன்ட் அதாவது நிபுணத்துவ மருத்துவரை ப் பார்க்க உங்களுக்கு வழி தெரிந்துவிட்டது. உங்கள் குடும்ப மருத்துவர் என்ன பரிந்துரைக்கிறாரோ அதை நாம் செய்து விடலாம். மூன்று முறைக்கு மேல் சரிப்பட்டு வராவிடில் நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் மருத்துவரை அடிக்கடி மாற்றும் பழக்கம் வைத்துக்கொள்ளக்கூடாது. உடலைப் பற்றிய போதிய அறிவும் கவனிப்பும் நமக்கு வேண்டும். நம்ம ஒண்ணும் சிக்ஸ் பேக் லாம் வச்சுக்க வேணாம். நமக்கேத்தமாத்ரி வச்சுக்கிட்டா போதும். நீங்க ஒரு வேலையாள சம்பளத்திற்கு வைத்திருக்கிறீர்கள்னு வச்சுக்குவோம். அவருக்கு நிறைய சம்பளம் தர்றீங்க. ஆனா வேலை கொஞ்சமா தர்வீ
விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8 இன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது கொரோனா தாக்கத்தால் மருத்துவத்துறையில் முன்னேற்றம் இருக்கிறது என்ற படிக்குப் பேசினார். மருந்துகள் எல்லாம் அதிகளவில் விற்கும் அல்லவா என்றும் கேட்டார். அதற்கான விளக்கத்தையும் என் வேலை எந்த அளவிற்கு ஆகியிருக்கிறது என்பதையும் சொன்னேன். அதன் சாராம்ஸம்... மருத்துவத்துறை சார் நோயும் வைரசும் பரவுவதால் உடனே அதில் மருந்துகளின் விற்பனை கூடுகிறது என்பது மேலோட்டமானக் கருத்து. பெரும் முதலாளிகளின் கம்பெனிகளுக்கு வேண்டுமானால் விற்பனை நடக்கலாம். முறையாய் மருத்துவர்களைப் பார்த்து அதன் மூலம் ஏதாவது ஒரு ஆர்டர் எடுக்கும் நிலையில் இருக்கும் என்னைப் போன்ற குறு கம்பெனிகளின் விற்பனை சரியவில்லை. படுத்தேவிட்டது என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு, ஒரு மருத்துவரை மாதம் ஒரு முறை பார்த்துக்கொண்டிருப்போம். அவரும், பல நாட்களாக வருகிறான், இவனுக்கு உதவலாம் என்ற மனிதத்துடன் அந்த விற்பனைப்பிரதிநிதியின் மருந்து தரமானத் தயாரிப்பா என்று பரிசோதித்து அவனுக்கு எழுத ஆரம்பிப்பார். இப்படியான விற்பனை நடக்குமளவிற்கு மருத்துவர்களைப் பார்த்து ப
கருத்துகள்
கருத்துரையிடுக