எட்டாம் வகுப்பில்...புவனா......

எட்டாம் வகுப்பு அரைப்பரீட்சை விடுமுறை நாட்கள். லீவு முழுக்க கிரிக்கெட் ஆடியே கழிக்கவேண்டும் என மதுரை சிறைக்காவலர் பயிற்சி மைதானத்தை குறி வைத்தேன்...ஆனால் அம்மா வேலை பார்க்கும் ப்ள்ளியில் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார்கள். அம்மாவும் நானும் போகலாம் என திட்டமிடப்பட்டது. எனக்கென்னவோ விருப்பமில்லாமல் அம்மாவிடம் மறுப்பைத் தெரிவித்தேன். அம்மாவோ...டேய்..இராஜேஸ்வரி அத்தை பையன் ( அம்மாவுடன் வேலை பார்க்கும் அனைத்தும் ஆசிரியைகளும் எனக்கு அத்தையாகவும் பெரியம்மாகவும் இருந்தார்கள்) கல்யாண், கிருஷ்ணவேணி அத்தை பையன் விவேக் வருவாங்கடா...நீயும் வாடா என்று அழைத்தார்கள். என்ன செயவதென்று தெரியாமல் பாதி சம்மதம் தெரிவித்தேன். ஆனால் முழுமையாக சம்மதிக்க  வைக்க போகும் ஊர்களைப் பற்றி சொல்லலானார்கள்.
பிறகு தான் சொன்னார்கள் மாணிக்கம் அத்தையின் மகள் புவனா வும் வருவாள் டா என்று...இப்பொழுது முழு சம்மதத்தைத் தந்தேன்.  புவனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) யார் அவள். பார்க்கலாம் என சுற்றுலாவிற்கு தயாரானேன். இரவு 11 மணி அளவில் பேருந்து வருமாம். ஆனால் பள்ளிக்கு 6 மணியளவில் சென்றோம்..முதலில் இராஜேஸ்வரி அத்தை பார்த்தார்கள்...பழனி..எப்படி படிக்கிற...நல்லா படிக்கிறேன் அத்தை....கல்யாண் வல்லையா.......
இல்லப்பா....பக்கத்துல தான் வீடு...அதான் 11 மணிக்கு பஸ்ஸ பாத்துட்டு வர்றேனு சொல்லிட்டன்....
அப்புறம்...சகுந்தலா அத்தை....என்னடா...பழனி...எப்படி படிக்கிற....
நல்லா...படிக்கிறேன்...(ஸ்கூல் பையனுக்கு ஒரே கேள்வி தான் கேப்பாங்க போல....)
அப்புறம்   
அம்மா..ஒரு வகுப்பறைக்கு கூப்பிட்டுபோனார்கள். அங்கு சில அத்தைகளும், பெரியம்மாக்களும் இருந்தார்கள். அந்த மாணிக்கம் அத்தை அழைத்துப் பேசினார்கள்...என்ன பேசியிருப்பார்கள்...அதே கேள்வி தான்.
அனைத்து பதில்களும் அளித்த்ப்பின்னாடி மாணிக்கம் அத்தை...சிங்கப்பூர் சாக்லேட் கொண்டுவந்தேன் டா...இரு...கொண்டுவரச்சொல்றேனு...புவனா...புவனா....என சத்தமாக அழைத்துவிட்டு...மற்ற அத்தைகளுடன் பேச ஆரம்பித்தார்...நான் மட்டும் வாசலை பார்த்தேன்...யார் அந்த புவனா....ஓர் உருவம் வந்தது.....சிவப்பு சல்வார் கமீஸ்..வெள்ளை துப்பட்டா.....இப்பொழுது பார்த்திருந்தால்..புவனா இல்லை ஒரு பூ என்று எழுதியிருப்பேன்....அவள் வந்ததும் என்னையே பார்த்தாள்...மாணிக்கம் அத்தை அவளைப் பார்த்து...யாரென்று தெரியலையா...தனம் (என் அம்மா) அத்தையின் மகன் டீ.....என்றார்....
ஆகா...அத்தை கலாச்சாரம் அவள் வீட்டிலும் பரவியிருக்கிறது...
என்னடி பாக்குற ....சாக்லேட்ட எடுத்துக்கொடு....என்றார் அத்தை....
