இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரவல்

கவிதைகளைப் படித்திருக்கிறேன்... தழுவியதில்லை... உன் விரல்களைக் கொஞ்சம் இரவல் கொடு....

தூரம்

படம்
என் தூரம் உன்னருகே வந்தபோது உன் தூரம் என்னைத் துரத்தியது.... தூரங்களைத் துறந்து வா..... நம்மை நாம் துறப்போம்.....

புல்லாங்குழல்

படம்
வேரறுத்து உயிர் பறித்து துளைத் துளையாய் சல்லடையிட்டு புல்லாங்குழல் இசைக்கிறது- உண்மையில் ஒரு மூங்கில் அழுகிறது
கழிந்து விட்ட நாட்களில் வாழ்ந்ததற்கான தடயம்... கொண்டாடிய நாட்களில் கொண்டாடப்பட்ட தருணம்..... தடுத்தாலும் தடுதல் ஆனாலும் ஓடிவிட்ட மாயை- வாழ்க்கை..... முட்டிக்கொள்வதற்கும் முடிந்து கொள்வதற்கும் எவனவனோ முன்னேறுகிறான்.... விரலோடு விரலாகப் பற்றிக் கொள்ள வெறுமை மட்டுமல்ல என் தனிமையும் உண்டு.... என்னிடம் நானே இருக்கின்றேன்... ஒவ்வொரு விடியலையும் தேடிக்கொள்ள.......                                                                        

அருகருகே

அருகருகே உன் வீடும் என் வீடும்..... எட்டும் தூரத்தையே எட்டி எட்டிப் பார்த்தேன் உன்னை நான் எட்டுவதற்காக.... நீ சோறு ஊட்டுவதற்காக உன் வீட்டு மாடியில் காகங்கள் பல.... உண்மையில் உனக்காக கரைவது நான் மட்டும் தான்..... நிலவொளியில் நீ நடப்பதைப் பார்ப்பது சுகமே... வானில் நிலா காய்கிறதா... எனக்காக காய்க்கிறதா.....

திரி

திரியில் ஏற்றப்பட்ட தீபமாய் தள்ளாடுகிறேன்..... காற்றாய் அணைத்து விடு நான் எரிந்தது போதும்.....

நீ - நான் 10

நீ நான் பயணித்த காரைக்குடிச் சாலை கற்களால் ஆனதல்ல..... கனவுகளால்......           

தோல்வி

கடைசி வரை காதல் சொல்லப்படவே இல்லை..... நான் தோற்றேனா... தோற்கடிக்கப்பட்டேனா.....                                                                        

வானம்

படம்
வானம் எழுத்தாய் மாறாத என் எழுத்துகளின் ஏடு.... நானும் அவளும் கை கோர்த்துக் கொண்ட கனவுப் பூங்கா.....வானம் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் புணரும் முன் களவு கொண்ட வேதி ஊடகம்- வானம்...... நாங்கள் அன்னாந்துப் பார்க்கும் அதிசயம்-வானம்...... மனிதன் செயற்கையாய் விட்டுவைத்த இயற்கை-வானம்....

எதார்த்தம்2

படம்
நீ நீயாகவே இருந்து விடு... உரிமை கோர யாரும் இல்லை.... உன்னையே நீ மீட்டு விடு.... உரிமையாய் வர யாரும் இல்லை..... நீயாய் உதறும் வரை எதுவுமே உன்னோடு தான்.....

நான் - நீ 5

படம்
நீ குடை விரிப்பது நான் நனையாமல் இருக்கவா... இல்லை உன் மழையில் நனையவா......

கவிதைக் குழந்தை....

படம்
இது அதீத கற்பனை..... அசரீரி ஒன்று அழைக்கின்றது..... மாயக்குதிரையின் வேகத்தில் மனக்குதிரையும்...... கற்பனைக் கானலில் மில்டன் கூட பார்க்கிறான்.... பாரதி பார்த்து கற்பனை யானையும் வீழ்கிறது...... வெள்ளைக் காகிதம் எடுத்து எழுதுகோல் விரலோடு நான் பிறக்கிறேன்..... தூண்டில் போட்ட தூக்குத்தண்டனையில் மீனும் பிழைக்கிறது..... என் வரி வாழவில்லை.... வாழையே வாழை வாழையாய் வர தமிழ் என்ன தரிசு நிலமா..... கருக்கலைந்த அகப்பை கண்ணீர் விடுவதில்லை கண்கள் மட்டுந்தான்.... உந்தித் தள்ளப்பட அண்டமாய் கருத்தரிக்கும் என் கவிதைக் குழந்தை....

பௌதீகம்

எதைஎதையோ சொல்லிக்கொடுத்த பௌதீகம் எனக்கும் உனக்குமான ஈர்ப்புவிசையை சொல்லவில்லை நீ நான் நியுட்டன் ஒன்றாயிருந்தால் நான் தான் பிரபலமாயிருப்பேன் ஆப்பிளைக் காட்டிலும்..... உன்னில் விழுந்ததால்.....

