இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அநேகம்....

அவர் ஒரு குடை வைத்திருந்தார். கருப்பு நிறத்தில் இருக்கும் மடக்கிய அந்த குடைக்கு அழுக்கும், சில வண்ணங்களாலான ஒட்டுகளும் போதும் ஒரு மேய்ப்பவனின் வறுமையைக் காண்பிக்க. ஆறு ஆடுகள் வைத்திருக்கிறார். அந்த ஆடுகள் கட்டுப்பாடற்று ஓடுகையில் எல்லாம் கட்டுப்படுத்த அவைகளுக்கும் அவருக்கும் தொடர்பாய் எந்த கயிறும் இல்லை. மாற்றாக அந்த குடைக்கம்பியும் அதட்டும் அவருடைய குரலும் தான். எப்பொழுது வேண்டுமானாலும் மழை வரும் அந்த நண்பகலுக்கு முந்தைய நேரத்தில் அனேகமாய் ஒரு நல்ல மேய்ச்சல் நிலத்தைத் தேடி அவர்கள் செல்லலாம். சாத்தியப்பட்ட , பழக்கப்பட்ட அந்த மேய்ச்சல் நிலம் அனேகமாய் அவர்களுக்குத் தொலைவில் இருக்கலாம். இவர்களைக் கடந்த ஒரு கிலோமீட்டருக்கெல்லாம் என் இருசக்கரவாகனத்தை நிறுத்தும்படியாய் மழை குறுக்கிடுகிறது. துளிகள் விழாத அந்த கூரையின் கீழ் நிற்க, அதன் எதிர்புறத்தில் ஒரு கனரக இயந்திரம் மேய்ச்சல் நிலத்தை வீடு கட்ட ஏதுவாய் கற்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது அந்த ஆடுகள் துள்ளிக்குதித்து ஓடி வருவது ஏதோ ஒரு துளி விழுந்த கண்ணுக்கு அவை தள்ளாடி தள்ளாடி வருவது போல் திட்டு திட்டாய் தெரிய ஆரம்பித்தத

நியாபகம்

அந்த பறவை சிலிர்த்துக்கொண்டு துணையின் கழுத்தில் அலகைத் தோய்க்க லாவகமாயிரண்டும் உன்னை நியாபகப்படுத்துகின்றன- நீ பறவைகளைப் பார்ப்பதேயில்லையா?

நீ

தனிமை கடற்கரை மழை எல்லாம் ஏதுவாயிருக்கிறது- நீயற்றதைத் தவிர!
பனி விழும் இவ்விரவு- மன்றாடல்களைப் போர்த்தியதாய் வலி தோல்வி காரணங்களாலான துதித்தலில் தலை மறை ஆடையுடன் ஒளிந்து செல்லும் சகக் கர்த்தனைக் காணாது வெறும் மெழுகு எரிக்கும்!

பலூன்

இறையொளி வேண்டி விழியேந்தும் பிரார்த்தனைகளின் மத்தியில் வாசல் தாங்கும் பலூனைப் பார்த்தபடியாய் சிறுமியொருத்தி! பலூன் இறைத்தூதன்!
எழுந்து பார்க்கையில் ஆகச் சிறந்த கருணையை எதிர்நோக்கி கரம் கூப்பியிருக்கும் ஒரு சடலம்

நீ

கைகளுக்குள் கடல் எல்லாம் அன்பு பெயர் மட்டும் 'நீ'

டெடி

ஊசி மருந்து இடுகையில் அழும் குழந்தையைத் தூக்கிச் செல்கிறாள் அம்மா- பின்னால் டெடி யும் விரைகிறது தகப்பன் தோளில்!

கிறிஸ்துமஸ்

அந்த வீடு அவ்வளவு அலங்காரமாயிருக்கிறது! தோரண மின்விளக்குகள்! காற்றிலாடி ஒலிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா மணிக்கொத்துகள்! நட்சத்திரம் சூழ் வண்ணக் காகித உருளை விளக்கு! ஆட்டுப் பதுமைகள் பாரக்கும் குடில்! சுவாரஸ்யம்- நீயிராத வீட்டில் உனைத் தேடுதல்!
மழைக்கு முந்தைய விகசிப்பும் பிந்தைய ஈரமுமாய் இருந்ததுன் குறுஞ்செய்தி!
ஏதாவதொரு தூரத்தில் நெருங்கிக்கொண்டிருக்கும் என் நெருக்கம்! 3/9/14
ஏதாவதொரு தூரத்தில் நெருங்கிக்கொண்டிருக்கும் என் நெருக்கம்! 3/9/14
எல்லாமும் ஆகிய பின் ஏதொனுமொன்றை விடுத்துவிடுகிறது ஏதுமாகாமல்! 3/9/14

இருப்பு

நீயில்லாது நீயே விடுத்துச்சென்ற ஏதோ ஒன்றும்.. நீயிருந்தத் தருணங்களின் நியாபகச் சருகுகளில் வேட்கைத் தீ மூட்டிக்கொண்ட அசரீரியும்.... தொடரட்டுமென்ற என் நிழலற்றுழலும் உன் நிழலுமென இருக்கும் எல்லாவற்றிலும் உனை இருத்தி நீ மட்டுமில்லாமல் இருத்தல் இருப்பு எனப் பெயரோ.... 4/9/14
பிரிவதற்கு முன் பிரயோகிக்கும் மௌனங்களில் நீ அழகு.. 9/9/14
உன் ஒற்றை நீள முடி அவ்வளவு பாரம் நீ தோள் சாய்ந்ததை நினைவுபடுத்துகையில்.... 9/9/14
திரும்பிப் பார்த்திருந்தால் இந்தப் பிரிவு உணரப்பட்டிருக்காது...

