காதல் கவிதை
ஒரு
கவிதை கேட்கிறாய்
உன்னையே
பற்றிக் கொண்டு
திரிபவன்
உன்னைப் பற்றி
எழுதுகிறேன்....
உன்
வளையல் கரங்களில்
என் வானம்
வளைந்து
நெளிகிறது.
ரோஜா இதழும்
வெட்கப்பட்டே
சிவக்கிறது...
நான் உனக்கு
அதைப்
பரிசளித்ததும்...
மழை நேரத்து
மாலை வேளையில்
கருப்பு வானவில்லாய் நீ....
ஓடுகின்ற மின்னலை
கண்களால்
சிறையெடுக்க
உன்னைத்
தொடர்கின்றேன்
நானும்....
பார்வைகளால்
எத்தனை
முத்தங்களைப்
பரிசளித்தாய்...
இத் தருணங்களை
கொஞ்சம்
விதைத்து விட்டுப் போ...
நாணம்
கொஞ்சம்
நாணட்டும்...
என்
கனவுகளுக்கு
வண்ணம்
தீட்டினாய்...
இன்னும் என்ன
திட்டம் தீட்டுகிறாய்..
கண்களைப்
பறித்துக்கொள்ளவா....
கவிதை கேட்கிறாய்
உன்னையே
பற்றிக் கொண்டு
திரிபவன்
உன்னைப் பற்றி
எழுதுகிறேன்....
உன்
வளையல் கரங்களில்
என் வானம்
வளைந்து
நெளிகிறது.
ரோஜா இதழும்
வெட்கப்பட்டே
சிவக்கிறது...
நான் உனக்கு
அதைப்
பரிசளித்ததும்...
மழை நேரத்து
மாலை வேளையில்
கருப்பு வானவில்லாய் நீ....
ஓடுகின்ற மின்னலை
கண்களால்
சிறையெடுக்க
உன்னைத்
தொடர்கின்றேன்
நானும்....
பார்வைகளால்
எத்தனை
முத்தங்களைப்
பரிசளித்தாய்...
இத் தருணங்களை
கொஞ்சம்
விதைத்து விட்டுப் போ...
நாணம்
கொஞ்சம்
நாணட்டும்...
என்
கனவுகளுக்கு
வண்ணம்
தீட்டினாய்...
இன்னும் என்ன
திட்டம் தீட்டுகிறாய்..
கண்களைப்
பறித்துக்கொள்ளவா....
கருத்துகள்
கருத்துரையிடுக