கண்ணே கலைமானே

ஜேசுதாஸின்
குரலில் தான்
'கண்ணே கலைமானே'
என்றபடி ஒரு
மௌனத்தின் பிரவாகத்தில்
நெருங்கியிருந்தேன்..
அந்திப்பகல் உன்னைப்
பார்ப்பதையும்
ஆண்டவனிடம் அதைக்
கேட்பதையும் கூட
அவரும் அப்படியேதான்
மொழிபெயர்த்திருந்தார்...
வார்த்தைகளற்றவனின்
அமைதியையும்
ஏதுமற்றவனின்
அமைதியையும்..
கிளிப்பேடுகளின் பாரத்தையும்
இழக்க எத்தனிக்காத
ஒருவனின் மன்றாடலாகவே
ஜேசுதாஸ் உருமாற்றியிருந்தார்..
காதல் கொண்டதையும்
கனவை வளர்த்ததையும்
ப்ரியங்களில் நான்
உயிரானதைப் போலவே
எந்நாளும் எனை நீ
மறவாதே என
இறைஞ்சுகையில்
ஜேசுதாஸ்
என் குரலில் பாடுவதாகவே
கேட்கிறது...
நீயில்லாமல் எது
நிம்மதியெனச்
சொல்கையில் மட்டும்
குரல்களுக்கப்பாலான
உணர்வெளியில் யாரோ
ஒருவர் அழுவதாய்
தெரிகிறது...

ஒவ்வொருவருக்குமான
'கண்ணே கலைமானே'க்களில்
ஜேசுதாஸ்கள் அழுகிறார்கள்...

25/05/2020
21.20






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8