பூ தொடுத்தல்

"தொடாதீர்கள்;
அருகில் தும்மாதீர்கள்"
என்கிறார்கள்.

"ஒரு அடி விட்டு
நில்லுங்கள்;
வீட்டிற்குள்ளேயே
தங்குங்கள்" என
ஒலிப்பெருக்கி வைத்து
கொட்டாவி விடும்
வசனங்கள் ஒலிபரப்புகிறார்கள்..

இது எதுவும்
புரிபடாத
தங்கம் ஆச்சிக்கு
"பூ" வரத்துக்
குறைந்த கவலை.

"பூ தொடுத்தல்"
தங்கம் ஆச்சிக்கு
வியாபாரம் அல்ல...
அது ஒரு
"பசி போக்கல்";
தன்னையே
சுற்றிச்சுற்றி வரும்
நாய்க்குட்டிக்கு-அது
"கொஞ்சம் பாலும்,
ரொட்டித்துண்டுகளும்".

சமூகம்
வழங்க மறுக்கும்
இளம் கைம்பெண்ணுக்குக்
கூடுதலாக
ஓர் இணுக்கு
பூ தொடுத்தல்-
அவ்வளவே...

10/5/2020
22.18

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

இது தம்மு...இது ரம்மு....