பிரி

எதையாவது சொல்லிவிட்டுத்தான் பிரியவேண்டும் என்பது உன் ப்ரியம்... மறுமுறை சந்தித்தலும் அது பிரசவிக்கும் ரணமும் விருப்பமற்று நீ விரும்பியதை முயற்சித்துக்கொண்டே இருக்கிறாய் பகிர்வதற்கு.... அடர்த்தியான மௌனங்களை இலகுவாய் உதிர்க்குமுன் விழிகளில் தெரிகிறது பிரிவிற்கான நெடி... எதிலுமே முரண்படாத எதிர்பார்ப்புகள் முரண்பட்டு நிற்கின்றன இன்னொரு பிரிதலைத் தரும் சந்திப்பு அழகானதல்ல என்று இன்னும் விலகமுடியாமல் நிற்கிறது விலகுவதற்காக விழுந்த உன் நிழலும் எதையாவது சொல்லிவிட்டுப் பிரிய ப்ரியமுடன்.....
எந்தத் திசையில் இருக்கிறது உன்னைக் காட்டும் திசை... 9/9/14
ஸ்ட்ராபெர்ரி என்கிறேன் ஏதோ மூலிகை வாசமென்கிறாய்- குழப்பம் வேண்டாம் மறுபடி சுவைக்கலாமுன் உதட்டுச்சாய சுவையை! 11/9/14
தாகம் தீர்ந்து போனது- தீயெரிய ஆரம்பித்திருக்கிறது. 11/9/14
எதெல்லாம் பிடிக்குமெனப் பட்டியல் வைத்துள்ளேன்- பட்டியலின் பெயர்- நீ! 11/9/14
இனி இப்படி ஏதும் நிகழப்போவதில்லை என்றபடியாய் ஒரு முத்தம்- முற்றும்! 11/9/14
இந்தப் பேருந்து அந்தக் குழந்தை பயணமே சேய் சேமம்! 11/9/14

ஊ..ஊ..

எதை எதையோ வரைந்து " ஊ . .ஊ" என்கிறது அந்தக் குழந்தை- இந்தக் கவிதையின் தலைப்பு கூட " ஊ. .ஊ" 11/9/14
ஆட்டுக்குட்டிகளை எல்லாம் நாய் குட்டிகளாய்க் கூறிவிட்டு எனைப் பார்க்கிறது அந்தக் குழந்தை- ஆகச் சிறந்த வரத்திற்காய் நான்! 11/9/14
குரஙகிற்குத் தீனி போடத் துணிகிறது அந்தக் குழந்தை குரங்காதல் தவம்! 11/9/14

கனா...

