இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈஈஈஈஈஈ....

கல்லூரி காலங்களில் சினிமாவிற்கு நண்பர்கள் படை சூழ போவது ஒரு பேரின்பம். ஒட்டுமொத்தமாக வரிசையில் அமர்ந்து சீரியஸான வசனங்களுக்கு 'ம்ம்ம்..' னு ம் கொட்டிப் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத நிகழ்வு. அதற்குப் பிறகு அதே படத்தையோ அல்லது அது மாதிரியான காட்சிகளைப் பார்த்தாலே மகிழ்வான நினைவுகள் வந்துபோகும். பொதுவாக நகைச்சுவை உணர்வு இருப்பவர்களால் ஒரு நிகழ்வை எளிதாக எடுத்துக்கொள்ளமுடியும். நான் அதில் தேர்ச்சிபெற முயல்வேன் எப்பொழுதும். ஒருமுறை வீட்டிற்குள் வேலை முடித்து நுழையும்பொழுது அம்மா டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள். டிவியில் ஒரு பழையபடம். நான் கவனிக்காமல் நகர்ந்துவிட்டேன். ஆனால் அம்மா டிவியை வைத்த கண் விடாமல் பார்க்கிறார் அப்படி என்ன படம்டா னு பார்த்தால் சிவாஜி நடித்த திரிசூலம் படம். அந்தப் படம் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் அது என்ன சீன் னு.... அத தான் எழுதப்போறேன். அந்தப் படம் பார்க்காதவங்களுக்காக அந்தப்படத்தோட கதை . நம்ம ஐயா அதான் சிவாஜி கதாநாயகர்ர்...கே.ஆர்.விஜயா நாயகிஈஈஈஈ. லவ்...அப்புறமா....மேரேஜ்ஜு..அப்புறமா பிரிஞ்சிறாஙைக.. ரெண்டு மகைங்க...அவைங்களும் சிவாஜி..(சி

நனை...

எங்க பார்த்தாலும் மழையாம். ஆனால் நியூஸ்ல காமிக்கிறமாதிரி மதுரைக்கு அவ்வளவு பெரிய மழை இல்லைதான். இந்தச் சென்னைல மழை பெஞ்சதும் பெஞ்சது எல்லாப் பக்கமும் அதான் செய்தி.  டிவிலயும் அதைத்தான் காமிக்குறான்.  பேப்பர்லயும் அதைத்தான் போடுறான்.  சரினு ஃபேஸ்புக் வந்தா இங்கேயும் இதான். இவைங்க காமிக்கிறத பார்த்தா டிவி பார்த்துட்டு இருக்குற  எனக்கே மழைல நனைஞ்ச மாதிரி இருக்கு.. மழையில் நனைதல்ன்றது ஒரு வரம்.  அது ஒரு ஜென் நிலை. காலைல ஆபிஸுக்குப் போயிட்டு சாயங்காலம் வீடு திரும்புற நேரம் பார்த்து மழைனு அப்படியே சிலையா நிக்குறத் தொழில் என்னுடையது இல்லை. மார்க்கெட்டிங். முடிஞ்சவரை மட்டுமில்ல...முடியாதவரை கூட ஓடிட்டே இருக்கனும். ஆனா மழைல நனையனும்னா எனக்கு அது தொழில் இல்லை. மகிழ்ச்சி. வேலைக்கு வந்த புதிதில் என்னிடம் பஜாஜ்M80 வண்டி இருந்தது. நானும் என் நண்பனும் வேலை நிமித்தமாக 25கிமீ தொலைவிலுள்ள திருபுவனம் ஊருக்குப் போயிட்டு வர்ற வழியில் மழை. கையில் அப்போது அலைபேசி எல்லாம் இல்லை. ஆதலால் சங்கடமில்லாமல் நனையலாம். எல்லாரும் குறிப்பா புல்லட்ல போறவனே மழைக்கு ஒதுங்கி நிற்க நாங்க மட்ட

