மதுரை ஊரடங்கு 24/4/20
மதுரையில் ஊரடங்கு அமல்படுத்தும்போது மக்கள் அதிகம் இரு சக்கர வாகனத்தில் வெளியில் வருகிறார்கள் என்பது உண்மை.
மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுப்பது சரி.
ஆனால் சொல்லிவைத்தாற் போல் பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் அத்தியாவசியத் தேவை என அனுமதி வாங்கியிருப்பவர்களையே காவல்துறை நடவடிக்கைக்கு உட்படுத்தியது.
இதில் qr கோட் பிரச்சினை வேறு.
இது மாவட்ட நிர்வாகம் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது. மதுரையில் சமூகப் பரவல் வந்ததனால் இந்த அழுத்தமா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
qr கோட் வழங்குவதில் இந்தக் குழப்பம் தேவையற்றது.
ஏற்கனவே பாஸ் வழங்கியவர்களின் லிஸ்ட் கையில் இருக்கும். அவர்களுக்கு qr கோட் மெயிலில் அனுப்பலாம்.
மருந்து போன்ற அத்தியாவசியத்திற்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறை இருக்கிறது. அவர்களை அழைத்து எத்தனை பேர் ட்ரக் லைசென்ஸ் வச்சிருக்கான். அதுல எத்தன பேர் ஹோல் சேல் சப்ளையர் இருக்கான். அவன்க்கு பாஸ் வேணுமானு கேட்டு அந்தத் துறை மூலமா கொடுக்கலாம். கூட்டத்தைப் பிரிக்கலாம்.
அத்தியாவசியத்தேவைனு ஒரு குறிப்பிட்ட qr கொடுத்தாலும் சரி, தனித்தனியாக் கொடுத்தாலும் சரி.
இதைச் சொல்வதற்குக் கூடவா ஆள் இல்லை. அப்படியும் மீறி இது போன்ற அசிங்கங்கள் நடப்பது நிர்வாகச்சீர்கேட்டைத்தான் காண்பிக்கிறது.
ஆரம்பத்திலிருந்தே ஊரடங்கின் சட்டதிட்டங்களைச் சொல்லி மதுரை மாவட்டக்காவல்துறை அத்தியாவசிய சப்ளைகளைத் தடுத்து நிறுத்தியது. மதுரை மாவட்ட மருந்து வணிகர் சங்கம் தலையிட்டு மாவட்ட ஆட்சியரை நேராகப் பார்த்தும் பேசியது. மாவட்ட ஆட்சியரும் மருந்து சப்ளைக்கு அனுமதி அளித்திருக்கிறார்.
இருந்தாலும் கீழ்மட்டத்தில் இருக்கும் காவல் துறை அதிகாரிகள் என்ன சப்ளை என்ன அனுமதி என்று கூடப் பார்க்காமல் அபராதம் விதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். நேற்றையக் குழப்பத்தின் விளைவாக மதுரையில் சில மருந்து மொத்த விற்பனைக்கடைகள் இன்று இயங்கவில்லை. பாஸ் எடுக்க என்று சிலர் விடுமுறை. வேலைக்கு வரவில்லை.
மருந்து சப்ளை இன்று தடைபட்டுள்ளது.
கடைகளைத் திறந்துவைத்தால் தான், பாஸ் வைத்திருந்தாலும் போலிஸ் அடிக்கிறது, போலிஸ் அபராதம் போடுகிறது என்று நஷ்டப்படவேண்டும்.
கடையைப் பூட்டிவிட்டால் உயிரோடு இருப்பது லாபம்.
##systemfailsatmaduari
பழனிக்குமார், மதுரை,
24/04/2020
கருத்துகள்
கருத்துரையிடுக