ஒன்பதாம் வகுப்பிலும் புவனா......
இம்முறை ஒன்பதாம் வகுப்பு. அரைப்பரிட்சை ஆரம்பிக்கும் முன்னரே
அம்மாவிடம் கேட்டேன்...சுற்றுலா எப்போது. அம்மா சுற்றுலாவை சொல்லிவிட்டு
புவனா வந்தாதான் வருவாளாம்....நான் கொஞ்சம் ஆடிபோயிட்டேன்...நானும்
சொல்லிவைத்தேன்...புவனா வந்தாதான் நான் வருவேன்...வழக்கம்போல் விடுமுறை
ஆரம்பித்தது. புவனா வருவாள் என்பதை உறுதி செய்துவிட்டு இரவு 11 மணி
பேருந்துக்கு 6 மணிக்கே பள்ளி சென்றோம்...இம்முறை எல்லா அத்தைகளும்
பெரியம்மாக்களும் ஒரே அறையில் இருந்தார்கள்...பதில் சொல்ல
எளிது....வேதவள்ளி பெரியம்மா ஆரம்பித்தார்கள்...என்னடா பழனி பரிட்சை நல்லா
எழுதிருக்கியா....(கேள்விய இந்த வருஷம் மாத்திடாங்களே)....நல்லா
எழுதிருக்கேன் பெரியம்மா.....என சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே
வந்தேன்...
இம்முறை இராஜேஸ்வரி அத்தை பையன் கல்யாண், கிருஷ்ண்வேணி அத்தை பையன் விவேக், மற்றும் இருவர் என்னை வரவேற்று அழைத்துச்சென்றார்கள்....நால்வரும் என்னை சேர்த்துவைத்துக்கொண்டு ஒரு திட்டம் தீட்டினார்கள்...வந்திருக்கும் அத்தைகளின் மகள்களை பார்க்க(சைட்) வேண்டும். அதிலும் (என்) புவனா....(அடப்பாவிகளா)...நான் ஒன்றும் சொல்லவில்லை...ஒரு பையன்கள் குழுவிற்கும் ஒரு தலைவன் (ஹீரோ ) உண்டு...அது கல்யாண். அவன் முன்னே செல்ல...நாங்கள் நால்வரும் பின்னே சென்றோம்....அனைவரின் கண்களும் புவனாவை தேடியது...எனக்கு மட்டும் மனதும் சேர்த்து......
ஒரு வராண்டாவில்...மாணிக்கம் அத்தை( புவனாவின் அம்மா) வந்துகொண்டிருந்தார்கள்...முன்னே சென்ற கல்யாண் சிரித்தான்....என்னடா கல்யாண்...அம்மா எங்கே....என்றார் அத்தை....
என்னைப்பார்த்ததும்...என்னடா பழனி பரிட்சை நல்லா எழுதிருக்கிறாயா...என்றார்கள் ...( உடனே பக்கத்துல இருக்கிற விவேக்கைப் பார்த்து..அத எப்படிடா என்ன பாத்து இப்படி கேக்குறாங்க...னு அடிக்கனும்னு தோணுச்சு)....நல்லா எழுதிருக்கிறேன் அத்தை....
உடனே அத்தை...புவனா சொல்லிட்டாடா....பழனிக்குமார் வந்தாத்தான் நானும் வருவேன்.னு....என்றார்....நான் கொஞ்சம் பறந்துட்டேன்.......
பறந்துவிட்டு கீழே இறங்குனா....அத்தை போயிருந்தார்....மற்ற நால்வரும் என்னை முறைத்துக்கொண்டிருந்தனர்.
கேமிராவை கட் செய்து ஆன் செய்தால்....நான் முன்னே நடக்க...என் பின்னே நால்வரும் வந்தனர்....புவனாவை பார்க்க......
ஒரு அறையில் பெண்களின் பேச்சு சத்தம் கேட்டது.....அதிலும் உமா அக்காள் சத்தம் அதிகமாகக் கேட்டது....உமா அக்காள்....கல்யாணின் அக்கா..... அந்த அறைக்குள் நான் நுழைந்தேன்...என் பின்னே என் நால்வர்....(அவனுக கடக்குறானுக......)