அவ்ளோதான்...கேமிராவ கட் செய்து ஆன் செய்தால்...அவள் பின்னாடி நான் நகர்ந்துகொண்டிருந்தேன்...நல்லவேளை சாக்லேட் அவள் பையிலும், அந்தப் பை 2 வகுப்பறை தாண்டியும் இருந்தது. அந்த வகுப்பறைக்குள் நுழைந்தோம்..அங்கு ஒரு மஞ்சள் பல்பு மிகவும் சோகமாக எரிந்துகொண்டிருந்தது..பரணியிலிருக்கும் பையை ஏறி எடுக்க சிரம்ப்பட்டாள்.
அனைவரும் எதிர்பார்ப்பது போலவே...நானே ஒரு நாற்காலியை போட்டு...ஏறி எடுக்க முயற்சித்து...அந்தப்பையை திறந்து சாக்லேட்டை எடுப்பதற்குள்....கரண்ட் கட் டாகி (அப்பொழுதும்) விட்டது...
அவள் உடனே அங்கேயே இரு என்று கூறி விட்டு தட்டுத்தடுமாறி வரத்துவங்கினாள் அந்த இருட்டுக்குள்....
திடீரென்று கரண்ட் உடனே வந்தது. அவளைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது....அவளுக்கோ என்னைப் பார்த்ததும் கோபம் வந்துவிட்டது.
காரணம்...அவள் என்னிடம் இருக்கும் பையை வாங்க பெஞ்ச் டெஸ்க் எல்லாத்தையும் தடவி தடவி வந்துகொண்டிருந்தாள்.
நானோ...பையை மேலேயே வைத்துவிட்டு, சாக்லேட்டை மட்டும் கையில் எடுத்துகொண்டு அதே நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துவிட்டேன்......
கோப்பட்டவள்...என்ன உட்கார்ந்துட்ட.....உன்னைய விட்டுட்டு நாங்க டூர் போயுருவோம் பாத்துக்க..என்றாள்
சாக்லேட்ட கொடுத்துட்டுத்தான போவிங்க என்றேன்...
சிரித்து விட்டுப்போனாள்....
சிரிப்பு இனித்தது.
சிறிது நேரத்தில் பஸ் வந்திருச்சுனு சத்தம்....
முதல் ஆளாக புவனா ஏறினாள்....அவள் எந்த சீட்டில் உட்கார்கிறாள் என பார்த்தேன்....அதற்கு அடுத்த சீட்டோ...இல்லை முந்துன சீட்டோ தான் என் இலக்கு......
அடுத்து பஸ்ல ஏறுனா...முந்துன சீட்ல மதுரவல்லி அத்தை....என்னடா...பழனி ...நல்லா...படிக்கிறியா......(முடியலடா...சாமி)..படிக்கிறேன்...அடுத்து புவனா....சரி அதுக்குப்பின்னாடி..பாத்தா.....அங்க யாரோ..ஒருத்தங்க பை வச்சு இடம் புடிச்சுடாங்க.....              
அவளை ஏக்கத்துடன் பார்த்தேன்....
நான்தான் உனக்கு இடம் போட்டேன்...உட்காரு...அது எங்க பை தான்..என்றாள்.....
ச்ச்ச்ச்ப்பாடா....என்றேன்......
ஜன்னலோர சீட் அமர்ந்துகொண்டோம்......என்ன பேசுவது என்று தெரியவில்லை....
ஆம்பள பையன் தான ஆரம்பிக்கனும்.....ஆரம்பிச்சேன்.....(தயவுசெய்து சிரிக்க்கக்கூடாது)
புவனா....புறநானூறு படிச்சிட்டியா....உங்களுக்கு பரிட்சையில கேட்டாங்களா......
புறநானூறா......படிக்கல.....
இது முக்கியமா.....என்று மறுபடியும் கேட்டாள்..என்னடா...மௌனராகம் கார்த்திக் மாதிரி சகஜமா பேசமுடியலையே...என்று நினைத்து அமைதியாகிவிட்டேன்........
ஜன்னலோர வழியாக...ஒரு சாக்லேட் வந்தது.....சுற்றுலா ஆரம்பித்தது அப்பொழுதுதான்............

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8