அது ஒரு கடுமையான மணல் தேசமாயிருந்தது.... எண்ணிக்கைகள் பல வைத்துத் தேடிக்கொண்டாலும் கிட்டாத புவியின் திறந்த மார்பு அத்தேசம்... தாபசுரத்துடன் அலைந்தலைந்து தவழ்ந்தழும் யாத்ரீகங்களுக்கான அருகதையற்ற தேசமது.... அது ஒரு கடுமையான வனத் தேசமாயிருந்தது.... அரவங்களை விரும்பாத அமைதியை மாத்திரம் இரைச்சலாய் உற்பத்தி செய்யும் வனாந்திரத்தின் தேசமது.... நோக்குங் கண்களற்று பச்சைய உதிரிகள் செறிந்து வீழும் உதிர்வன தேசம் தான் அது..... அது ஒரு கடுமையான வார்த்தைகளின் தேசமாயிருந்தது..... சொல்லும் சொல்லும் புணர்கையில் குருதி கொட்டும் வாய் தேசத்தின் எச்சமது.... மெய் முழுதும் அமிலந்தெறிக்கும் மெய்யற்ற எழுத்து கொண்ட சொல்லாலான தேசம்...... அது ஒரு கடுமையான வாழ்வியலின் தேசமாயிருந்தது.... வெற்றுப் புன்னகைக்கான நிழலுழல்தலையே வாடிக்கையாக்கிக் கொள்ளும் வாழ்வற்றத் தேசம் தான் அது..... தொலைதலும் தொலைதலின் நிமித்தமும் ஆகச் சிறந்த தொலைந்த தேசமாய்த்தானிருந்தது அந்தக் கனவில்.....
கதறியழ ஓடிக்கொண்டிருக்கிறான் முப்படை வீரனொருவன் அந்தகாரத்தில்..... 14/9/14
ஏதேனும் மாற்று இருப்பின் என்னிலிருந்து எனை விடுவி.... 14/9/14
தாகங்களைத் தீர்க்க சதா வேண்டிக்கொள்ளும் ஒரு பட்சியின் இறகடி உந்தம்- மீள்தல்! 15/9/14
மிகக் கள்ளமாய் ஊர்ந்து என் ஆள்காட்டிவிரலைத் தொட்டுவிட்டோடும் உன் சுண்டுவிரலின் ஏக்கம் அலாதி.....! 15/9/14
அவ்வளவு நேர காததிருத்தலுக்குப் பின் வெறுமையுடன் நகர்ந்திருந்த அந்த இடத்தை ஓரிலை உதிர்ந்து நிரப்புகிறது மற்றொரு காத்திருப்பாய்! 22/9/14
முழுமையாய் எரிந்து முடித்திருந்த மெழுகுவர்த்தியில் காத்திருத்தலின் கடைசிக் கண்ணீர் படர்ந்திருந்தது! 22/9/14
எல்லா வார்த்தைகளும் தயார் - எது நம்மை நாமாக்கும்!
ஒரு கைகுலுக்கல் ஒரு புன்னகை சிறு முத்தம்- இல்லாவிடில் ஒரு கனவாவது!
குளத்து நீரைத் தொடாது வீசப்பட்ட கல் அக்கரையை களங்கச் செய்தது!
எத்தனை முறை திரும்பிப் பார்த்தாலும் இந்தப் பிரிவு வலியே!
எல்லாவற்றிற்கும் மேலாக அளவளாவுதலற்று வாழ்தலை கற்பித்துப் போ!
திரும்பிப் பார்த்தப் பிறகுதான் தெரிகிறது அசரீரியும் நீயென்று!
ஓர் ஆளுகை ஒரு களவு குறைந்தபட்சம் ஒரு மீட்டெடுத்தல் ஏதேனுமொன்றிலாவது என்னை அபகரி!
தினம் தினம் துளிர்க்கிறது ஏக்கங்களைச் சாகடிக்கும் ஒரு மரணம்!
மிச்சத்தையும் கொடுக்கிறேன்- களவாடலில் முழுமை காட்டு!
நாய்க்குட்டியின் கழுத்து ஒரு மயில்தோகை குழந்தையின் முத்தம் மற்றும் நீ
மயிலின் வலியை வருடத் தந்தது அந்தத் தோகை
அவசரவசரமாய் கர்த்தன்களைத் தயாரித்திடல் வேண்டும்- சிலுவைகள் தயார்
இந்தச் சாம்பலுக்கு கங்குகளே அதிகம் உன் வார்த்தைகள் எதற்கு!
இனியும் வியாபிக்கும் இரவும் 'நீ' என்பதன் பொருளும்!
ஒவ்வொரு குறுஞ்செய்தியும் ஒரு மழை...
நெருங்கத் துடிக்கும் ஒவ்வொரு கணமும் தூரமாகிறதுன் விகசிப்பு! தாகமறியும் நதி நீ - கரை உடை
எதையாவதொன்றை எழுதிக்கொண்டே இருக்கிறது- நீ விடுத்துச்சென்ற இறுதிச்சொல்
தாங்கிப் பிடித்த மழையின் கடைசித் துளி உன் சொல்லாயிருந்தது!
எதிர்கொள்ளப் போகும் இவ்விரவுகள் உன் சொற்களாலாகட்டும்!
முத்தங்களை எழுதியாவது அனுப்பு- சொல் உயிராகட்டும்!
எத்தனையாவது முத்தத்தில் அது முத்தமாகவே இருந்தது!
ஆகச் சிறந்த பிரிவின் சூத்திரம் பிரிவின் மொழியை மொழியாதிருத்தல்!
கைகளைப் பற்றிக் கெண்டு தோளில் சாய்ந்து கொண்டு கண் கண் எதிர் பார்த்து இதற்காகவேனும் ஓர் இரவு செய்- முழுதாய் அழ!
ஒன்றுக்கொன்று பேசிக்கொள்கையில் டெடிகள் குழந்தைகளை சொந்தம் கொண்டாடுகின்றன!
விழுந்ததெல்லாம் சொற்கள்- நனைந்தது மழை!
நீயாய் வந்து சமைத்துப் போன அந்த இரவை செரிக்க செரிக்கத் தின்கிறது இந்த இருட்டு! இந்தக் காத்திருப்பும் வரப்போகுமுன் குறுஞ்செய்தியும் ஏக்கத்தின் நீட்சிகள்! அழகாய்த்தான் இருக்கிறது- அருகருகே இருந்தாலும் தூரம் காட்டுமுன் நெருக்கம்!  
குழந்தையாகவே இருத்தல் உத்தமம் - டெடி பொம்மையாயிருத்தல் அதனினும் உத்தமம்!
எல்லா வரிகளும் எழுதப்பட்டன. உன் பெயர் சூட்டுகையில் பொய்யெல்லாம் மாண்டிருந்தன!
நண்பகல் நேரம் கொஞ்சமான பசி நிறைய தாகம் இரண்டிற்கும் நீ
வறட்சியின் நீட்சி யாதெனின் இப்பொழுதும் நீயற்றதாயிருத்தல்!
ஆகச் சிறந்த தொலைதல் உன் விழி பார்த்தல்!
ஒன்று இரண்டு மூன்றென பின்னோக்கி நகரும் மரங்களை எண்ணிக்கொண்டிருக்கும் அந்தப் பயணக்குழந்தைக்கு அடுத்த வருடம்- இந்த எண்ணிக்கையை தரப்போவது எது? இப்பொழுது விரவிக்கொண்டிருக்கும் பசியை ஒரு துளி நீர் தௌித்தாவது ஆற்றிவிடவேண்டும். இல்லையெனில் அது உன்னையவே தின்றுவிடக்கேட்கும. எதையாவதொன்றை பிடித்துக்கொண்டு எப்படியாவது வளர்ந்து விடுகிறது அந்தத் தாவரம். மனிதனுக்குத்தான் அது சாபக்கேடு!  
கசக்கி எறிந்த பிறகும் அந்தக் காகிதம் உனக்காக எழுதப்பட்ட கவிதையாகவே இருந்தது!
அது ஒரு பேருந்துபயணம். அடுத்த இருக்கையில் அமர்ந்தவர் விற்பனைத்துறையில் மேலாளராயிருக்க வேண்டும். யாருக்கோ அலைபேசியில் தொடர்புகொள்கிறார். வண்டி வந்துவிட்டதா எனக்கேட்கிறார். இல்லை என பதில் வந்திருக்க வேண்டும். தான் விசாரித்துவிட்டு அழைப்பதாக அழைப்பைத் துண்டிக்கிறார். அலைபேசியில் மற்றொரு எண்ணைத் தேடித் துழாவி அழைக்கிறார். வண்டியின் ஓட்டுனரின் அலைபேசி எண்ணைக் கேட்கிறார். அந்த முனையில் எண் குறுஞ்செய்தியாக அனுப்புவதாகச் சொல்லியிரருக்கவேண்டும். அந்த அழைப்பைத் துண்டிப்பதற்குள் முதலாவத ாக அவர் அழைத்த அனேகமாக அவர் வாடிக்கையாளராக இருத்தல் வேண்டும் அங்கிருந்து மறுபடியும் அழைப்பு வருகிறது. ஓட்டுனரின் எண்ணைக் கேட்டிருப்பதாகவும் பேசிவிட்டு அழைப்பதாகவும் துண்டித்துவிட்டு அலைபேசியையே பார்க்கிறார். அதற்குள் ஓர் அழைப்பு வருகிறது, மிகவும் சாந்தமாக பேச ஆரம்பிக்கிறார். வந்துகொண்டிருப்பதாகவும் இரவு உணவுக்காக காத்திருக்காதே சாப்பிட்டு விடு எனச் சொல்லிவிட்டு பாப்பா சாப்பிட்டாளா எனக் கேட்கும் தருவாயில் தொடர்பு எல்லைக்கு வௌியில் இவர் வந்திருக்கவேண்டும் ஏனென்றால் அந்தக் கேள்வியை இரண்டுமுறை கேட்டா
ஒரு யானையை அழைத்துச் செல்கிறான் பாகன் ஒருவன்.  வேகமாய் நடக்கச் சொல்லி தன் கையிலிருந்த மூன்று பிரம்புக்குச்சிகளை ஒன்று சேர்த்து அதன் பாதத்தில் அடிக்கிறான். அடி விழுந்த அந்த பாத நகர்தல் மட்டும் திணறி அடுத்த முறையில் யானை வேகமாக நகர்கிறது. யானையாயினும் வலி வலியே. எப்பொழுதும் மனிதன் பலம் தெரிந்து மோதுகின்றான்.மனிதன் தவிர இயற்கையும் இயற்கைசார் மற்றவைகளும் பலத்தை அடிக்கடி பிரயோகிப்பதில்லை. பிரயோகிக்கையில் அது பிரவாகமாய்த் தானிருக்கும்

