கொரோனாவும் எதார்த்தமும்..
சில அடிப்படை விசயங்களை இப்ப பேசுறது நல்லாருக்காதுதான். இருந்தாலும் ரீ-கால் பண்ணிக்கலாம்.
முதல் விசயம் : ஹை ட்ராக்ஸிக்ளோரோ க்யினோன் என்ற மருந்து கொரானாக்குக் கண்டுபிடித்தாகிவிட்டது என்றும், அதனுடன் காம்பினேசனாக அசித்ரோமைசின் சேர்த்துக்கொடுத்து நோய்க்கான மருந்தாக இந்திய டாக்டர்கள் கண்டுபிடித்துவிட்டதாகவும், ட்ரம்ப் அதை அறிவித்துவிட்டதாகவும் ஒருவாட்சப்செய்தி வருகிறது.
கொரானாவிற்கு இப்படி மாத்திரைகள்லாம் கண்டுபிடிக்கமுடியுமா என்று தெரியவில்லை. வந்தால் தடுப்பூசி தான் வரும்.
அவர்கள் சொன்ன ஹை ட்ராக்ஸி க்ளோரோக்யினோன் மற்றும் அசித்ரோமைசின் ஓரளவிற்கு பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும். அதாவது கொரானா உங்கள் உடம்பில் புகுந்தால் சளி பிடிக்கவைக்கும்.
இந்த ஹ ட்ராக்ஸி க்ளோரோ க்யினோன் அசித்ரோமைசின் காம்பினேஷன் கொடுத்தால் சளி பிடித்திருப்பதைக் குறைக்கும்.
அதாவது சளி பிடிப்பதை அல்ல சளி பிடித்திருப்பதைக் குறைக்கும். கொரானா உள்ளே செய்யும் எல்லா ரிப்பேர்களையும்அது ஓரளவிற்குத்தான் சரி செய்யும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி தான் முக்கியம். ஆதலால் இவை கொராவைத் தடுக்கும் மருந்து அல்ல.
அடுத்த விசயம்:
ஹை ட்ராக்ஸி க்ளோரோ க்யினோன் மலேரியாவிற்குக் கொடுக்கக்கூடிய ஒரு மருந்து. ஆன்ட்டி மலேரியல் ட்ரக்.
சாதாரண வைரல் காய்ச்சலுக்கும் கொடுக்கலாம் என வைத்துக்கொள்ளலாம்.
ஏன் இது புழக்கத்தில் இல்லை. அதாவது அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு மூலக்கூறாக இல்லை.
அடுத்ததாக அசித்ரோமைசின். இதுவும் இன்னும் ஐந்து வருடங்களில் புழக்கத்தில் இல்லாத மூலக்கூறாக மாறிவிடும் என்றே தோன்றுகிறது.
இவ்வளவு பெரிய நோய்க்கு பயன்படக்கூடிய இந்த மருந்துகள் ஏன் புழக்கத்தில் இருந்து மறைகின்றன என்பதை மக்கள் தான் கேட்கவேண்டும்.
காரணம், மக்களுக்கு அதிகமாய் பயன்படும் என்று அரசு இவற்றின் விலையைக் குறைத்தது.
நல்ல விசயம் தானே என்று அனைவரும் நேற்று கைதட்டியது போல் தட்டியிருப்போம்.
MRP இவ்வளவு தான் வைக்கவேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவதில் உற்பத்தியாளர்களுக்கு இருக்கும் சிக்கல் மூலப்பொருள் விலை ஏறும்பொழுது மாத்திரையின் mrp விலையை ஏற்ற அரசு அனுமதி தருவது கிடையாது. தேசம் முழுக்க விற்க வலு உள்ளவன் விற்பான்.சக்கப்போடு போடுவான். குறைந்த லாபம் அதிக டர்ன் ஓவர் என்பது அவர்கள் சூத்திரம்.
எந்த நிறுவனம் அந்த மூலக்கூறில் சக்கப்போடு போட்டு விற்று ஜாம்பவனாக இருக்கிறதோ அவன் மட்டுமே அதை விற்பான். மற்றவர்கள் லாபத்திற்குத் தொழில் செய்வார்களா இல்லை நட்டத்திற்குத் தொழில் செய்வார்களா.
தன்னால் இந்த மூலக்கூறில் லாபம் பார்க்கமுடியாது என்று கணிக்கும் புத்திசாலி நிறுவனங்கள் தன்னையும் தன்னை நம்பி வாழும் ஊழியர்களின் சம்பளத்தையும் கணக்கில்கொண்டு இந்த வகை மூலக்கூறுகளின் உற்பத்தியை நிறுத்திவைக்கும். அப்படித்தான் டி.பி (காச்நோய் மருந்துகளை) நிறுத்திவைத்திருக்கின்றன.
அவ்வப்பொழுது ஏற்படும் பற்றாக்குறை காரணமாக கொழித்த மல்டிநேஷனல் கம்பெனிகளே இன்னும் கொழிக்க ஆரம்பிக்கும்.