நீ சிற்பம்

கள்ளம் என்பதன் அர்த்தம் என்ன கபடம் என்பதன் பொருள் என்ன நீ வாழ வந்ததன் இலட்சியம் என்ன படபடக்கும் பட்டாம்பூச்சியின் வண்ணம் பாராதீர் பிறவியின் வலி பாரீர்...... உளி பார்க்காத எந்தக் கல்லும் கடைசிவரை கல் தான் நீ நீயாகவே செதுங்கிக்கொள்

காதல் கவிதை

ஒரு கவிதை கேட்கிறாய் உன்னையே பற்றிக் கொண்டு திரிபவன் உன்னைப் பற்றி எழுதுகிறேன்.... உன் வளையல் கரங்களில் என் வானம் வளைந்து நெளிகிறது. ரோஜா இதழும் வெட்கப்பட்டே சிவக்கிறது... நான் உனக்கு அதைப் பரிசளித்ததும்... மழை நேரத்து மாலை வேளையில் கருப்பு வானவில்லாய் நீ.... ஓடுகின்ற மின்னலை கண்களால் சிறையெடுக்க உன்னைத் தொடர்கின்றேன் நானும்.... பார்வைகளால் எத்தனை முத்தங்களைப் பரிசளித்தாய்... இத் தருணங்களை கொஞ்சம் விதைத்து விட்டுப் போ... நாணம் கொஞ்சம் நாணட்டும்... என் கனவுகளுக்கு வண்ணம் தீட்டினாய்... இன்னும் என்ன திட்டம் தீட்டுகிறாய்.. கண்களைப் பறித்துக்கொள்ளவா....

நான் - நீ 09

என்னால் வளைத்துப் போடமுடியாத கார்மேகம் நீ.... கொஞ்சம் சிரித்து விடு... நான் கொஞ்சம் நனைந்து கொள்கிறேன்....

வேண்டுதல்..

இம்மை மறுமை இன்னல் தீர இறைவா... என்னை ஈர்த்து விடு....... எம்மை யாமே உமக்களித்தோம்.. வேண்டுவன யாவும் தந்து விடு..... முரண்பட்டவன் பார்த்தால் இல்லை என்பான்.. இல்லை என்பவனுக்கும் ஆம் என்று ஆட்கொண்டு விடு........

உரி(ய)ச் சொல் நீ

சால உறு தவ நனி உரிச்சொற்களாம்... எனக்குரிய சொல் 'நீ' மட்டுமே.....

பாமரன் வாக்கு 2

படம்
ஜாதி பெயர் கேட்பவனை சுட்டுவிட வேண்டும் முதல் குறி அரசியல்வாதி.... அண்ணன் ஒத்துழைக்கமாட்டான் அவன் மாவட்டசெயலாளர்.... இனமெனச் சாடுபவனைச் சாகும்வரை தூக்கிலிட வேண்டும் தம்பியும் ஒத்துழைக்கமாட்டான் அவன் தனிஈழ ஏமாற்று அரசியலின் அடிபொடி..... பள்ளிக்கூடம் கூட சாதிச் சான்றிதழ் கேட்கிறது. பாரதி பாடல் சொல்லித்தருவது வெட்கக்கேடு...... மானியம் பெற்று ஓட்டு போட்டவன் வாய் மூடிக்கிடக்கிறான் அவன் போட்டது ஓட்டா வாய்க்குப் பூட்டா....                                                                        

பாமரன் வாக்கு

படம்
வாழிய ....வாழிய செம்மான் வாழிய! கொடி பிடித்து கூக்குரலிட்ட கோமகன் யாவரும் வாழிய....வாழிய! குமர குருபரனோ சிதம்பர நாதனோ எஞ்சி யிருந்த உயிரையுந் தந்த வாஞ்சி நாதனோ உற்ற நாட்டிற்காக அற்ற பலர் புகழும் வாழிய....வாழியவே! மார் தட்டி மார் தட்டி மானங் காத்த எம்மான் வாழியவே! இப் புகழ் பாடி புகழ் பாடி சுதந்திரம் தம் காத்தோம் நாட்டின் மானங் காத்தோமா........                                                                        

ஒன்பதாம் வகுப்பிலும் புவனா......