கதை விமர்சனம் - ஒரு இரு நாட்டு மன்னர்

1977 கணையாழி இதழில வெளிவந்த ஒரு சிறுகதை ' ஒரு இருநாட்டு மன்னர்' . நான் ரசித்துப் படித்தக் கதைகளில் இதுவும் ஒன்று.  அந்தக் கதைப் பற்றிய ஒரு மினி திரை விமர்சனம். ஒரு ஊர். அங்க ஒரு ஆளு. வைத்தியன் னு எல்லோரும் கூப்பிடுறாங்க. பெயர் என்னனு அந்தாளுக்கே தெரியல. நாடு விட்டுப்போன ஒரு ஆளு பேர்ல அந்த வைத்தியன் ஓட்டுலாம் போடுறான். அது கள்ள ஓட்டுனு எல்லாத்துக்கும் தெரியும். இந்த முறை நடக்குறது அந்த ஊரோட ஊராட்சிமன்ற உள்ளூர் தேர்தல். இரண்டு பேர் போட்டி போடுறாங்க. பூசணிக்கா சின்னத்துல ஒருத்தர். உருளை சின்னத்துல ஒருத்தர். இரண்டு பேருமே மைத்துனர்கள். பொண்ணு எடுத்து பொண்ணு கொடுத்த மாதிரி. கள்ள ஓட்டு விழுந்திரக்கூடாதுனு இரண்டு பேத்து ஆள்களும் விவரமா வேலை பாக்குறாக. பூசணிக்காயோட தேர்தல் குழுல ஒருத்தன் அந்த வைத்தியனோட உண்மையான பெயர் என்ன னு வாக்காளர் புத்தகத்துல இருக்கும்னு சந்தேகத்துல பாக்குறான். அப்படி கிடைச்சா பூசணிக்கா சின்னத்துல ஓட்டு போட ஒரு ஆள தயார் செஞ்ச்ரலாம்னு. ஒவ்வொரு பெயரா பாக்குறப்ப அணஞ்சபெருமாள் னு பெயர் இருக்கு. வயது 82. பெயருக்கும் வயதுக்கும் ஒத்துப்போகுது. விவரம் தெரிஞ்சு அந்

நல் தீபாவளி

நரகாசுரனை நினைக்க சில நேரம் சிவகாசியே எரிகிறது! அந்தச் சுருட்டிற்குள் சுருண்டிருப்பது எங்கள் இளம் ஏசுக்களின் உயிர்போதை.. சில வெடிகள் வெடிக்காமல் போனதற்குக்கூட சில கண்ணீர்துளிகளில் தான்! 1998ம் ஆண்டு தியாகராசர் கல்லூரி ஆண்டுவிழா மலருக்காக அங்கு படித்தபொழுது எழுதியது. ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடித்து ஒரு சிறுவன் தீயில் கருகிய கையோடு ....கையோடு என்றால் விரலோடு உள்ளங்கை இல்லை. முகம் முழுதும் தீக்காயம். கை வலியின் உச்சத்தில் அவன் முகம் வெந்த பாகங்கள் எரிச்சல் தந்திருக்க அவனும் உணர்ந்திருக்க வாய்ப்பு இல்லை. அருகில் அவனது அம்மா சடலம். கருகிப்போன உடல் இரத்தத் திசு கிழிந்து தீ கொக்கரித்த அந்த புகைப்படத்தை நாளிதழில் பார்த்து இப்படி ஒரு பட்டாசு வெடிக்கவேண்டுமா என்ற ஒரு கேள்வித்தீ தான் என் சிறுவயது பட்டாசுக்கனவுத் தீயை அணைத்தது.... பட்டாசுகளை வெறுக்கத் துணிந்தேன். புகையும் புகை சார் நாளுமெனத் தீபாவளி புகைவதை வீட்டு மாடியில் அமர்ந்து பார்த்த தீபாவளிகள் ஏராளம். சாஸ்திரத்திற்கு ஒரு கம்பிமத்தாப்பென்ற அம்மாவின் ஆசை கூட புரியவைக்கப்பட்டது . படிப்பு முடிந்து வேலை வருகையில் வெடி வெடிப