கனவில்

படம்
அது ஒரு கடுமையான மணல் தேசமாயிருந்தது.... எண்ணிக்கைகள் பல வைத்துத் தேடிக்கொண்டாலும் கிட்டாத புவியின் திறந்த மார்பு அத்தேசம்... தாபசுரத்துடன் அலைந்தலைந்து தவழ்ந்தழும் யாத்ரீகங்களுக்கான அருகதையற்ற தேசமது.... அது ஒரு கடுமையான வனத் தேசமாயிருந்தது.... அரவங்களை விரும்பாத அமைதியை மாத்திரம் இரைச்சலாய் உற்பத்தி செய்யும் வனாந்திரத்தின் தேசமது.... நோக்குங் கண்களற்று பச்சைய உதிரிகள் செறிந்து வீழும் உதிர்வன தேசம் தான் அது..... அது ஒரு கடுமையான வார்த்தைகளின் தேசமாயிருந்தது..... சொல்லும் சொல்லும் புணர்கையில் குருதி கொட்டும் வாய் தேசத்தின் எச்சமது.... மெய் முழுதும் அமிலந்தெறிக்கும் மெய்யற்ற எழுத்து கொண்ட சொல்லாலான தேசம்...... அது ஒரு கடுமையான வாழ்வியலின் தேசமாயிருந்தது.... வெற்றுப் புன்னகைக்கான நிழலுதலையே வாடிக்கையாக்கிக் கொள்ளும் வாழ்வற்றத் தேசம் தான் அது..... தொலைதலும் தொலைதலின் நிமித்தமும் ஆகச் சிறந்த தொலைந்த தேசமாய்த்தானிருந்தது அந்தக் கனவில்.....

க்ர்ர்ர்ர்....க்ர்ர்ர்ர்......

இந்த கட்டுரைக்கு முன்னுரை ஏற்புரைலாம் இல்லங்க.... ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வர்றேன். மதுரை டூ கொடைக்காணலுக்கு காரில் போனது தான் இந்த கட்டுரை. இதுல என்ன பிரமாதம் னு கேக்குறீங்களா.. காரை நானே தான ஓட்டிட்டு போனேன்... இதுல என்ன இருக்குனு சொல்வீங்களே.....(உங்களுக்கு கார் ஓட்டத்தெரியும் ...அதுனால ஈஸியா கேப்பீங்க....) நான் தான் இதுவரைக்கும் மலையில ஓட்டுனதே இல்லையே.... சரிப்பா...மலைல தான் ஓட்டுனது இல்ல...சமதள பகுதில ஓட்டிருப்பேல...னு கேப்பீங்களே....(கேக்கணும்...0 ஓட்டலாம்...ஆனா என்ட்ட தான் காரே இல்லையே...அப்புறம் எப்படி ஓட்டுறது.... எப்புடி.....அல்லைய புடிக்குதா....பயப்படாம கொடைக்காணலுக்கு போலாம்... வாங்க... கி.பி. 2009ம் ஆண்டே நான் கார் டிரைவிங்லாம் போயி லைசென்ஸ் வாங்கிட்டேன். இருந்தாலும் ஓட்டிக்கொண்டே இருந்தாத்தான பயிற்சி ஆகும். நண்பர்களின் கார் கிடைக்கும்பொழுது அவர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்லும்பொழுது நானே ஓட்டி போயிருக்கேன். எனக்கு இந்த கார் ஓட்டுறதுல பயம் நகரத்துக்குள்ள டிராபிக்ல ஓட்டுறதுதான். டிரைவிங் பயிற்சி போனப்ப என்னத்தடா படிச்சனு கேக்காதீங்க....அரைமணி நேரம் தான் நமக

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

கல்லூரியில் படிக்கையில் நடந்த நிகழ்வுகளும் அதை நினைப்பதும் பெரிய வரம். ஒவ்வொரு ஆசிரியர்களும் ஒரு விதம். physical chemistry ஆச்ரியர் t.k. ஜெனார்த்தனன் சார். பாடம் நடத்துறதே வித்தியாசமா இருக்கும். பல்லைக் கடித்து சொல்வது போலிருக்கும். குட்டையாயிருப்பார். சிவப்பாயிருப்பார். சாதுவான குணம். அவரது குரல் மெலியதாயிருக்கும். அந்தக் குரலில் பஞ்ச் பேசுனா எப்படியிருக்கும் அப்படி. அவர் பாடம் நடத்துற அழகே அந்தக் குரல் அந்த தொனி.ஒருமுறை ஒரு சாதித்தலைவர் கார் விபத்தில் இறந்தார். அது நடந்த இடம் அவர் வீடு அருகே. ஒரு லாரியும் காரும் மோதிய விபத்து. அடுத்த நாளில் ஜெனார்த்தனன் சார் எங்களுக்கு எப்படி பாடம் நடத்துவாரோ அப்படியே அந்த விபத்தை சக ஆசிரியர்களுக்கு விவரித்தார். இப்பொழுது வரும்  கேப்பிட்டல் ஆங்கிலத்தை பல்லைக் கடித்து வாசித்துப் பார்க்கவும் ( that LOrry Came FRom that side, this FEllOE's car came from this side....big TERRIFIC  bombarded...) இதைத்தான் அவர் சொன்னார். அங்கு சென்ற என் காதுகளுக்கு அவர் பாடம் நடத்தியது தான் கேட்டது ( THat atom comes FRom that orbit and Another ATom comes from opposi

