உன் பெயரில் ஒரு மிடறு


உன் பெயரில் ஒரு மிடறு



இப்படித்தான்
அசாத்தியப்படுமென்ற
பிரக்ஞைகள் அற்ற
ஒருவனின் தருணங்களில்

கடைசியாக
முத்தமிட்டுப் பிரியும்
பிரிவுபச்சார நொடியில்
விரசமற்ற
நெற்றிமுத்தமொன்றை
அவிழ்த்திருக்கலாம்...
மணிக்கட்டைப் பிடித்தபடி
வெறுமனே கண்களைப்
பார்க்கும்
வைபவம் நிகழ்த்தியிருக்கலாம்...
இன்னுமொரு காப்பி
இன்னுமொரு மதிய உணவு
இன்னுமொருபயணமென
இன்னுமொருமுறை
வாழ்தலை
உன்பெயரின் நீட்சியாய்
விகசித்திருக்கலாம்.
சற்று நேரத்தில்
கலைந்துவிடுவதாய்
வளைந்துகொடுத்த
வானவில்லின் தடம்
பிடித்தலையும்
நினைவுக்குருவியின்
வண்ணரீங்காரமாய்
அந்தி சாய
அனுமதித்திருக்கலாம்....
கலைந்து கிடந்த
ஆடைகளை
ஒழுங்குபடுத்தி
எங்கும் வியாபிக்கப்போகும்
வாசனையின்
ஆதிப்புள்ளியில்
சற்று அயர்ந்தபடி
இளைப்பாறியிருக்கலாம்..
வாழ்தலின்பொருட்டு
நிரம்பிவழியும்படியான
கனவுக்குவளைகளில்
இப்படித்தான்
அசாத்தியப்படுமென்ற
பிரக்ஞைகளற்ற
ஒருவனின் தருணங்கள்
உன் பெயரால்
ஒரு மிடறாகவுமிருக்கலாம்....

02/03/20
23.20


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....