தயிர்சாதம்

மதியம் மணி மூணு. பயங்கரப் பசி. ஹோட்டலுக்குப் போறோம் டைனிங் டேபிள் மேல ஏறி உட்கார்ந்து சாப்பிடுறோம். அவ்ளோ பசி. பிரபலமான ஹோட்டல். மதிய வேளைகளில் அவ்வளவு கூட்டமாக இருக்கும். சர்வர்கள் பாய்ந்து பாய்ந்து வேலை பார்ப்பார்கள். வெறும் இலைய பாத்துட்டா டபக்குனு சாதத்தைக் கொட்டுற வேலை ஆர்வம் இருக்கும். நிற்க.இதுலாம் நடக்கும். நடக்கணும். இன்று நான் போய் அமர்ந்தேன். உயரமான ஒரு ஆசாமி ஹோட்டல் சூப்ரவைசர் போல. வெள்ளை சட்டை கருப்பு பேண்ட். பருத்த சிவந்த அந்த மனிதன் நெற்றியில் குங்குமம். சுறுசுறுப்பா நடுவில் நிற்கிறார். நான் அமர்ந்த டேபிளைப் பார்த்தார். சாருக்கு என்ன வேணும் கேளு னு ஒரு சத்தம். தண்ணிய வை னு அடுத்த சத்தம். யப்பா...மிரட்டி வேலை வாங்குறாரே னு ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏன்னா அங்க ஒரு பக்கியும் வரல. வெகு நிதானமாக ஒரு மத்திம வயதுக்காரர் வந்தார். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஆர்டர் எடுக்க டிப்டாப் ஆசாமி இருப்பதைப் பார்த்து காப்பியடித்ததில் சில தவறுகளுடன் இருந்தார். கிழிந்த பேப்பரில் ஆர்டர் எடுக்கப்போகிறார். சட்டையை பேண்ட்டுக்குள் திணிப்பதில் அவருக்கு விருப்பமில்லை போல. இண் பண்ணிட்டு எ

அய்யாக்கண்ணு.....

பத்தாம் வகுப்பு வரை நாங்கள் குடியிருந்தது மதுரை மேலப்பொன்னகரம் பகுதியில். எங்கள் தெருவில் பாய் டீ க்கடை என்று ஒன்று உண்டு. பெயர் எல்லாம் கிடையாது. முஸ்லீம் பாய் கடை என்றால் பிரசித்தம். நடுத்தரக் குடும்பங்கள் நிறைந்தப் பகுதி அது. சில சமயங்களில் நண்பகலில் அல்லது வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் கூட நாங்கள் அந்தக் கடையில் டீ காப்பி பார்சல் வாங்குவோம். அந்த டீக்கடை பாய் க்கு மூன்று மகன் கள் மற்றும் ஒரு மகள். சையது அண்ணன், ஷேக் அண்ணன், கனி அண்ணன். மற்றும் பாத்திமா. ஷேக் அண்ணன் என் அப்பாவின் மாணவர். அந்த அண்ணன் வீட்டிற்கு வந்து படித்ததும் அவர் வீட்டின் வறுமை காரணமாக படிப்பு நிறுத்தப்பட்டதும் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் கடையில் அந்த அண்ணன் கல்லாவில் இருக்கும்பொழுது நான் போனால் என்னிடம் அன்பாய் பேசுவார். அவர் ஒரு முறை வீட்டிற்கு வந்த பொழுது நான் அழுதேனாம். அப்பொழுது என்னைச் சமாதானப்படுத்தும் படலமாய் " அய்யாக்கண்ணு" என அப்பா என்னைக் கொஞ்சியிருக்கிறார். அதை அந்த அண்ணன் பிடித்துக்கொண்டார். கடைக்குப் பார்சல் டீ வாங்கச்செல்கையில் அய்யாக்கண்ணு  டீ வேணுமா காப்பி வேணுமா எனக் கேட்பார். என

டமிளன்...