ப்ரியமுடன்

எதையாவது சொல்லிவிட்டுத்தான் பிரியவேண்டும் என்பது உன் ப்ரியம்... மறுமுறை சந்தித்தலும் அது பிரசவிக்கும் ரணமும் விருப்பமற்று நீ விரும்பியதை முயற்சித்துக்கொண்டே இருக்கிறாய் பகிர்வதற்கு.... அடர்த்தியான மௌனங்களை இலகுவாய் உதிர்க்குமுன் விழிகளில் தெரிகிறது பிரிவிற்கான நெடி... எதிலுமே முரண்படாத எதிர்பார்ப்புகள் முரண்பட்டு நிற்கின்றன இன்னொரு பிரிதலைத் தரும் சந்திப்பு அழகானதல்ல என்று இன்னும் விலகமுடியாமல் நிற்கிறது விலகுவதற்காக விழுந்த உன் நிழலும் எதையாவது சொல்லிவிட்டுப் பிரிய ப்ரியமுடன்.....

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 3

ஒரே மாதிரியான விசயத்தை தொடர் கட்டுரையாக எழுத முயலும்பொழுது அது சம்பந்தப்பட்ட மற்ற நினைவுகளும் எழுகின்றன. ஆசிரியர்கள் பற்றி எழுத முயலும்பொழுது பால்ய நினைவுகளும் எழுகின்றன. சில குறும்புத்தனமான நிகழ்வுகளும் எழுகின்றன. அதைப் பற்றி இன்னொரு கட்டுரை கூட எழுத ஆரம்பிக்கலாம் போல. நான் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கு திவ்யானந்தம் என்றொரு ஆசிரியர் வந்தார். அவரது வகுப்பு வித்தியாசமாக இருக்கும். அவர் நாற்காலியில் அமர்ந்துகொள்வார். புத்தகத்தை விரித்துக்கொள்வார். படிக்க ஆரம்பிப்பார். கதை போல் இருக்கும். கதை போல் சொல்வார். யாராவது பேசினால், நீ வந்து அடுத்த வருசம் கார்ப்பரேசன் பள்ளிக்கூடத்தில் தான் சேருவ....அஙதான் நடத்தமாட்டாங... இப்ப்டி ஒரு சாபம் கொடுப்பார். கார்ப்பரேசன் பள்ளியில் சேந்தா ஒழுக்கம் போயிரும் வாழ்க்கை போயிரும் நு அவர் சொல்லும் பொழுது - இந்த அன்னியன் படத்துல விக்ரமின் சிறுவன் கதாபாத்திரத்திற்கு அவனது பாட்டி கருட புராணத்தைப் பற்றி சொல்லும்பொழுது அச்சிறுவனுக்கு ஒரு zoom கொடுப்பார்கள். அதுபோல் தான் எனக்கும் கொடுத்தார்கள். அது மனதில் பதிந்துவிட்டது. நான்

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 2

அதுவரை 5 வருடங்கள் ஆரம்பப் பள்ளியில் படித்துவிட்டு 6ம் வகுப்பிற்கு ஒரு மேனிலைப்பள்ளி உள் வருவது ஒரு பதட்டமானச் சூழ்நிலையாகவே எனக்கு இருந்தது. ஒரு நுழைவுத்தேர்வு வைத்துத்தான் எடுப்பார்கள் என்பதால் 5ம் வகுப்பு முழுஆண்டுத் தேர்வு விடுமுறை எப்படி இருந்திருக்கும். அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம், அண்ணன் ஒரு பக்கம். அண்ணன் அதே பள்ளியில் 10ம் வகுப்பு நுழைய இருந்தான். ஒரு வழியாய் 6ம் வகுப்பு நுழைந்தேன். பெரிய பள்ளிக்கூடம். குறிப்பாய் பழைய பள்ளிக்கூடம் போல் இல்லாமல் மைதானம் இருக்கிறது. விளையாட்டுப் பாடம் உள்ளது. நல்லொழுக்கம் வகுப்பு இருக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர். அது எனக்குப் புதிது. பழைய பள்ளியில் 5 வருடங்கள் 5 ஆசிரியைகள். இப்பொழுது அப்படியல்ல.. அது ஒரு  கிறித்தவ பள்ளி. பாதி ஆசிரியர்களின் பெயர்கள் ஆங்கில வடிவமாகவே இருந்தன. அதைச் சொல்வதில் எனக்குப் பெருமையாயிருந்தது. 6ம் வகுப்பு க்ளாஸ் டீச்சர் பீட்டர். ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல். கணக்குப் பாடம் ஞானப்பிரகாசம். முதல் இடைத் தேர்வில் நான் கணக்குப் பாடம் பெயில். 32 மார்க். அப்பொழுதெல்லாம் விடைத்தாளைக் கையில் கொடுத்

என்னை வளர்த்த ஆசிரியர்கள்..

ஒரு முறை தர தரவென இழுத்துக்கொண்டு போனது நியாபகம் இருக்கிறது. I A க்ளாஸ். லூரிமேரி டீச்சர். கையைப் பிடித்துக்கொண்டு அமர வைத்தது நியாபகம் இருக்கிறது.  பிறகு ஏதோ ஒரு நாள் மழை பெய்த மாலை. நான் தான் கடைசி வரிசை. ஓட்டுக்கட்டிடம். மழை வழிந்து என் முதுகு முழுதும் ஈரம். டீச்சர் என்னை அழைத்து கரும்பலகைக்கு அருகில் அமரவைத்தது நியாபகம் இருக்கிறது. புது வீடு வாங்குவதற்கு எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டைப் பார்க்க வந்தபொழுது எங்கள் அம்மா அவர்களையும் அவர்களது கணவரையும் வீட்டிற்கு அழைத்த நியாபகம்.  அவர் என்னை அழைத்து மடியில் அமர வைத்துக்கொண்டார். டீச்சர் மடியில் உட்காரலாமா....வா என்று அப்பா என்னை அதட்டினார். இரண்டாம் வகுப்பு காந்திமதி டீச்சர். நான் படித்தது மதுரை கரிமேடு மார்க்கெட் பகுதியிலுள்ள மதுரை முத்து ஆரம்பப்பள்ளி. தரையில் தான் அமர வேண்டும். ஓட்டுக் கட்டிடம் பாதி பள்ளிக்கூடம். காந்திமதி டீச்சர் எங்களுக்குள் குறுக்கே சென்று தான் கரும்பலகை அருகே வர முடியும். அப்படி ஒருமுறை வரும்பொழுது என் கையை மிதித்து விட்டார். பயந்து கொண்டு நான் கத்தக் கூட வில்லை. திடீரென காந்திமதி

