ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்
கொஞ்சம்
விலகியே நில்லுங்கள்!
உங்கள் புன்னகை
எங்களுக்குத்
தேவையில்லை.
உங்கள் பெயருக்கு
முன்னால்
"மேட்டிமை பொருந்திய" என
எதுவும் இல்லாத
உங்களின் புன்னகை
எங்களுக்குத்
தேவையில்லை.
ஏனெனில் நாங்கள்
"ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்"
நீங்கள்
அப்பழுக்கற்ற
பார்வையுடனும்
மிருதுவான
அன்புடனுமே
சதா எங்களைப்
பார்த்துக்கொண்டிருக்கிறீர்...
"கிரீடங்கள்" அணியாத
பார்வைகளை
நாங்கள் பார்ப்பதே
இல்லை...
பிறிதொருவரின்
கூடாரத்தில் நுழையும்
வாதைகளைக் கண்டுப்
பதறும்
மென்மனத்துக்காரர்களாக
இருக்கிறீர்கள்....
நாங்கள்
வெறும் கூடாரங்களின்
திசைகளில்
அருவருப்பை உமிழ்பவர்கள்
ஏனெனில் நாங்கள்
"ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்".
"மேட்டிமை பொருந்திய"
இன்னாரென
யாரை அழைத்தாலும்
புன்னகைத்து
தங்கள்பால் சிறிது
வெளிச்சப்பிச்சைக்
கேட்கும்
"வெளிச்சவாதி" களின்
கைகளைப் பற்றி
நீங்கள்
செய்யப்போவதென்ன....
இல்லாதவர்களை
அரவணைத்துக்கொண்டு
எதிர்பார்ப்பற்ற
பிரியங்களைச் செலுத்தும்
உங்களின் விலாசங்கள்
எங்களுக்குத்
தேவையில்லை...
பெருந்திரள் நடுவே
தலை குனிந்து
"சலாம்வாசி"கள் நிற்க
மன துஷ்ப்ரயோக உலா
தருகிறோம்...
எப்பொழுதும் போல
கொஞ்சம் விலகியபடியே
வேடிக்கை பாருங்கள்.
"ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்"களுடன்
புகைப்படம் எடுக்க
வரிசையில் நில்லுங்கள்....
கையொப்பம் பெற
கொஞ்சம்
சமூக இடைவெளி
போற்றுங்கள்...
எங்கள் வெளிச்சங்களை
இன்னொருவர் பிரயோகிக்க
நாங்கள்
அனுமதிப்பதில்லை.
வெளிச்சங்களின் மீது
எங்களுக்கிருக்கும்
பெரும் வியாதி
உங்களுக்குப்
புரியப்போவதில்லை...
எந்த வெளிச்சமும்
எங்களுக்குத் தராத
உங்கள் புன்னகையும்
உங்கள் கேள்விகளும்
நேர்மையின் கண்களும்
புறக்கணிக்கத்தான்
இருக்கின்றன...
ஆகப்பெருங் கருணையென
கூட்டத்தில் என்றாவது
புன்னகைத்தால்
வாங்கிச் சேமியுங்கள்...
ஏனெனில் நாங்கள்
"ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்"
எங்களின் வீதிகளில்
நீங்கள்
தாராளமாகச் செல்லலாம்..
எவரேனும் உங்களிடம்
எங்களின் பெயரை
வினவி
எங்கள் விலாசம்
கேட்பார்கள்...
"ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்"களின்
முகவரிகளைத் தெரிந்து
வைத்திருக்கிறீர் தானே....
வெளிச்சப் பிச்சை
அளிக்கும்
"மகாகனம்"பொருந்தியவர்களின்
கைகளில்
ஒரு நாய்குட்டியைப் போலக்
குழையும்
எங்களின் முகங்களில்
அப்போதைக்கு மட்டும்
கழுதைப்புலித்தனம்
பரவவிடுவோம்
ஏனெனில் நாங்கள்
"ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்"
விலகியே நில்லுங்கள்!
