தேநீர் கோப்பை

ஒரு சேரக்
கைகளை
ஆறத்
தழுவலாம்..
எதிரெதிர்
அமர்கையில்
ஒரு தேநீர்
வரும் நேரம்வரை
பார்வைப்
பருகலாம்..
தூரம்
குறையும்படியான
எல்லா
இத்யாதிகளையும்
முன்னெடுக்கலாம்...
உரசிக்கொண்டு
பரிமாறப்படும்
தேநீர் குடுவைகள்
உன்னென்
தூரமென்க...
உனக்கான
ஒன்றை
நானும்
எனக்கானதை
நீயுமென
குடுவைகள்
பகிரப்படும்...
உன்னிதழ்
சேரும்
முதல் மிடறு
தேநீர்
அன்பிலுய்யும்
மாமழையெனல்
சராசரிக் கவிதை...
வெற்றுக்கோப்பை
நிரம்பி
முடிகிறது
உன்னைப் பருகி....

ஒரு
தேநீர்கோப்பையால்
சாத்தியப்படுகிறது
பகிரப்படாத
வார்த்தைகளைச்
சொட்டிக்கொள்ள....

23/12/15

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....