அம்மா வேகமாம்மா .... டைம் ஆயிருச்சு ...... பரபரப்பாய் கிளம்பினான் ப்ரவீன் . முழுப்பெயர் ப்ரவீன் குமார் . வீட்டின் வெளியே இவன் நண்பர்கள் காத்துக்கொண்டிருந்தனர் . முக்கியமாக மாடசாமி ( கல்லூரிப் புகழ் மண்டையன் ) கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 2 நாள் முகாம் ஒரு கிராமத்தில் . கல்லூரியிலிருந்து அக்கிராமம் வந்தடைந்தார்கள் . அக்கிராமத்தில் ஒரு கண்மாய் . அக்கண்மாயிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் . ஆனால் கால்வாய் முழுதும் முள்செடிகளும் , மணல்மேடுகளும் , சிதைந்த கரைகளுமாய்ருந்தன . அதைச் சீர் செய்ய 4 கல்லூரிகளின் மாணவர்கள் வந்திருந்தனர் . அதில் தான் நம் ப்ரவீன்குமாரும் , மண்டையனும் . பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேலைகள் பகிரப்பட்டன . ப்ரவீனும் , மாடசாமி என்ற மண்டையனும் அரிவாள் , மண்வெட்டி சகிதமாக ஒரு ட்ராக்டரில் மற்ற மாணவர்களுடன் கிளம்பினர் . " ஏண்டா மண்டையா ! இவனுக கூப்பிட்டு போறத பார்த்தா ... கண்மாயிலிருந்து கடல் வரைக்கும் தூர் வாறனும் போலேயே .... இல்ல ப்ர