உங்கள் புன்னகை
எங்களுக்குத்
தேவையில்லை.
உங்கள் பெயருக்கு
முன்னால்
"மேட்டிமை பொருந்திய" என
எதுவும் இல்லாத
உங்களின் புன்னகை
எங்களுக்குத்
தேவையில்லை.
ஏனெனில் நாங்கள்
"ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்"
நீங்கள்
அப்பழுக்கற்ற
பார்வையுடனும்
மிருதுவான
அன்புடனுமே
சதா எங்களைப்
பார்த்துக்கொண்டிருக்கிறீர்...
"கிரீடங்கள்" அணியாத
பார்வைகளை
நாங்கள் பார்ப்பதே
இல்லை...
பிறிதொருவரின்
கூடாரத்தில் நுழையும்
வாதைகளைக் கண்டுப்
பதறும்
மென்மனத்துக்காரர்களாக
இருக்கிறீர்கள்....
நாங்கள்
வெறும் கூடாரங்களின்
திசைகளில்
அருவருப்பை உமிழ்பவர்கள்
ஏனெனில் நாங்கள்
"ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்".
"மேட்டிமை பொருந்திய"
இன்னாரென
யாரை அழைத்தாலும்
புன்னகைத்து
தங்கள்பால் சிறிது
வெளிச்சப்பிச்சைக்
கேட்கும்
"வெளிச்சவாதி" களின்
கைகளைப் பற்றி
நீங்கள்
செய்யப்போவதென்ன....
இல்லாதவர்களை
அரவணைத்துக்கொண்டு
எதிர்பார்ப்பற்ற
பிரியங்களைச் செலுத்தும்
உங்களின் விலாசங்கள்
எங்களுக்குத்
தேவையில்லை...
பெருந்திரள் நடுவே
தலை குனிந்து
"சலாம்வாசி"கள் நிற்க
மன துஷ்ப்ரயோக உலா
தருகிறோம்...
எப்பொழுதும் போல
கொஞ்சம் விலகியபடியே
வேடிக்கை பாருங்கள்.
"ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்"களுடன்
புகைப்படம் எடுக்க
வரிசையில் நில்லுங்கள்....
கையொப்பம் பெற
கொஞ்சம்
சமூக இடைவெளி
போற்றுங்கள்...
எங்கள் வெளிச்சங்களை
இன்னொருவர் பிரயோகிக்க
நாங்கள்
அனுமதிப்பதில்லை.
வெளிச்சங்களின் மீது
எங்களுக்கிருக்கும்
பெரும் வியாதி
உங்களுக்குப்
புரியப்போவதில்லை...
எந்த வெளிச்சமும்
எங்களுக்குத் தராத
உங்கள் புன்னகையும்
உங்கள் கேள்விகளும்
நேர்மையின் கண்களும்
புறக்கணிக்கத்தான்
இருக்கின்றன...
ஆகப்பெருங் கருணையென
கூட்டத்தில் என்றாவது
புன்னகைத்தால்
வாங்கிச் சேமியுங்கள்...
ஏனெனில் நாங்கள்
"ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்"
எங்களின் வீதிகளில்
நீங்கள்
தாராளமாகச் செல்லலாம்..
எவரேனும் உங்களிடம்
எங்களின் பெயரை
வினவி
எங்கள் விலாசம்
கேட்பார்கள்...
"ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்"களின்
முகவரிகளைத் தெரிந்து
வைத்திருக்கிறீர் தானே....
வெளிச்சப் பிச்சை
அளிக்கும்
"மகாகனம்"பொருந்தியவர்களின்
கைகளில்
ஒரு நாய்குட்டியைப் போலக்
குழையும்
எங்களின் முகங்களில்
அப்போதைக்கு மட்டும்
கழுதைப்புலித்தனம்
பரவவிடுவோம்
ஏனெனில் நாங்கள்
"ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்"
2/5/20
23.45
கருத்துகள்
கருத்துரையிடுக