கொரோனாவும் க்வாரண்டைனும்..

கொரோனோ நோயாளி இருக்கும் கண்காணிக்கப்படும் வளையப் பகுதிக்குள் இருக்கிறேன். வெளியே செல்ல அனுமதி இல்லை.
வெளியிலிருந்து இந்தப் பகுதிக்குள் யாரும் வரமுடியாது.
எங்கள் பகுதிக்கு வரும் மூன்று வழிகளை மறித்து காவல்துறை தேசியப் பேரிடர் மேலாண்மை துறை மாநகராட்சி ஊழியர் என ஷிஃப்ட் டில் இயங்குகிறார்கள்.

ஒரு வாலண்டியரை நியமித்திருக்கிறார்கள். அவரது எண்ணை அனைத்து வீடுகளுக்கும் தந்துவிட்டார்கள்.
அவசரத் தேவை அத்தியாவசியத்தேவை என்றாலும் அவரை அழைக்கலாம்.
காலையில் மாநகராட்சி தன்னார்வலர்களின் காய்கறி பழங்கள் வண்டி வருகிறது.
தோட்டத்துறை காய்கறி வண்டி வருகிறது. அவர்களே பலசரக்கு தேவை என்றால் அழையுங்கள். மறுநாள் கொண்டுவருகிறோம் என்கிறார்கள்.
காய்கறி வண்டியில் எல்லாத் திசைகளிலும் மாடிவீடுகளையும் பார்த்தபடி வருகிறார்கள். மக்களை வாசலுக்குக் கூட வரவேண்டாம் என அவர்களே வந்து தருகிறார்கள்.
மினரல் வாட்டர் லாரி தண்ணீர் லாரி குறிப்பிட்ட சில வண்டிகள் மட்டும் அனுமதி.
குப்பை வண்டி வந்தால் மைக்கில் கூறுகிறார்கள்.
அவ்வப்போது கொரோனோ விழிப்புணர்வு ஆடியோ ஓடுகிறது.
நாம் நோய்க்கு எதிராகப் போராடுகிறோமே தவிர நோயாளிக்கு எதிராக இல்லை என்றும்
மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காகத் தான் ஊரடங்கில் இருக்கிறார்கள். பயப்படத்தேவையில்லை போன்ற வாசகங்கள் சொல்கிறார்கள்.
பால்பாக்கெட் வாங்க வந்தவர்களைப் பார்த்து முதியவர்கள் வரவேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள்.
துப்புரவுத்துறைப் பணியாளர்கள் உயிரைக் கொடுக்கிறார்கள்.
ப்ளிச்சீங் பவுடர் தினமும் தெளிக்கிறார்கள்.
கிருமிநாசினி தெளிக்கிறார்கள்.
இத்தனையும் தினம் நடக்கிறது. காவல்துறை சுகாதாரத்துறை துப்புரவுத்துறை அட்டகாசமாகப் பணிபுரிகிறார்கள். இது எல்லாம் அரசின் கடமை என்றாலும் இப்பொழுது அரசு இதைச் செய்கிறது என்பதும் நோய்தொற்றிலிருந்து மக்களைக் காக்க அரசு இந்தப் பகுதியில் முனையத்தான் செய்கிறது. ஆனால் வெளிநாடு மூலம் வந்தக் கிருமி என்பதால் ஆகாயவிமானத்தைக்கூடப் பார்த்திராத மக்களைத் துன்புறுத்துவதற்கும் அரசே காரணம் என்பதை மறுக்கமுடியாது.

கையில் காசு இருந்தால் இருந்தபடியே அனைத்தையும் வரவழைத்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம். அதுவரை சரி.
யாரும் வேலைக்குச் செல்ல அனுமதியில்லை.

வேலைக்குப் போனால்தான் காசு என்பவர்களை நோய்க்கிருமி தொற்றிக்கொள்ளாமலேயே தாக்குகிறது.

பழனிக்குமார்,
மதுரை
19/04/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....