உங்களைப்போல் ஒருவர்
உங்களைப் போல்
ஒருவர்தான்
விலாசம் சொன்னதும்
மிக வாஞ்சையாக
விடை பெறுகிறார்.
ஒருவர்தான்
விலாசம் சொன்னதும்
மிக வாஞ்சையாக
விடை பெறுகிறார்.
உங்களைப் போல்
ஒருவர் தான்
உணவு விடுதியில்
எனக்குப் பிடிக்கும்
எனத் தெரியாமலேயே
கூடுதலாக
ஒரு சிட்டிகை
முள்ளங்கிச் சாம்பார்
இட்டுவிட்டு
கண்ணடிக்கிறார்...
ஒருவர் தான்
உணவு விடுதியில்
எனக்குப் பிடிக்கும்
எனத் தெரியாமலேயே
கூடுதலாக
ஒரு சிட்டிகை
முள்ளங்கிச் சாம்பார்
இட்டுவிட்டு
கண்ணடிக்கிறார்...
உங்களைப் போல்
ஒருவர்தான்
சில்லரைகளை
என்னிடமிருந்து
நடத்துனருக்குக் கடத்தி
பயணச் சீட்டைத்
தருவதற்கு முன்னே
ப்ரியமாய் சிரிக்கிறார்...
ஒருவர்தான்
சில்லரைகளை
என்னிடமிருந்து
நடத்துனருக்குக் கடத்தி
பயணச் சீட்டைத்
தருவதற்கு முன்னே
ப்ரியமாய் சிரிக்கிறார்...
உங்களைப் போல்
ஒருவர்தான்
வங்கியில் பேனாவைக்
கேட்பதற்கு முன்
ஒரு குழந்தையைப் போல்
தயங்குகிறார்...
ஒருவர்தான்
வங்கியில் பேனாவைக்
கேட்பதற்கு முன்
ஒரு குழந்தையைப் போல்
தயங்குகிறார்...
ஒன்று மட்டும்தான்
பிடிபடவே இல்லை..
நீங்கள் மட்டும்தான்
என்னிடம்
உங்களைப் போலவே
இல்லை.
பிடிபடவே இல்லை..
நீங்கள் மட்டும்தான்
என்னிடம்
உங்களைப் போலவே
இல்லை.
27/12/18
கருத்துகள்
கருத்துரையிடுக