பிரி

எதையாவது
சொல்லிவிட்டுத்தான்
பிரியவேண்டும் என்பது
உன் ப்ரியம்...

மறுமுறை
சந்தித்தலும்
அது பிரசவிக்கும்
ரணமும்
விருப்பமற்று
நீ விரும்பியதை
முயற்சித்துக்கொண்டே
இருக்கிறாய்
பகிர்வதற்கு....

அடர்த்தியான
மௌனங்களை
இலகுவாய்
உதிர்க்குமுன்
விழிகளில் தெரிகிறது
பிரிவிற்கான நெடி...

எதிலுமே
முரண்படாத
எதிர்பார்ப்புகள்
முரண்பட்டு நிற்கின்றன

இன்னொரு பிரிதலைத்
தரும்
சந்திப்பு
அழகானதல்ல என்று
இன்னும்
விலகமுடியாமல்
நிற்கிறது
விலகுவதற்காக விழுந்த
உன் நிழலும்
எதையாவது சொல்லிவிட்டுப்
பிரிய
ப்ரியமுடன்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8