விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து... சாம்ராஜ்ய காலம் முதல் நாயக்கர் காலம் பிறகு அங்கிருந்து இப்பொழுதுவரை என இந்தியாவில் உள்ள எல்லா மதங்களிலும் நடந்த மாற்றங்கள் பற்றிய பெரிய ஆய்வை எழுதியிருக்கிறார் தோழர் அருணன். மத நல்லிணக்கம் பேணுவோர், நாத்திகம் பேணுவோர் தவிர மதங்களைத் தீவிரமாகப் பின்பற்றும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். முகலாயர்கள் ஆண்டபொழுது முஸ்லீம்களின் எண்ணிக்கை கணிசமானது தான். ஆங்கிலேயர்கள் ஆண்டபோது கிறித்தவர்களின் எண்ணிக்கை கணிசமானது தான். இரு மத ஆட்சியாளர்களும் வைதீக நெறி மதங்களைப் பின்பற்றுபவர்களையும் அரவணைத்திருக்கின்றனர். சைவ வைணவ என்ற வைதீக நெறி மதங்களைப் பின்பற்றியோரை ஹிந்து என அழைத்தவர்கள் முஸ்லீம்கள் என்பது போன்ற தரவுகளை அருணன் வழங்கியிருக்கிறார். அந்த கால இஸ்லாமியர் எண்ணிக்கை, கிறித்தவர்களின் எண்ணிக்கை என புள்ளிவிவரத்துடன் வழங்குவது அதிகாரத்தைப் பயன்படுத்தி மதமாற்றம் அதிகமாக நடக்கவில்லை என்பதைக் காட்டியிருக்கிறார். கிறித்தவ மிஷனரிகள் கல்வி த...
நாம் ஒரு மருத்துவமனையை எப்படித் தேர்ந்தெடுப்பதுஎன்பது தான் கேள்வி. அதற்கு முன் ஒரு மருத்துவமனையை நாம் எப்படி நிராகரிக்கிறோம் எனத் தெரிந்து கொள்ளலாம். அ) அவைங்க நிறைய காசு புடுங்குவாய்ங்க...( இது நாமாகவே நேரடியாகவோ, நண்பர் உறவினர் மூலம் கேட்டோ தெரிஞ்ச விசயம்) ஆ) அந்த ஆஸ்பத்திரி போனா ரொம்ப லேட் ஆகும்... இ) அந்த ஆஸ்பத்திரி போனா டெட் பாடி தான் வெளிய வரும். இதுலாம் ஒரு காரணம். நாம் ஏன் ஒரு மருத்துவமனையை நிராகரிக்கிறோம் என்பதற்கு. தேர்ந்தெடுக்க என்ன காரணம் தெரியுமா.. அ) நம்பிக்கை ஆ) ஏக்கம். இது மட்டும் தான். எப்படியும் காப்பாத்திருவாங்க என்ற நம்பிக்கையும், எப்படியாவது காப்பாத்திரமாட்டாங்களா என்ற ஏக்கமும் தான். ஆக, ஒரு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க நமக்கு கொஞ்சம் பொறுமையும் ஒரு விழிப்புணர்வும் தேவை. ஒரு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க நாம் செய்ய வேண்டியவை. முதலில் நமக்கு என்ன நோய் என்பதைப் பற்றி ஆராய வேண்டும். உதாரணத்திற்கு, உங்களுக்கு சர்க்கரை நோய். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஊரில் சர்க்கைரை நோய்க்கு மருத்துவம் செய்யும் மருத்துவர் யார் சிறந்தவர் என்பதைத...
கடைசியாகக் கேட்கப்பட்டக் கேள்வியின் அர்த்தம் நீங்கள் சிறுநீர் போகும்போது பார்த்தீர்களா என்று மட்டுமல்ல.. உங்கள் உடலை கண்காணிக்கிறீர்களா என்ற அர்த்தத்தில் தான்.. இப்பொழுது மருத்துவமனையில் மாஸ்டர் செக் அப் என்று சொல்கிறார்கள். அதாவது நமது உடலை முழுதுமாய் ஒரு பார்வை பார்ப்பது. அதாவது அக்கு வேறு ஆணி வேறு என்று. நாற்பது வயதுக்கு மேல் இருப்பவர்கள் அதைப் பார்த்துக்கொள்ளலாம். எல்லா மருத்துவமனைகளிலும் அது செய்கிறார்கள். உங்களுக்கு வசதியான மருத்துவமனை எது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நான் சில ஐடியாக்களைத் தருகிறேன். அ) உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் மாஸ்டர் செக் அப் செய்யலாம். ( ஏன் என்றால் வெறும் வயிற்றில் காலையில் வரச்சொல்வானுக. போயிட்டு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வரச்சொல்வானுக..அதுனால நீங்க பாட்டுக்க பத்து கிமீ தூரம் இருக்கிற மருத்துவமனைக்கோ இல்லாட்டி உங்க அப்பா அம்மா தாத்தா பாட்டினு வயசான்வங்களோட போயிட்டு மறுபடியும் அலையக் கூடாதுல..அதான்) ஆ) உங்கள் குடும்ப மருத்துவர் எந்த மருத்துவமனையைப் பரிந்துரைக்கிறாரோ அங்கு போய் செய்யலாம்.( ஏன்னா, மறுபடியும் அ...
கருத்துகள்
கருத்துரையிடுக