விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8 இன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது கொரோனா தாக்கத்தால் மருத்துவத்துறையில் முன்னேற்றம் இருக்கிறது என்ற படிக்குப் பேசினார். மருந்துகள் எல்லாம் அதிகளவில் விற்கும் அல்லவா என்றும் கேட்டார். அதற்கான விளக்கத்தையும் என் வேலை எந்த அளவிற்கு ஆகியிருக்கிறது என்பதையும் சொன்னேன். அதன் சாராம்ஸம்... மருத்துவத்துறை சார் நோயும் வைரசும் பரவுவதால் உடனே அதில் மருந்துகளின் விற்பனை கூடுகிறது என்பது மேலோட்டமானக் கருத்து. பெரும் முதலாளிகளின் கம்பெனிகளுக்கு வேண்டுமானால் விற்பனை நடக்கலாம். முறையாய் மருத்துவர்களைப் பார்த்து அதன் மூலம் ஏதாவது ஒரு ஆர்டர் எடுக்கும் நிலையில் இருக்கும் என்னைப் போன்ற குறு கம்பெனிகளின் விற்பனை சரியவில்லை. படுத்தேவிட்டது என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு, ஒரு மருத்துவரை மாதம் ஒரு முறை பார்த்துக்கொண்டிருப்போம். அவரும், பல நாட்களாக வருகிறான், இவனுக்கு உதவலாம் என்ற மனிதத்துடன் அந்த விற்பனைப்பிரதிநிதியின் மருந்து தரமானத் தயாரிப்பா என்று பரிசோதித்து அவனுக்கு எழுத ஆரம்பிப்பார். இப்படியான விற்பனை நடக்குமளவிற்கு மருத்துவர்களைப் பார்த்...
கல்லூரியில் படிக்கையில் நடந்த நிகழ்வுகளும் அதை நினைப்பதும் பெரிய வரம். ஒவ்வொரு ஆசிரியர்களும் ஒரு விதம். physical chemistry ஆச்ரியர் t.k. ஜெனார்த்தனன் சார். பாடம் நடத்துறதே வித்தியாசமா இருக்கும். பல்லைக் கடித்து சொல்வது போலிருக்கும். குட்டையாயிருப்பார். சிவப்பாயிருப்பார். சாதுவான குணம். அவரது குரல் மெலியதாயிருக்கும். அந்தக் குரலில் பஞ்ச் பேசுனா எப்படியிருக்கும் அப்படி. அவர் பாடம் நடத்துற அழகே அந்தக் குரல் அந்த தொனி.ஒருமுறை ஒரு சாதித்தலைவர் கார் விபத்தில் இறந்தார். அது நடந்த இடம் அவர் வீடு அருகே. ஒரு லாரியும் காரும் மோதிய விபத்து. அடுத்த நாளில் ஜெனார்த்தனன் சார் எங்களுக்கு எப்படி பாடம் நடத்துவாரோ அப்படியே அந்த விபத்தை சக ஆசிரியர்களுக்கு விவரித்தார். இப்பொழுது வரும் கேப்பிட்டல் ஆங்கிலத்தை பல்லைக் கடித்து வாசித்துப் பார்க்கவும் ( that LOrry Came FRom that side, this FEllOE's car came from this side....big TERRIFIC bombarded...) இதைத்தான் அவர் சொன்னார். அங்கு சென்ற என் காதுகளுக்கு அவர் பாடம் நடத்தியது தான் கேட்டது ( THat atom comes FRom that orbit and Another ATom comes from o...
விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து... சாம்ராஜ்ய காலம் முதல் நாயக்கர் காலம் பிறகு அங்கிருந்து இப்பொழுதுவரை என இந்தியாவில் உள்ள எல்லா மதங்களிலும் நடந்த மாற்றங்கள் பற்றிய பெரிய ஆய்வை எழுதியிருக்கிறார் தோழர் அருணன். மத நல்லிணக்கம் பேணுவோர், நாத்திகம் பேணுவோர் தவிர மதங்களைத் தீவிரமாகப் பின்பற்றும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். முகலாயர்கள் ஆண்டபொழுது முஸ்லீம்களின் எண்ணிக்கை கணிசமானது தான். ஆங்கிலேயர்கள் ஆண்டபோது கிறித்தவர்களின் எண்ணிக்கை கணிசமானது தான். இரு மத ஆட்சியாளர்களும் வைதீக நெறி மதங்களைப் பின்பற்றுபவர்களையும் அரவணைத்திருக்கின்றனர். சைவ வைணவ என்ற வைதீக நெறி மதங்களைப் பின்பற்றியோரை ஹிந்து என அழைத்தவர்கள் முஸ்லீம்கள் என்பது போன்ற தரவுகளை அருணன் வழங்கியிருக்கிறார். அந்த கால இஸ்லாமியர் எண்ணிக்கை, கிறித்தவர்களின் எண்ணிக்கை என புள்ளிவிவரத்துடன் வழங்குவது அதிகாரத்தைப் பயன்படுத்தி மதமாற்றம் அதிகமாக நடக்கவில்லை என்பதைக் காட்டியிருக்கிறார். கிறித்தவ மிஷனரிகள் கல்வி த...
கருத்துகள்
கருத்துரையிடுக