இன்னொரு விசயம்: ஹை ட்ராக்சி க்ளோரோ க்யினோன் கண்டுபிடித்தக்கம்பெனி தனது ஆராய்ச்சிக்கானச் செலவை அரசிடம் கேட்டிருக்காது. தன் உழைப்பை தன் மருந்துவிற்பனை பிரதிநிதிகளின் மூலமாக மருத்துவர்களைப் பயன்படுத்தி மக்களுக்குச் சென்று சேர உழைத்திருக்கும். அப்பொழுதும் கூட மருந்துக்கம்பெனிகள் லாபம் கொழிக்கின்றன என்ற பெயர் கிடைத்திருக்கும்.
இந்த நேரத்தில் பேசத் தேவையில்லை தான். ஆனால் உழைப்பவன் தன் உழைப்பிற்கேற்றபடி ஊதியம் பெற நினைப்பான.
வியாபாரம் செய்பவன் லாபம் ஈட்ட நினைப்பான்.
இப்பொழுது கூட கொரானாவிற்கு ஆராய்ச்சியில் மருந்துக்கம்பெனிகள் இறங்கியிருக்கும். உழைப்பைத் தரும்.
ஒரு புதிய கண்டுபிடிப்பாக வெளிவரும் மருந்தில் சட்டதிட்டங்களின் படியே தான் அந்த நிறுவனம் விலை வைக்கும்.
உதாரணத்திற்கு எல் அண்ட் டி நிறுவனம் ரோடு போட்டு டோல் போடுகிறது. இத்தனை வருடத்திற்கு என்று காண்ட் ராக்ட் போடுகிறது. அத்தனை வருடங்கள் வாகனங்கள் தண்டம் கட்டித்தான் ஆகவேண்டும். ரோடு போட்டதற்கு என்ன செலவு ஆகிற்று. நீ ஏன் இவ்வளவு காசு வாங்குகிறாய் எனக் கேள்வி கேட்கமுடியாது.
இங்கு வரும் தனியார் நிறுவனங்கள் சேவை செய்ய வருவதில்லை.
அப்படி மக்கள் வெகுண்டெழ வேண்டுமென்றால் ரோடு போடுவது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை தானே ஏன் அரசு நம்மிடம் பணம் வாங்குகிறது என்று கோபப்படவேண்டும்.
மருத்துவ வசதிகள் அரசு தானே செய்துதரவேண்டும். ஏன் விற்கிறது என்று கோபப்படவேண்டும்.
வாட்சப் மெசேஜ்களை நம்பிக்கொண்டு டம்ளர் தட்டுகளைத் தட்டிக்கொள்ளூம் கூத்தாடிகளாகவும்,காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் சுயநலக்காரர்களாகவும், ஊரடங்கு உத்தரவு போட்டாலும் வெளியில் நடமாடும் நோயைப் பரப்பும் விலங்கின மனிதர்களாகவும் இருக்கும்பட்சத்தில் நாம் யாரையும் கேள்வி கேட்கமுடியாது.
நேற்றைக்கு நன்றி தெரிவிக்க கை தட்டினீர்களே அந்த மருத்துவக் கூட்டத்தைத்தான் ஒருகாலத்தில் எள்ளி நகையாடியிருக்கிறீர்கள். மக்களுக்கு ஒரு வினோத மனோபாவம் இருக்கிறது. நாம் மட்டும் சுயநலக்காரர்களாக இருக்கவேண்டும். நம்மைத் தவிர்த்து அனைவரும் மனிதர்குல மாணிக்கங்களாக தியாகச்சுடராக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
இந்தப் பதிவின் நோக்கம்,
1. ஹை ட்ராக்ஸிக்ளோரோக்யினோன் அசித்ரோமைசின் கொரானாவை வீழ்த்த வந்த புது மருந்தல்ல. வாட்சப் சொல்வதையே நம்பும் மரமண்டைகளுக்குப் புரியவைக்க எழுதியது.
2. இந்த மாதிரியான தாத்தா காலத்து மருந்துகளை புழக்கத்தில் இருந்து வெளியேற்றிய அரசியல் என்னவென்று மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பது.
3. மருத்துவர்களுக்குக் கைதட்டாவிட்டாலும் பரவாயில்லை.அடங்கி உள்ளேயே இருங்கள் என்பது.
4. மருந்துக் கம்பெனிகள் டாக்டர்களுடன் டீல் போடுகிறார்கள் என்று சமோசா சாப்பிட்டுக்கொண்டு பொழுதுபோகாமல் பேசுபவர்கள், இந்நேரத்தில் கரோனாவின் ஆராய்ச்சிக்கு இந்நேரம் உழைப்பை ,தன் பொருளை, ஆவியை இழந்துகொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் அவர்களது நிறுவனத்திற்கும் காசு உங்க அப்பாரா தருகிறார் என்று கேட்பது.
வன்றி .நணக்கம்.
பழனிக்குமார்
23/03/2020
கருத்துகள்
கருத்துரையிடுக