தற்செயலாகக் கவனித்தது. இரண்டு மாணவர்கள் ஆங்கிலத்திலேயே பேசிக்கிட்டு டீ குடிக்கிறாங்க. நம்மூர்ல ஆங்கிலம்னா பணக்காரப் பயலுக பேசுவானுக..இல்லாட்டி வெளியூர் காரக சந்திச்சுட்டா பேசிக்குவாங்க.. இங்க இரண்டு பக்கிகளும் தமிழ்நாடு மாதிரி தான் தெரியுது.. சரி பேசட்டும். தமிழ் தமிழ்னு இங்கேயே கிடக்கமுடியாது.. நாலு மொழி தெரிஞ்சாத்தான் பொழப்பு ஓட்டமுடியும். அதுலயும் ஆங்கிலம் முக்கியம். நம்ம படிக்குறப்ப இந்த இங்கிலீஸ்ஸு எப்புடி இருந்தது..... ஒரு கொசுவளையத்த சுத்த விட்டா.... கல்லூரியில் படிக்கும்பொழுது ஆங்கிலம் ஓரளவிற்கு எளிதாக இருந்தாலும் , பல இடங்களில் என் கோர முகம் அம்மொழிக்குப் பிடிக்கவில்லை போலும்.....எனக்கு ஆங்கிலம் வந்தாலும், அதற்கு பழனிக்குமார் வரவேயில்லை. இளங்கலை படிக்கும்பொழுது ஆங்கில பாடத்திற்கு ஒரு லேடி புரோஃபஸர் வந்தாங்க... ரொம்ப நல்லவங்க....பயங்கர சின்சியர்....கரெக்ட்டா க்ளாஸ்க்கு வந்திருவாங்க... அவங்க எந்த அளவுக்கு சின்சியர்னா....ஆங்கிலத்த ஆங்கிலத்தாலேயே பாடம் எடுப்பாங்க.... ஒரு தடவை...வில்லியம்ஸ் வேர்ட்ஸ்வொர்த் எழுதுன " தி குக்கூ..." (The Cuckoo) னு ஒரு போய

ஆன்லைன் ட்ரக் மார்க்கெட்டிங்

நாளை மருந்து வணிகர்கள் முழுகடையடைப்பு. எதற்காக என்றால்ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் மருந்துகளை விற்க அரசின் முடிவிற்கு எதிராக. ஒரு ஃபர்னிச்சர் ஆன்லைன் மார்க்கெட்டிங்ல வந்தபொழுது இவ்வளவு எதிர்ப்பு வரவில்லை. தொலைதொடர்பு சாதனங்கள் வந்தபொழுது அதை விற்ற வணிகர்கள் இவ்வளவு எதிர்ப்பைத் தரவில்லை. ஆனால் மருந்து வர்த்தகம் அப்படியல்ல. சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னதாக தென்தமிழகம் டெங்குவால் பாதிப்படைந்தது. சாதாரணக் காய்ச்சல் என மக்கள் சாதாரணமாய் இறந்தனர். அப்பொழுது மருந்து கட்டுப்பாட்டுத் துறையினரால் மருந்துக்கடைகள் மீது விதிமுறைகள் பறந்தன. மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் சீட்டு இல்லாமல் மருந்து விற்றால் தண்டனை , உரிமம் ரத்து , வழக்கு மற்றும் லஞ்சம் இப்படி மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். ஆனாலும் விதிமுறைகளை மதித்தனர். இப்பொழுது கதைக்கு வருவோம் . ஆன்லைனில் மருந்து விற்றால் யாரோட பிரிஸ்கிரிப்ஷனனு எப்படி கேள்வி கேட்கப்போகிறார்கள். போலிமருந்துகளைக் கண்டுபிடிக்கும் கட்டுப்பாட்டுத்துறை ஆன்லைனை எப்படி வேவு பார்க்கும். ஒரு ஃபர்னிச்சர் கடையில் பில் இல்லாமல் என வரி ஏய்ப்பு செய்து வியாபாரம் செய்துவிடமுடிய

போலும்....

அந்தக் கவிதையை எழுதி முடித்தப் பின் உனக்கு அனுப்புவது தான் உரித்து. எத்தனையாவது கவிதையெனத் தெரியாமல் கவிதைக் குறுஞ்செய்தியை பிரசுரிக்கிறேன் உனதலை பேசிக்கு... மிக அற்புதம் என்பது கூட உன் சிக்கன ஸ்மைலி காட்டிக்கொடுக்கும். இந்த முறை சரியில்லை என்ற ஒற்றைப் பதில் என் வார்த்தைகளைக் கலைத்துப்போடுகிறது செப்பனிடுவதற்கென்றெ ஒரு மனப்பிறழ்வு- பிறழ்விற்கான எழுத்துகளைப் பிரிக்கிறது... குற்றுயிராய் தொடுத்துக்கொண்ட வார்த்தைகளினம் கண்டு சரியில்லை என்பதைச் சொருகிருக்கிறாய் போலும்... கிழித்தெறியப்பட்ட பழைய காகிதத்தின் அரைகுறை வார்த்தையாடைகள் தப்பித்துக்கொண்டன ஓரங்கீகார மறுப்பிலிருந்து... இன்னும் சில காகிதங்கள் எறியப்பட்டாலும் ஒரு ஸ்மைலி உத்தேசமாய் சிரிப்பதற்கில்லை போலும்... மறுபடியும் வாசிக்கையில் உனக்கனுப்பிய கவிதை வரிகளிலொன்று இப்படியிருந்தது... " காதுமடல்களுக்குள் உன் மூச்சுக்காற்றுப் புதைக்கும் கனவுகள் இப்பொழுதெல்லாம் மிகச் சாதாரணம்..." "சரியில்லை" என வெட்கத்துடன் நீ சிணுங்கியக் குறுஞ்செய்திச் சத்தம் பிடிப