மனக்குதிரை

மாதத்தின் முதல் நாள் பிறந்தாகிவிட்டது. சென்ற மாதத்தின் சேல்ஸ் க்ளோஸ் முடிந்தபாடில்லை. ஆகஸ்ட் 30ம் தேதி சனிக்கிழமை 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகிவிட்டது. ஆதலால் 1ம் தேதி திங்கள்கிழமை காலையிலிருந்து பரபரப்பு. இன்று சேல்ஸ் க்ளோஸ் பண்ணியாகவேண்டும். ஆனால் ஆர்டர் கொடுக்கவில்லை. இப்படித்தான் விடிந்தது. ஏறத்தாழ காலை 6 மணி. எவ்வளவு வேலைகள் யார் யாருக்குப் பேச வேண்டும்.  என்ன என்ன பேச வேண்டும். செப்டம்பர் பிறந்தும் ஆகஸ்ட் மாத சேல்ஸா....முடித்தாக வேண்டும். உடன்வேலை பார்க்கும் சகப்பணியாளர் 5 பேருக்கும் அழைக்க வேண்டும். ஆர்டரை 3 மணிக்குள் அலுவலகத்திற்குள் கொடுக்க வேண்டும். அவற்றையெல்லாம் 6 மணிக்குள் பில் அடித்துவிட்டு சாயங்காலம் பணிக்குத் திரும்ப வேண்டும். மணி காலை 6.30. யாரும் எழுந்திருப்பார்களா... இப்பொழுதே பேசிவிடலாமா... காலையிலேயே மேனேஜர் கூப்பிட்டுவிட்டார் என அலுத்துவிடுவார்கள் தானே....வேண்டாம்...கொஞ்சம் பொறுத்திருந்து அழைப்போம்....என மனக்குதிரை பொறுத்திருந்தது. மணி காலை 7.20  கைகள் துறுதுறுவென இருந்தன. அழைக்க ஆரம்பித்தேன். எப்பொழுது ஆர்டர் கொடுப்ப? எப்ப ஆபிஸுக்கு வருவ....

டிவி ய ஆப் பண்ணுங்க பாஸ்

சில நாட்களுக்கு முன் என்டிடிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. மருந்து விற்பனை பிரதிநிதியும் , மருத்துவர்களும் பேசுவதாக அந்தக் காட்சியில் இருந்தது. சில தினங்களுக்கு முன் விஜய் டிவியில் மருத்துவர்களைச் சாடி கோபிநாத் பேசியதும் ஒரு லிங்க் ஆக முகநூலில் பரவி வருகிறது. இதுவரை இப்படி எந்த பேரங்களும் நடக்காதபடியும் இப்பொழுதுதான் அது நடப்பது போலவும் சமூகத்தில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அடுத்ததாக மருத்துவத்துறையைத் தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் எல்லாம் நேர்மையாகவும் உண்மையாகவும் நடப்பது போலவும், இங்கு மட்டும் இப்படி வியாபாரம் நடப்பது போலவும் மக்கள் புருவங்களைத் தூக்குவது வீணான உணர்ச்சி வெளிப்பாடு. மீடியாக்கள் எப்பொழுதெல்லாம் தங்கள் கையில் சுவாரசியமான விசயங்கள் இல்லையோ அப்பொழுது எல்லாம் இப்படி மருத்துவத்துறை மருத்துவர்கள் மருந்துகள் மருந்து கம்பெனிகள் என கை வைக்கும். காரணம் என்ன வேறு துறையிலிருக்கும் மக்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கடைசி 5 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். வங்கி வர்த்தகம், கட்டுமான வர்த்தகம், வாகன வர்த்தகம், எரிபொருள் வர்த்

இப்படியிருக்கத் தேவையில்லை....

இந்த இரவு இப்படியிருக்கத் தேவையில்லை.... ஒரு நெடிய பகலை அதிலிருந்த ஓர் அமில மழையை நினைவுறுத்திய படி கருமையாயிருக்கும் இந்த இரவு இப்படியிருக்கத் தேவையில்லை.... தானாயிழப்பதற்குள் கருச்சிதைவிற்குள்ளான வானவில்லின் பிரேத நெடி வீசும் இருட்டிரவு இப்படியிருக்கத் தேவையில்லை..... பாரமற்ற ஒற்றை வார்த்தையின் பாரம் தாளாதுத் துவண்ட முன்னொருகாலத்து அந்தகாரக் கண்ணீரைப் பருகத் துடிக்கும் இன்றைய இரவு இப்படியிருக்கத் தேவையில்லை..... விடிவதற்கு முன் ஏதோ ஒன்றைத் துறக்கத் துணியாதிருக்கும் இவ்விழிகளினிரவு இப்படியிருக்கத் தேவையில்லை.....  

கிருஷ்ணா.......

