கொரோனாவும் மருந்து சப்ளையும்

ஹரியானாவிலிருந்து எனக்கு வரவேண்டிய மருந்து பொருள் மார்ச் 18ம்தேதி அங்கு அனுப்பப்பட்டாலும், ஆறு நாட்களுக்குள் வந்துவிடவேண்டும் என எதிர்பார்த்தது 24 ம் தேதி சென்னைக்கு வர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

நாடு முழுக்க கொரோனோ தொற்று பரவ மருந்துகளின் அத்தியாவசியத்தைக் கருத்தில்கொண்டு மருந்து உற்பத்தியாளர் சங்கம் மற்றும் மற்ற மருந்து சேவை புரிவோர்களின் முயற்ச்சியில் மருந்து தயாரிப்பும், மருந்துகளை அனுப்பும் சரக்குப் போக்குவரத்தையும் அனுமதிக்கக்கோரி வேண்டுகோள் விடுத்தனர்.

நேற்று வரை எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதற்கிடையில் இந்திய தபால்துறையை இந்தச் சேவை புரிய அனுமதித்திருப்பதாக ஒரு வாட்சப் செய்தி.எந்தளவு அவர்கள் மூலமாக இது நடைபெறும் என்றோ, ஏற்கனவே தேங்கிகிடக்கும் consignments எப்பொழுது நகரும் என்ற நம்பிக்கை தரும் செய்திகள் வரவில்லை.

இதற்கிடையில் dtdc கொரியர் நிறுவனம் முக்கியமான அத்தியாவசியப் பொருள் என்றால் புக் செய்கிறோம் என்று தன் இணையதளத்தில் செய்தியை ஃப்ளாஷ் செய்தது. அதாவது இனி ஏதாவது அனுப்பவேண்டும் என்றால் அதன் முக்கியத்துவம் , இன்வாய்ஸ், மற்றும் எடை இவற்றைப் பொருத்து அவர்கள் புக் செய்வார்கள்.
அவர்களைத் தொடர்புகொண்டு எனக்கு வரவேண்டிய மருந்துப்பொருளிற்கான டாக்குமெண்டுகளைச் சொல்லி அது எப்போது டெலிவரி கிடைக்கும் எனக் கேட்க , ஆறுதலாக அதற்கான முயற்சி எடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

மருந்துப் பொருட்கள் , ஜனவரி பிப்ரவரி மார்ச் போன்ற நிதியாண்டின் கடைசி காலாண்டில் ஓரளவிற்கு மருந்து மொத்த விற்பனையாளர்களிடம் வந்து சேரும் மாதங்கள். குறிப்பாக மார்ச். மார்ச் கடைசியில் ஊரடங்கு நிகழ்ந்தேறியிருப்பதால் 24 க்கு முன் அனுப்பப்பட்ட மருந்துகள் ஆங்காங்கே தேங்கியிருக்கின்றன.
மேலும் மருந்து தயாரிப்பிற்கான பைன்டிங்க் மெட்டேரியல்ஸ் , காகிதங்கள் அட்டைப்பெட்டிகள் முதற்கொண்டு எல்லாம் சேர்ந்து தான் ஒரு மருந்து உருப்பெறக் காரணம். அவையெல்லாம் அனுப்பப்படாமல் இருக்கலாம்.

அரசும் அந்தத் துறையினரும் போர்க்கால நடவடிக்கையாக இதில் தேங்குதல் ஏற்படாமல் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டிய காலகட்டம் ஊரடங்கிற்கு முந்தைய நாள்.
எடுக்கவில்லை. விட்டுவிடுங்கள்.

இப்பொழுது அமெரிக்கா , இந்தியாவை ஹைட் ராக்ஸி க்ளோரோ க்யினோனை ஏற்றுமதி செய்துவிடு எனப் பணிக்க, இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு ஏற்றுமதிக்கு இருந்தத் தடையை ரத்து செய்துள்ளோம்.

வெளி நாட்டிற்கு மருந்தை அனுப்புவது இருக்கட்டும். உள் நாட்டிற்குள் மருந்துகளின் சப்ளை தெள்ளத்தெளிவாய் நகரலாம் என்ற நம்பிக்கையை அதன் c & f (carrying and forwarding ) ஏஜெண்டுகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் முக்கியமாகச் சரக்கு வாகன நிறுவனங்களின் சங்கங்களுக்கும், கொரியர் கம்பெனிகளுக்கும் தந்துவிட்டீர்களா பிரதமரே.....

பழனிக்குமார்
07/04/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8