self management

Once my friend asked me to describe about ‘ self-management. Not only to him but also to few, Here is small confusion how to understand self-management. I replied him by telling my expertise event met once. Once when I entered into petrol station , there one person who  had filled fuel for his bike and had given amount of Rs 200 for Rs 130. The petrol boy had given remaining amount of Rs 70 to him. He with so relaxation got amount and taken his purse from his back and put that amount and folded his purse. While happening of this lazy movement , I was on queue behind him and lot stood following me. But he with very casual approach he tried to put his purse on his back with lot of struggle as his back or purse was big. In spite of that petrol boy showed humbly us to him, he was on remain to do same. I , now , conveyed to my friend that self management might start from even petrol station. He laughed and told it should be needed for further understanding. I affirm again

முற்றும்

எப்பொழுது ம் இலகுவான வார்த்தைகளை அது சொல்வதில்லை... மிருதுத்தன்மை கொண்டதான அடர்த்தியற்ற ஒரு நிழலை மட்டுமே விரவச் செய்யும் திறனற்ற பாசாங்காய் எவ்வளவு சுவாசித்தாலும் ஆசுவாசப்பட்டுக்கொள்ளாத வெள்ளீரல் வெளிப்பட்டுக் கதறத் துணியும் கனமாய் நின்றகலும் குமிழ் உடையாதிருத்தலொத்த திடத்திரவக் கானல்நீர் நிகழ்வாய்... ஒற்றையொற்றை கேசங்கள் உரசும் நுனியில் உதறிப்போகும் ஓருரிமையாயும்.... முயலும் தருணத்தின் முந்தையக் கணத்தில் முடிந்துபோகும் ஒரு செயலிழியை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வாயும்... இந்தப் பிரிதல் இனிதாய் ஆரம்பிக்குமாயின் முற்றுமென முற்றும் அனைத்தும்.....

மதுரை டூ அரியலூர்

ஒரு கட்டுரையில் புகைவண்டியில் செல்லுவது பற்றிச் சொல்கையில் அது பிடிக்காது  என்று குறிப்பிட்டிருந்தேன்.  எனக்கு ஏன் புகைவண்டி (முதலில் புகைவண்டி னு எழுதுறதுக்கு ட்ரெயின் னு போட்டுக்கிறேன்...தமிழில் எழுதுனா வரிவிலக்கா கொடுக்கப்போறாங்க...)  ட்ரெயின்ல போறது ஏன் பிடிக்காதுனா....அதற்கு ஒரு பிளாஷ்பெக் இருக்கு. கல்லூரி முடித்து வேலை சேர்ந்ததும் 3 மாதத்தில் சென்னையில் மீட்டிங் என்று அழைத்தார்கள்.  நான் பஸ்ஸில் போகலாம் என என் சீனியரிடம் சொன்னேன்.  அவர் அவ்வளவு தூரம் பஸ்ஸிலா என ட்ரெயினில் போலாம் எனச்சொன்னார். ரிசர்வ் பண்ணவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நானும் சரி என்றுவிட்டேன்.  8.30 க்கு பாண்டியன். ஆனா 8 க்குலாம் வாப்பா னு அழைத்தார்.  சரினு போனா.. பூட்டியிருந்த கம்பார்ட்மெண்ட் க்கு வெளியேக்யூ இருந்தது.  க்யூ நிற்கனும்னா....அது போகுது...போகுது......மதுரையில கிளம்புற ட்ரெயினுக்கு வரிசை அடுத்த ஸ்டேசன் சோழவந்தான் வரைக்கும் நிற்கும் போல..... சரினு நானும் என் சீனியரும் போய் நிற்கிறோம்... இப்ப ட்ரெயின் அன்ரிசர்வ் கம்பார்ட்மெண்ட்ட திறக்குறாங்க..... கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணா நானும் என் சீனியரும