அப்பொழுது நான் தூத்துக்குடியில் இருந்தேன். மதுரையிலிருக்கும் பெருமாள் மேஸ்திரி வீதிகள் போல் அங்கும் உண்டு. குறுகலாய், நெரிசலாய், மனிதன் ஆடு மாடு நாய்க்குட்டிகள் குழந்தைகள் சகிதமாய் அங்கும் அப்படியே. என்னுடன் பணிபுரியும் பணியாளர் இரு சக்கர வாகனம் ஓட்ட நான் பின்னே அமர இருவரும் அத்தெருவிற்குள் சென்றோம். குறுகலான சாலை எப்படியென்றால் ஒரே நேரத்தில் இரு கார்கள் மிக நெருக்கமாகத்தான் கடந்து செல்ல முடியும். ட்ரை சைக்கிள்கள், ஷேர் ஆட்டோக்கள் என அவ்வளவும் அத்தெருவை நிறைத்திருந்தன. ஒரு பசு மாடு...நல்லப் பெரிய பசுமாடு. பழுப்பு நிறம் மற்றும் வெள்ளை நிறம் கலந்த பசு மாடு. எங்களுக்கு முன்னே நடக்கிறது. வயிறு நன்றாக வீங்கியிருக்கிறது. அதன் பால் தரும் மடி பெரியதாய் வீங்கியிருக்கிறது. மிகவும் கீழிறங்கி வீங்கி அதன் பின்னங்கால்களின் இடுக்குகளில் உரசி உரசி அந்த மாடு நடக்கிறது. போக்குவரத்து விதிகளின் படி இடது பக்கம் தான் செல்ல வேண்டும் என்பதுலாம் அந்த மாட்டுக்குத் தெரியாது . வலப்பக்கமாய் சென்றுகொண்டிருந்தது. மாட்டின் இடதுபக்கம் எல்லா இருசக்கர வாகனங்களும் சென்றன். இப்பொழுது எதிரே ஒரு கார் வந்தது

நிறுவு 4

பொதுவாக ரிலையன்ஸ் அல்லது பிக் பஸார் போன்ற டிபார்ட்மெண்ட் கடைகளுக்குச் செல்லுகையில் ஒரு ரூபாய் குறைவாகக் கிடைக்கிறதா என்று பார்க்கிறோம். ஆனால் கடை வீதிகளில் நாமே மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்து கடைகளுக்குச் சென்றோமேயானால் அதை விடக் குறைவாக வியாபாரிகள் தருவார்கள். நேரமின்மை, அலைச்சல் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நானும் கூட சில பொருட்களை இப்படிப்பட்ட டிபார்ட்மெண்ட் கடைகளில் வாங்குவதுண்டு. ஆனால காய்கறிகளை மட்டும் மார்க்கெட்டில் அல்லது உழவர் சந்தையில் வாங்குவதுண்டு. விவசாயிகள்நேரடியாக பயன்பெறட்டும் என நினைப்பதுண்டு. காலையில் உழவர் சந்தைக்குச் சென்று காய்கறி வாங்கச் சென்றேன். சில விசயங்கள் புரிவதில்லை. பீட்ரூட் 20 ரூபாய் என்றார். எனக்குக் கால் கிலோ போதுமென்றேன். கொடுத்தார். பிறகு பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு வாங்கிவிட்டு எவ்வளவு என்றேன். அந்தந்த காய் கூடைகளைப் பார்த்து மனப்பாடமாய் கணக்குச் சொன்னார். 68 என்றார். அவர் பீட்ரூட்டைப் பார்த்துச் சொல்லும்பொழுது மட்டும் 20ஐ கூட்டினார். பீட்ரூட் எவ்வளவு என்றென். 20 என்றார். கால் கிலோவா என்றேன். ஓ...10 தான் என்று மீதி பத்து ரூபா கொடுத்தார். வெண
வலியென்றும் வரையறை வைத்துக்கொளவதில்லை! ஆனந்தச் சிரிப்பிற்குள் இமை இடறிவிடும் சிறு துகளை விழிகள் விலக்கவியலாமல் கலங்கி இயங்குதல் வரையறையில்லா வலி!

முத்தம்

முத்தம் தரமுடியாத் தருணங்களில் எல்லாம் முத்தம் என்றாவது சொல்லிவிட்டுப் போ...!

வாழ்த்து

இன்று காலை அதே உணர்வு. பள்ளியில் படிக்கும்பொழுது பிறந்தநாளன்று சீருடை அணியத்தேவையில்லை. புத்தாடை அணிந்து கொள்ளலாம் என்று காலையில் சீக்கிரம் எழுந்து ஒரு விதமான உற்சாகத்துடன் இருப்போமே அப்படி. ஒரு குழந்தைக்குப் புத்தாடையோ, நண்பர்களோ, அந்த பிறந்தநாளோ அப்படிப்பட்ட உணர்வு , காலம் செல்லச்செல்ல பொறுப்புகள் கூட கூட பிற்காலத்தில் வருவதில்லை. ஆனால் அதே உணர்வு மறுபடியும் நண்பர்களின் வாழ்த்துகளால். வாழ்த்துதல் எவ்வளவு உன்னதமான காரியம் என்பது தெரிகிறது. பறத்தலில் ஒரு முக்கிய அறிவியல் சூத்திரம், இறக்கைகளுக்கு அடியில் கொடுக்கப்படும் சிறிய அளவிலான உந்தம். கொஞ்சம் பறக்கின்றேன். மறுபடியும் குழந்தையாதல் அனைவருக்கும் விருப்பமுள்ள ஒன்றே. நான் ஆகியிருக்கின்றேன். தினசரி கடக்கும் வெகுச் சாதாரண நாளாய் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும்,  என்னுலகில் உலவிக் கொண்டிருக்கும் இந்நாளுக்குள் உட்புகுந்து எனக்காய் சில புன்னகைகளையும் சில வார்த்தைகளையும் விடுவித்துச் செல்லுதல் கலைந்து செல்லும் மேகங்கள் போல் இல்லை அவை. ஒவ்வொருவரின் மனத்துக்குள் மகிழ்ச்சியை மலராய் தூவிடலாம். நிகழ்ந்திருப்பதாய் நான் நம்புவது -

யாதெனின்

இவற்றுக்குப் பின்னும் தெரிவிப்பது யாதெனின்.... வலியினும் வலியதான உன்னூடலின் சுமை சுமையானதென.... விருப்புக்கப்பாற்பட்டு விலகவியலும் உன் அன்பின் ஈரம் காயாதிருக்குமென... வனாந்திரங்கள் நீயற்றுப்போய் என்னை வெறுப்பதென... தேடிக்களைத்து ஒடிந்த சிறகுகளின் நெடி கொண்ட பட்டாம்பூச்சியென... ஆகிக்கொண்டே இருக்கும் ரஸவாதத்தின் உச்சபட்சம் நான் நானற்றுப்போதல்.... சாபங்களுக்குள்ளாகிக் கிடக்கும் இக்கவிதை முடியட்டும் நீயாய்...!

