இருப்பு
நீயில்லாது
நீயே விடுத்துச்சென்ற
ஏதோ ஒன்றும்..
நீயிருந்தத்
தருணங்களின்
நியாபகச் சருகுகளில்
வேட்கைத் தீ
மூட்டிக்கொண்ட
அசரீரியும்....
தொடரட்டுமென்ற
என்
நிழலற்றுழலும் உன்
நிழலுமென
இருக்கும் எல்லாவற்றிலும்
உனை இருத்தி
நீ மட்டுமில்லாமல்
இருத்தல்
நீயே விடுத்துச்சென்ற
ஏதோ ஒன்றும்..
நீயிருந்தத்
தருணங்களின்
நியாபகச் சருகுகளில்
வேட்கைத் தீ
மூட்டிக்கொண்ட
அசரீரியும்....
தொடரட்டுமென்ற
என்
நிழலற்றுழலும் உன்
நிழலுமென
இருக்கும் எல்லாவற்றிலும்
உனை இருத்தி
நீ மட்டுமில்லாமல்
இருத்தல்
இருப்பு எனப் பெயரோ....
4/9/14
4/9/14
கருத்துகள்
கருத்துரையிடுக