நுழைந்ததும் பார்த்தேன்.மன்னிக்கவும்...தேடினேன்..புவனா எங்கே......
உமா அக்காள் என்னைப்பார்த்து கேட்டாள்...என்ன சார் இந்தப்பக்கம்
அக்கா...உங்கள பாக்கத்தான்....அக்கா......
பின்னே இருந்து....நீ நல்லாவே இருக்கமாட்ட டா....என்று ஒரு குரல்....நம்ம கல்யாண் தான்.....
கூட்டத்தில் புவனா இருந்தாள்....பார்த்தாள்....சிரிக்கவில்லை...நானும் தான்..
சிறிது நேரத்தில்...அங்கிருந்து வெளியே வந்தோம்....
வெளியே வந்ததும் விவேக் சொன்னான்...கல்யாண்...புவனா உன்னையே பாத்தாடா......
ஆனால் உண்மை எனக்கு மட்டும் தெரியும்....
அங்கும் இங்கும் அலைந்து விட்டு நேரத்தைக் கடத்தினோம்.
பேருந்து வந்தது.
எனக்குக் குழப்பம்...புவனா ஏன் சிரிக்கவில்லை...ஏன் பேசவில்லை...நானாக பேசியிருக்கவேண்டுமா....உமா அக்கா முன்னாடி எப்படி பேசுவது....ஒருவேளை நான் சிரித்திருந்தா அவளும் சிரிச்சுருப்பாளோ....
இல்லைனா...அவ மறந்துட்டாளோ....
பேருந்து வந்ததும்..அவள்தான் ஏறினாள்....ஒரு சீட்டில் உட்கார்ந்து விட்டு...அடுத்த சீட்டில் இடம் போட்டாள்.....
எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது....
நான் பேருந்திற்குள்...ஏறி..அவளைப்பார்த்தேன்...அவள் திரும்பிவிட்டாள்.
அவள் எனக்காக போட்டுவைத்திருந்த இடத்தைப்பார்த்து...இங்க யாராவது வராங்களானு கேட்டேன்.....
ஏய் உட்காருடா.....என்றாள்....
நல்ல மரியாதை என்றேன்...
சிரிக்கமாட்டியோ...என்றாள்...
சிரித்தேன்.....
அவள் அமைதியாய் விட்டாள்.....
இருவரும் கொஞ்சம் நேரம் அமைதியாய் பேசிக்கொண்டோம்....
பிறகு என்னடா.பழனி வழக்க்கமா ஒரு கேள்வி கேப்பியே....கேக்கலையா...என்றாள்
என்ன கேள்வி....
நீ கேட்டுருவனு நான் கலிங்கத்துப்பரணி படிச்சுட்டுவந்தேன் என்றாள்...
(போன வருஷம் புறநானூறு கேட்டேன்...)
நான் சிரித்துக்கொண்டே இருந்ததில்...பையை தூக்கிகொண்டு பேருந்திற்குள் ஏறி வந்த கல்யாண் நிற்பதை பார்க்கவில்லை....
டேய் பழனி....இந்த டூர் உனக்குத்தான்டா...என்று சொன்னான்....
உடனே விவேக்....கல்யாண்...உன்னையே பாக்குறா டா...என்றான்.....
நான் சிரித்துவிட்டேன்.......
பேருந்து கிளம்பியது.....
வழக்கம்போல் ஒரு சாக்லேட் துண்டு ஜன்னலோரமாய் வந்தது....இம்முறை அவள் மணிக்கட்டில் ஒரு கடல் சிப்பிகளின் பிரேசிலேட்....போனவருஷம் கன்னியாகுமரியில் நான் வாங்கிகொடுத்தது.....
இப்பொழுது தான்.....அந்தக்கடல் என்னை நனைத்தது.......

கருத்துகள்
கருத்துரையிடுக