இம்முறை ஒன்பதாம் வகுப்பு. அரைப்பரிட்சை ஆரம்பிக்கும் முன்னரே அம்மாவிடம் கேட்டேன்...சுற்றுலா எப்போது. அம்மா சுற்றுலாவை சொல்லிவிட்டு புவனா வந்தாதான் வருவாளாம்....நான் கொஞ்சம் ஆடிபோயிட்டேன்...நானும் சொல்லிவைத்தேன்...புவனா வந்தாதான் நான் வருவேன்...வழக்கம்போல் விடுமுறை ஆரம்பித்தது. புவனா வருவாள் என்பதை உறுதி செய்துவிட்டு இரவு 11 மணி பேருந்துக்கு 6 மணிக்கே பள்ளி சென்றோம்...இம்முறை எல்லா அத்தைகளும் பெரியம்மாக்களும் ஒரே அறையில் இருந்தார்கள்...பதில் சொல்ல எளிது....வேதவள்ளி பெரியம்மா ஆரம்பித்தார்கள்...என்னடா பழனி பரிட்சை நல்லா எழுதிருக்கியா....(கேள்விய இந்த வருஷம் மாத்திடாங்களே)....நல்லா எழுதிருக்கேன் பெரியம்மா.....என சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தேன்... இம்முறை இராஜேஸ்வரி அத்தை பையன் கல்யாண், கிருஷ்ண்வேணி அத்தை பையன் விவேக், மற்றும் இருவர் என்னை வரவேற்று அழைத்துச்சென்றார்கள்....நால்வரும் என்னை சேர்த்துவைத்துக்கொண்டு ஒரு திட்டம் தீட்டினார்கள்...வந்திருக்கும் அத்தைகளின் மகள்களை பார்க்க(சைட்) வேண்டும். அதிலும் (என்) புவனா....(அடப்பாவிகளா)...நான் ஒன்றும் சொல்லவில்லை...ஒரு பைய

எட்டாம் வகுப்பில்...புவனா......

எட்டாம் வகுப்பு அரைப்பரீட்சை விடுமுறை நாட்கள். லீவு முழுக்க கிரிக்கெட் ஆடியே கழிக்கவேண்டும் என மதுரை சிறைக்காவலர் பயிற்சி மைதானத்தை குறி வைத்தேன்...ஆனால் அம்மா வேலை பார்க்கும் ப்ள்ளியில் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார்கள். அம்மாவும் நானும் போகலாம் என திட்டமிடப்பட்டது. எனக்கென்னவோ விருப்பமில்லாமல் அம்மாவிடம் மறுப்பைத் தெரிவித்தேன். அம்மாவோ...டேய்..இராஜேஸ்வரி அத்தை பையன் ( அம்மாவுடன் வேலை பார்க்கும் அனைத்தும் ஆசிரியைகளும் எனக்கு அத்தையாகவும் பெரியம்மாகவும் இருந்தார்கள்) கல்யாண், கிருஷ்ணவேணி அத்தை பையன் விவேக் வருவாங்கடா...நீயும் வாடா என்று அழைத்தார்கள். என்ன செயவதென்று தெரியாமல் பாதி சம்மதம் தெரிவித்தேன். ஆனால் முழுமையாக சம்மதிக்க  வைக்க போகும் ஊர்களைப் பற்றி சொல்லலானார்கள். பிறகு தான் சொன்னார்கள் மாணிக்கம் அத்தையின் மகள் புவனா வும் வருவாள் டா என்று...இப்பொழுது முழு சம்மதத்தைத் தந்தேன்.  புவனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) யார் அவள். பார்க்கலாம் என சுற்றுலாவிற்கு தயாரானேன். இரவு 11 மணி அளவில் பேருந்து வருமாம். ஆனால் பள்ளிக்கு 6 மணியளவில் சென்றோம்..முதலில் இராஜேஸ்வரி அத்தை பார

எதார்த்தம்

சமூகம் சுண்டியதில் என் பக்கம் விழும் நிகழ்தகவுகள் வறுமையும், வெறுமையும்..... நான் சுண்டியதில் என் பக்கம் விழுந்த நிகழ்தகவுகள் வெறுப்புகளும், வெற்றிகளும்.....

நான் - நீ 8

படம்
கட்டுப்படாத மனமும் கட்டுப்பட்டது நீ என்னுள் வரும்வரை..... கட்டுப்பட்ட மனமும் கட்டவிழ்ந்தது நான் உன்னில் கட்டுப்படும் வரை.....

நான் - நீ 7

படம்
நானும் என் மனமும் என்னுள்.. உன்னை 'நீ' யாக பார்த்தபோது......! என்னை 'நீ' யாக பார்த்தபோது நானும் என் மனமும் உன்னுள்.......

பௌதீகம்

எதைஎதையோ சொல்லிக்கொடுத்த பௌதீகம் எனக்கும் உனக்குமான ஈர்ப்புவிசையை சொல்லவில்லை நீ நான் நியுட்டன் ஒன்றாயிருந்தால் நான் தான் பிரபலமாயிருப்பேன் ஆப்பிளைக் காட்டிலும்..... உன்னில் விழுந்ததால்......

நான் - நீ 6

படம்
என்னை நீயாக ஆட்கொண்டாய்.... மிச்சமிருப்பது நீயும் நானுமாய் நாமுமாய்.....

தன்னம்பிக்கை 2

எதிர்ப்புகள் மட்டுந்தான் சொந்தம் எதிர்பார்ப்புகள் உனக்கு எதற்கு..... நிகழ்வுகளை நிகழ்த்த வந்தவன் நீ- நிகழ்தகவுகளை பார்ப்பது ஏன்...... வெற்றி இஷ்டங்களையும் கஷ்டங்களையும் உடைத்தால் தான்.... நீ உடைந்தால் எப்படி......