கல்

கல் என்றால் பாறாங்கல் இல்லை. கல் என்றால் படி. நான் சொல்லப்போறது எல்லா மொழியும் படி. எவனோ சொல்றானேனு ஹிந்திய படிக்க மாட்டேன்...நான் தமிழ்நாட்டுக்காரன் அப்படி இப்படி னு முட்டாத்தனமா பேசக்கூடாது. (நான் என்னைய சொன்னேன்....) இப்படி மனசுல பட்டத கொஞ்சம் நீளமா எழுதுனா எப்படி இருக்கும். தமிழினத் துரோகி னு எவனாவது சண்டைக்கு வருவானா....(பொழுது போகும்ல.....) பல விமர்சனங்கள் வரும். வரட்டும் கமெண்ட் வரும். வரட்டும் அவனுக அப்படி பேசிக்கிட்டு இருக்குறப்ப நான் பேஸ்புக்க மூடிட்டு வேலைக்குப் போயிருப்பேன். விசயத்துக்கு வருவோம். ஹிந்திய படிக்கக்கூடாது னு ஒரு புத்திசாலி கூட்டம் மறுபடியும் எந்திருச்சுருக்கு. அடப் பதர்களா...இன்னுமாடா....னு என் மனச்சாட்சி கேக்குது. என் மனச்சாட்சிக்கிட்ட நானே பேசிக்கிட்டேன்.இவனுக ஹிந்திய வேணாம் னு சொல்லக் காரணம் என்ன  1. உண்மையிலேயே தமிழ் பற்றா இருக்குமோ....( பற்றுல வள்ளுவர ஓவர்டேக் பண்ணிருவானுகளோ)  2. 6ம் வகுப்பு படிக்கிறதுல இருந்து தமிழத் தவிர வேற எதுவும் தெரியாதோ.... 3. இங்கிலீஸ் பாடத்துல பெயில் ஆகிருப்பானுகளோ.... 4. இப்ப வேற வேலை இல்லாம சும்மா டைம்

மாமனார் வீடு

நான் என்னமோ தப்புத்தண்டா பண்ணி மாமியார் வீட்டுக்கு அதாங்க ஜெயிலுக்குப் போயிட்டு வந்துருக்கேனு நினைக்காதீங்க. இந்த பதிவு உண்மையிலேயே என் மனைவின் அப்பா அம்மா வீடு  என்பதையே குறிக்கும். எங்கள் குலதெய்வம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாச மலையிலுள்ளது. அங்கு வருடத்திற்கு ஒரு முறை வேன் பிடித்து நண்பர்களுடனும் உறவினர்களுடனும் போய் வருவது வழக்கம். ஆனால் அதே ஊரில் பெண் கிடைத்ததும் அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வேனில் முடியுமா முடியாது. பஸ் அல்லது புகைவண்டி தான். நமக்கு இந்த ட்ரெயின் னாலே அலர்ஜிங்க...முதன்முறையாக நான் ட்ரெயின்ல போனது வேலைக்கு வந்து ஒரு முறை கம்பெனி மீட்டிங்க் என அழைத்தார்கள். ஒரு புண்ணியவான் சென்னைக்கு நான் அழைத்துச்செல்கிறேன் என்று சொல்லி முதன்முதலாக மதுரை டூ சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏற்றிச் சென்றான் பாருங்க...லக்கேஜ் வைக்கிற பெர்த்தில் ஏறி உட்கார்ந்தோம்....4 பேரு....கால மடக்கி......ரமணா படத்துல கட்டிடம் இடிந்து சிம்ரனும் அவ மகளும் எரிந்து அப்படியே சாம்பலா சிலையா இருப்பாங்கள....அப்படி உக்காந்துருந்தேன்.....தாம்ப்ரம் சொன்னப்பின்னாடி தான் கால விரிச

கொழுப்பு

மாரடைப்பு ஒரு மரணத்தை விழுங்கியிருக்கிறது. மாரடைப்பு என்பது என்ன... அதிலிருந்து தப்பிக்க வழி என்ன... இதெல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். தெரியாமலிருந்தாலும் இனிமேலாவது மருத்துவரைச் சந்தித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இருந்தாலு சில எளிய முறைகள் உள்ளன. உங்கள் உயரம் என்ன... உங்கள் எடை என்ன... உயரத்திற்கேற்ற எடை இருக்கிறதா.... உதாரணத்திற்கு உங்கள் உயரம் 165 செமீ. என வைத்துக்கொள்வோம். உங்கள் எடை 65கிலோவில்ருந்து 68 இருக்கலாம். இது தான் மிகச்சரியான ஆரோக்கியமான சமநிலை. இல்ல....அவ்வளவு மெலிஞ்சுட்டா..நல்லாருக்காது...பாக்குறவங்க நம்மள பாத்து " என்னப்பா இப்படி மெலிஞ்சுட்ட னு சொல்றது கஷ்டமாருக்கு" இப்படிலாம் பேசுனீங்கனா...நீங்க நெஞ்ச பிடிச்சு உட்காருறப்ப எவனும் கூட வரமாட்டான். (இது என் பஞ்ச்) இப்பொழுது 30 வயதுகாரர்களுக்குக் கூட சர்க்கரை வியாதி, மாரடைப்பு வருகிறது. முதலில் உடல்நிலையைப் பொறுத்தவரை நாம் எப்படி யிருக்கிறோம் என்பதை முதலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். உடல் எடை உயரத்திற்கேற்றவாறில்லாம் கூடுதலாக இருந்தால் லிபிட் டெஸ்ட் எடுத்துப் பார்க்கவேண்டும். அதாவது கொழுப்பு. உடல்